செவ்வாய், ஏப்ரல் 18, 2006

மணிவிழா அழைப்பு


எல்லோருக்கும் வணக்கம்.
என் தந்தையாருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அனைவரும் அவ்விழாவிற்கு வருகை தரவேண்டும்.

என் தந்தையார் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள்நல்ல பேச்சாளர்
மயிலம், மேலைச்சிவபுரி ஆகிய தமிழ்க் கல்லூரிகளில் பணியாற்றியவர்
தற்போது திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முதல்வராக உள்ளார்.

அவரிடம் படித்த தமிழ் மாணவர்கள் யாராவது இம்மடலைப்பார்த்துத் தொடர்பு கொண்டால் மகிழ்வேன்

5 கருத்துகள்:

முத்துகுமரன் சொன்னது…

உங்கள் பெற்றோரின் மணி விழா இனிதே நடைபெற வாழ்த்துகளும் பிராத்தனைகளும்...

அவர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்....

நன்றி

மணியன் சொன்னது…

11/5/2006 நாளன்று நடைபெறவுள்ள உங்கள் பெற்றோர் முனைவர் பழ.முத்தப்பன், அழகம்மை முத்தப்பன் தம்பதியினரின் மணிவிழா இனிதே நடைபெறவும் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுற்றிருக்கவும் எல்லாம்வல்ல இறைவனின் திருவருளை வேண்டுகிறேன்.

palaniappan சொன்னது…

நண்பர்களே
மிக்க நன்றி
தங்களின் வாழ்த்துக்களால் எங்களின் மகிழ்ச்சி பன்மடங்காக உயர்கிறது

மு. பழனியப்பன்

துளசி கோபால் சொன்னது…

தங்கள் பெற்றோரின் மணிவிழா இனிதே நடைபெற இறைவனை வேண்டுகின்றோம்.

உடல் ஆரோக்கியம்தான் உண்மையான மகிழ்ச்சி. அது குறைவறக் கிட்டட்டும்.

பி.கு: மாடரேஷன் வந்துவிட்டதே, இன்னும் வேர்டு வெரிஃபிகேஷன் தேவையா?

ENNAR சொன்னது…

11/5/2006 நாளன்று நடைபெறவுள்ள தங்களை ஈன்ற பழ.முத்தப்பன், அழகம்மை முத்தப்பன் தம்பதியினரின் மணிவிழா இனிதே நடைபெறவும் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுற்றிருக்கவும் நான் வாழ்த்தியதை அவர்களுக்குத் தெரிவிக்கவும்
நான் திருச்சிராப்பள்ளி காரன் தான்