சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழக ஆசியவியல் துறை, கலைஞன் பதிப்பகம் ஆகியன இணைந்து செப்டம்பர் 12, 13 ஆகிய நாள்களில் 430 படைப்பாளிகளைப் பற்றிய நூல்களை வெளியிட்டன. இதில் குறிப்பாக மலேசியா நாட்டைச் சார்ந்த தமிழ்ப்படைப்பாளிகள் 80 பேர் பற்றிய நூல்கள் வெளிவந்துள்ளன. இதனை எழுதியவர்களும் படைப்பாளிகளாக ஆகினர் என்பதுதான் இதில் மேலும் சிறப்பான செய்தி. தமிழகக் கவிஞர்கள் பற்றிய தமிழ்ப்படைப்பாளிகள் எழுதிய நூல்கள் மற்றவை. இரு நாள்களும்அரங்க நிறைந்த கூட்டத்துடன் விழா. சிறப்பான ஏற்பாடுகள்.
புதுவயல் கவிஞர் பெரி. சிவனடியான் பற்றி நான் ஒரு புத்தகம்
எழுதியிருந்தேன். அதுவும் நேற்று வெளியிடப்பெற்றது. எங்கள் ஊர் சார்ந்த கவிஞர் என்பதால் எனக்கு இருக்கும் ஊர்ப்பற்று சற்றுக் கூடுதல்தான்.
புதுவயல் கவிஞர் பெரி. சிவனடியான் பற்றி நான் ஒரு புத்தகம்
எழுதியிருந்தேன். அதுவும் நேற்று வெளியிடப்பெற்றது. எங்கள் ஊர் சார்ந்த கவிஞர் என்பதால் எனக்கு இருக்கும் ஊர்ப்பற்று சற்றுக் கூடுதல்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக