கம்பர் நினைவாலயம் -பக்கப்பகுதி
கம்பர் நினைவாலயம் முன்பகுதி
கம்பர் ஆலயம்
கம்பர் ஆலயத்தைப் புரந்த வள்ளல்
பஞ்ச முக ஆஞ்சநேயர் கோயில் புதிதாக எழுப்பப் பெற்றுள்ளது.
பரமேட்டியான திருமால் கம்பர் நினைவாலயத்தூணில்
கம்பி வலைக்குள் கவி வல்லக் கம்பன்
கம்பக் க்ருவறை
கம்ப வாயிலில் உருத்திராட்சம் காய்க்கும் ஞானம்
உருத்திராட்ச மரம்
கம்பர் பூசைக்காகக் காத்துக்கிடக்கும் மணி. அதன் மேலும் கம்ப நாமம்
கம்ப மண். கவி மண். பிள்ளைகள் தின்னும் மண். கம்பன் அடிப்பொடி - சா. க. வின் நினைவினைச் சுமக்கும் மண்.
கம்ப மலர்த்தோட்டம்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தமிழிலக்கியத்தில் குறிக்கத்தக்க ஊராகும். கம்பர் தன் நிறைவுக்காலத்தினை இவ்வூரில் கழித்தார் என்பது வரலாறு. அவர் நினைவிடம் இவ்வூரின் அருகில் இருக்கின்றது. அழகான பசுஞ்சோலைக்குள் கம்பர் அவர் கவித்துமாய் நிற்கிறார்.
இக்கோயிலில் மண்ணெடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் படிப்புவரும் என்று இவ்வூர் வட்டாரத்தினர் கருதுகின்றனர்.
சிவகங்கைக்கு வந்தபிறகு செல்ல வேண்டிய முதலிடம் இது எனக் குறித்து வைத்த நேரத்தில்இன்றைக்குச் செல்லநேரம் கிடைத்தது. மலர்வனத்திற்குள் பசுமை போர்த்திருக்கும் இனிமைச் சூழலில் கம்பர் நினைவாலயம் கட்டப் பெற்றுள்ளது. தூண்களில் திருமாலின் உருவங்கள் அணி செய்கின்றன. நகரத்தார் பராமரிப்பில் இருப்பதால் இதனைக் கட்டியவரின் திருவுருவம் அருகில் கம்பரை வணங்கிய வண்ணம் காணப்படுகிறது. பக்கத்தில் முருகப் பெருமான் உருவம்.
நெடிய சோலையாகக் காட்சிதரும் இவ்விடத்தில் கருவறையும் ஒரு வணங்கு மண்டபமும் ஆக இருபகுதிகளாக இந்நினைவாலயம் எழுப்பப் பெற்றுள்ளது,கம்பரைத் தரிசித்து அவரின் கவியாழத்தில் ஓர் கவிதை அங்குரசித்து வந்தேன். என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட கம்பருக்கும் நூற்றாண்டு கள் கடந்தும் அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வந்து தான் போகிறார்கள்.
ஆண்டுதோறும் கம்பன் விழா இங்கு நடைபெற்று வருகிறது.
அன்றைக்கு விழாக்கோலம் பூணும் இந்த ஆலயம் என்றைக்கும் அந்த நாள் போல இருக்க கம்பன் கவி பரவ தமிழே நீயே துணை.

5 கருத்துகள்:
கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடம் குறித்த புகைப்படங்களும், தகவல்களும் சிறப்பு. கம்பர் தேரழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எனவேதான் அவர் நினைவிடத்தில் திருமால் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.
ஸ்ரீ....
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
நன்றி🙏💕
நன்றி
நன்று செய்தீர் அன்பரே!
கருத்துரையிடுக