ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நினைவில் நின்றவர்கள் என்ற நூலின் வழி . தன் அகத்தைத் திறக்கிறார்அகநம்பி


.
கல்பாக்கத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு கிரமாத்தின் பேரியக்கம்.
ஒற்றை ஆலமரம்.
அந்த ஆலமரத்திற்கு விழுதுகள் இல்லை. 
ஆனால் அந்த மரம் அத்தனை பேருக்கும் வேர்கள்
ஏழ்மையின் ஒவ்வொரு நொடியும் அவருக்கு ருசிக்கிறது.
அணு உலை மேலாளர் முதல் கடலை விற்கும் தோழர் வரை அவருக்கு ஒரே நிறை
அவருக்கும் எனக்கும் மூன்றாண்டு கால நட்பு
அவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு பணியை நான் செய்தேன்.
என் மானிடள் வலைப்பூவில் அவரின் நம்பிக்கை மூலதனம் என்ற புத்தகத்தின் அறிமுகத்தைச் செய்தேன்.
இதன் வழியாக பலருக்கு இந்நூல் பற்றிய அறிமுகம் சென்று பலர் அந்தப் புத்தகத்தைத் தம் மாணவர்களுக்கு வாங்கித்தந்தார்கள்.
புத்தகம் தமிழகம் பரவியதை அன்புடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அன்பு தொடங்கிய அருமையா பொழுது அது.
அடுத்த நூல் பகைவனும் நண்பனே.
என் முன்னுரையைக் கேட்டுப் பெற்றார்.
நூலுக்குப் பொருத்தமாக அமைந்தது அந்த முன்னுரை
இப்போது அவர் ஒரு நூல் வரைந்துள்ளார்.நினைவில் நின்றவர்கள்
திருமிகு சங்கரலிங்கனார், எழுத்தாளர் பொன்னீலன் இவர்களுடன் நண்பர்களான என்போன்றோரையும் நினைவில் நிறுத்தியுள்ளார்.
தன் வாழ்க்கை வரலாற்றை அவர்களால் தான் அடைந்த உயரத்தை அவர் வாழ்வோடு கலந்து தந்திருக்கும் அவரின் ஆற்றல் பெரிது.
நூறு ரூபாய் விலை கொண்ட அந்தப் புத்தகம் வெற்றி பெற்ற மனிதர்களின் குறிப்பேடு
வாங்கிப் படிப்பவர்கள் வெற்றி பெற்ற மனிதர்கள் பலரின் வெற்றிமுகங்களைத் தடவிக் கண்டறிய இயலும்.
இப்புத்தகத்தின் வெளியீட்டுவிழா சனிக்கிழமை (17.9.2016 ) அன்று என்.எஸ். கிருஷ்ணன் வீட்டருகே நடைபெற்றது. ஒழுகினசேரி பெருமாள் மண்டபத்தில் இப்பெருமானின் நூல் அரங்கேற்றம் நடைபெற்றது.
கவிதை உறவு ஏர்வாடியார், அகில இந்திய வானொலி சண்முகய்யா, திருமதி பொன்னீலன், அழகுநீலா, செந்தீநடராசன் ஆகியோர்களின் உரையோடு புத்தகம் சிறப்பைப் பெற்றது.
குறிப்பாக கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் இயக்குநர் உரை, இதனைத் தொடர்ந்து கேரள அரசின் முக்கியத் துறையின் செயலர் வாசித்த கவிதை இல்லை இல்லை, பாடிய கவிதை. மலையாள மரபு கவிதையை இசையாய் நகர்த்துவது என்று
அகநல மருத்துவர் சிதம்பர நடராஜன் அவர்களையும் பாராட்ட வேண்டும்.
வித்தியாசமான அனுபவங்களுடன் நம்பிக்கை வாணர் அகநம்பியின் நூல் இனிதே அரங்கேறியது.
மனைவியாரின் நினைவுகளை அவரின் கோசலை அறக்கட்டளை சுமந்துநிற்கிறது. அவரின் தனிவாழ்வை அவரின் நண்பர் அறை பகிர்ந்து; கொள்கிறது. தினத்தந்தி நிருபர் என்ற கௌரவம் மட்டுமே தற்போது அவரின் சொந்தம். விட்டுவிடாமல் நம்பிக்கை தளராமல் ;நகர்கிறது அவர் வாழ்க்கை
சீவாலை கிராமத்தில் ஒருநாள் அவருடன் தங்க ஆசை. வருகிறேன் தோழரே உங்களுடன் ஒருநாள் தங்க.

 
நூல் கிடைக்குமிடம் 
வாசகன் பதிப்பகம், 167 ஏ வி ஆர் காம்ப்ளக்ஸ்
அரசு கலைக்கல்லூரி எதிரில் 
சேலம் 7
பேச. 9842974697

ஆசிரியருடன் பேச
அகநம்பி 
கோசலை நினைவு கல்வி அறக்கட்டளை
எண். 30
புன்னமை கிராமம்
சீவாடி அஞ்சல்
செய்யூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
603312
கைபேசி
9585480754

கருத்துகள் இல்லை: