என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட கவிச்சக்கரவர்த்தியின் 77 ஆம் ஆண்டுக் கம்பன் திருநாள் ஏப்ரில் மாதம் 2015 ஆம் ஆண்டு, முதல் தேதி -பங்குனிக்கு 18 ஆம் நாள் துவங்குகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும்இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும். நான்காம் நாள் நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலில் நடைபெறும்.
முத்தமிழில் துறைபோகிய அறிஞர்கள் பலர் கம்பன் திருப்பணியில் பங்கு கொள்ள அன்புடன் இசைவு தெரிவித்துள்ளனர்.
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
ஏப்ரல் -1 முதல் நாள் நிகழ்ச்சி - காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் மிகச் சரியாக மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தாய் கோயில் வழிபாடு.
தலைமை. சென்னை உயர் மன்ற நீதிபதி நீதியரசர் வி. இராம சுப்பிரமணியம்
வரவேற்புரை திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரையும் தமிழ்த் தொண்டாற்றும் அறிஞர் சரசுவதி இராமநாதனுக்குப் பாரட்டு - நாடளுமன் ற உறுப்பினர் திரு தருண்விஜய்
திரு. சோம. வள்ளியப்பன் அவர்களின் எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம் என்ற நூல் வெளியீடு - பேராசிரியர் சரசுவதி இராமநாதன்
மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு - திருமதி வள்ளி முத்தையா
அருந்தமிழ் ஆர்வலர் விருது - திரு தருண்விஜய் அவர்களுக்கு நீதியரசர் வழங்கல்
-------------------------------------------------
இரண்டாம் நாள் (ஏப்ரல் 2) மாலை 5.30 மணி கம்பன் மணிமண்டபம்
தனிப்பேருரை- இராமன் என்றோர் அரசியல் அறிஞன்
திரு. பழ. கருப்பையா
இராமன் எத்தனை இராமனடி - நாட்டியம் திருநங்கை நர்த்தகி நடராஜ்
----------------------------------------
மூன்றாம் நாள் (ஏப்ரல் 3) மாலை 5.30 மணி கம்பன் மணிமண்டபம்
திரு சுகி.சிவம் தலைமை தாங்கும் பட்டிமண்டபம்
தலைப்பு - கம்பனில் உயர்திணை மக்களுக்குப் பெரிதும் பாடம் புகட்டும் அஃறிணைப் பொருள் எது?
வில்
திரு. இரா. மாது
திரு. நீ. இரவிச்சந்திரன்
திரு. மா. சிதம்பரம்
கல்
திருமதி விசாலாட்சி சுப்பிரமணியம்
செல்வி நே. சௌமியா
திருமதி ரகமத் பீபி
அரியணை
திருமதி மகேஸ்வரி சற்குரு
செல்வி இரா. நாச்சாள்
திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன்
-------------------------------------
நான்காம் நாள்(ஏப்ரல் 4)
நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோவிலில் மாலை 5.00 மணி
தலைவர் - கோவிலூர் ஆதீனம்
வரவேற்புரை- திரு கண. சுந்தர்
இராம இறைஇயல் திருமதி யாழ் .சு. சந்திரா
நன்றியுரை
நா. மெய்யப்பன்
வாழிய செந்தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக