ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா


அன்புடையீர்
வணக்கம்

கம்பன் புகழ் இசைத்துக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக அக்டோபர் மாதத் திருவிழா 1.10.2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு ,கிருஷ்ணா திருமண மண்டபத்தில் இசையரசி எம்.எஸ். புகழிசை பரவு நூற்றாண்டு விழாவாக காரைக்குடி கம்பன் கழத்தால் கொண்டாடப் பெறுகின்றது.

இறைவணக்கம் - செல்வி கவிதா மணிகண்டன்

இசைத் தோரணவாயில்- திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் 
அவர்கள்

இசைசேர்த் தலைமையும் எம்.எஸ். இசைத்த கம்பன் கவி அமுதம் குறுந்தகடு வெளியீடும்
திருவையாறு தமிழ்நாடுஅரசு இசைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் இராம. கௌசல்யா

இசைக்கோலம்
பத்ம பூஷண் சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் மதுரை ஸ்ரீ டி. என் சேஷகோபாலன்

நன்றியுரை பேரா. மு. பழனியப்பன்

சீர் இசை உண்டி




--------------------
2016 செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நூற்றாண்டு விழா கண்ட இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கம்பன் கழகத்திற்கு பெருங்கொடை அளித்ததோடு கம்பன் கவி அமுதம் என தனி இசை ஒலி நாடாவாகவும் வழங்கிப் பெருமை சேர்த்தமைக்கு நன்றி இசைக்கும் இனிய திருவிழா இது

கம்பன் புகழ்பாடிக் கன்னி இசைத் தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவும் இசைந்த
கம்பன் கழகத்தார்
நன்றி
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் அரு.வே மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு இதழ்
நிகழ்ச்சி உதவி இசைந்தோர்
1.10.2016 அன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளும் 16.10. 2016 ஆம் நாள் சதாபிஷேக விழாவும் இணைந்து இசைந்த புகழ் மெ.செ. ராம.மெய்யப்பச் செட்டியார் , அழகம்மைஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு இசைந்து மகிழ்கின்றோம்

கம்பன் கவி அமுத இசைக் குறுந்தகட்டினை விழா அரங்கில் சலுகை இசைந்த விலையில் அன்பர்கள் பெற்று இசை பருகி இன்புறலாம்.

கருத்துகள் இல்லை: