காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 14, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, இணையவழி கம்பராமாயணம் காணொளிக் காட்சி்த் தொடர், அயோத்தியா காண்டம், குகப்படலம் வழங்குபவர் திரு சரவணன், புதுக்கோட்டை


கம்பன் கழகம், காரைக்குடி. இணையவழியில் கம்பராமாயண காணொளித் தொடர் இன்று அயோத்தியா காண்டம் குகப் படலம் வழங்குபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பேச்சாளர் இளைஞர்,காணொளிக் காட்சிக்கலை வல்லுநர் திருமிகு சரவணன் அவர்கள் புதுக்கோட்டை



தொடுப்பு
https://youtu.be/TrqY0ceBmYI

செவ்வாய், மார்ச் 31, 2015

காரைக்குடி கம்பன் திருநாள் (2015 ) நாளை தொடங்குகிறது.

77 ஆம் ஆண்டு - காரைக்குடி கம்பன் திருநாள் (2015)


2015 ஆண்டு காரைக்குடி கம்பன் திருநாள்- 77 ஆம் ஆண்டு

நிகழ்வுகள்

என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட கவிச்சக்கரவர்த்தியின் 77 ஆம் ஆண்டுக் கம்பன் திருநாள் ஏப்ரில் மாதம் 2015 ஆம் ஆண்டு, முதல் தேதி -பங்குனிக்கு 18 ஆம் நாள் துவங்குகின்றது.  நான்கு நாட்கள் கொண்டாடப்படும்இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும். நான்காம் நாள் நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலில் நடைபெறும். 

முத்தமிழில் துறைபோகிய அறிஞர்கள் பலர் கம்பன் திருப்பணியில் பங்கு கொள்ள அன்புடன் இசைவு தெரிவித்துள்ளனர். 
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

ஏப்ரல் -1 முதல் நாள் நிகழ்ச்சி  - காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் மிகச் சரியாக மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தாய் கோயில் வழிபாடு. 
தலைமை. சென்னை உயர் மன்ற நீதிபதி நீதியரசர் வி. இராம சுப்பிரமணியம்

வரவேற்புரை திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரையும் தமிழ்த் தொண்டாற்றும் அறிஞர் சரசுவதி இராமநாதனுக்குப் பாரட்டு - நாடளுமன் ற உறுப்பினர் திரு தருண்விஜய்

திரு. சோம. வள்ளியப்பன் அவர்களின் எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம் என்ற நூல் வெளியீடு - பேராசிரியர் சரசுவதி இராமநாதன்

மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு - திருமதி வள்ளி முத்தையா
அருந்தமிழ் ஆர்வலர் விருது - திரு தருண்விஜய் அவர்களுக்கு நீதியரசர் வழங்கல்

-------------------------------------------------
இரண்டாம் நாள் (ஏப்ரல் 2) மாலை 5.30 மணி கம்பன் மணிமண்டபம்
தனிப்பேருரை- இராமன் என்றோர் அரசியல் அறிஞன்
திரு. பழ. கருப்பையா


இராமன் எத்தனை இராமனடி - நாட்டியம் திருநங்கை நர்த்தகி நடராஜ்


----------------------------------------
மூன்றாம் நாள் (ஏப்ரல் 3) மாலை 5.30 மணி கம்பன் மணிமண்டபம்
திரு சுகி.சிவம் தலைமை தாங்கும் பட்டிமண்டபம்

தலைப்பு - கம்பனில் உயர்திணை மக்களுக்குப்  பெரிதும் பாடம் புகட்டும் அஃறிணைப் பொருள் எது?
வில்
திரு. இரா. மாது
திரு. நீ. இரவிச்சந்திரன்
திரு. மா. சிதம்பரம்
கல்
திருமதி விசாலாட்சி சுப்பிரமணியம்
செல்வி நே. சௌமியா
திருமதி ரகமத் பீபி

அரியணை
திருமதி மகேஸ்வரி சற்குரு
செல்வி இரா. நாச்சாள்
திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன்

-------------------------------------
நான்காம் நாள்(ஏப்ரல் 4) 
நாட்டரசன் கோட்டை  கம்பன் அருட்கோவிலில் மாலை 5.00 மணி
தலைவர் - கோவிலூர் ஆதீனம்
வரவேற்புரை- திரு கண. சுந்தர்
இராம இறைஇயல் திருமதி யாழ் .சு. சந்திரா
நன்றியுரை 
நா. மெய்யப்பன்

வாழிய செந்தமிழ் 



















ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

கம்பர் நினைவாலயம், நாட்டரசன் கோட்டை

கம்பர் நினைவாலயம் -பக்கப்பகுதி
கம்பர் நினைவாலயம் முன்பகுதி
கம்பர் ஆலயம்
கம்பர் ஆலயத்தைப் புரந்த வள்ளல்

பஞ்ச முக ஆஞ்சநேயர் கோயில் புதிதாக எழுப்பப் பெற்றுள்ளது.



பரமேட்டியான திருமால் கம்பர் நினைவாலயத்தூணில்
கம்பி வலைக்குள் கவி வல்லக் கம்பன்
கம்பக் க்ருவறை
கம்ப வாயிலில் உருத்திராட்சம் காய்க்கும் ஞானம்
உருத்திராட்ச மரம்
கம்பர் பூசைக்காகக் காத்துக்கிடக்கும் மணி. அதன் மேலும் கம்ப நாமம்
கம்ப மண். கவி மண். பிள்ளைகள் தின்னும் மண். கம்பன் அடிப்பொடி - சா. க. வின் நினைவினைச் சுமக்கும் மண்.
கம்ப மலர்த்தோட்டம்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தமிழிலக்கியத்தில் குறிக்கத்தக்க ஊராகும். கம்பர் தன் நிறைவுக்காலத்தினை இவ்வூரில் கழித்தார் என்பது வரலாறு. அவர் நினைவிடம் இவ்வூரின் அருகில் இருக்கின்றது. அழகான பசுஞ்சோலைக்குள் கம்பர் அவர் கவித்துமாய் நிற்கிறார்.

இக்கோயிலில் மண்ணெடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் படிப்புவரும் என்று இவ்வூர் வட்டாரத்தினர் கருதுகின்றனர்.

சிவகங்கைக்கு வந்தபிறகு செல்ல வேண்டிய முதலிடம் இது எனக் குறித்து வைத்த நேரத்தில்இன்றைக்குச் செல்லநேரம் கிடைத்தது. மலர்வனத்திற்குள் பசுமை போர்த்திருக்கும் இனிமைச் சூழலில் கம்பர் நினைவாலயம் கட்டப் பெற்றுள்ளது. தூண்களில் திருமாலின் உருவங்கள் அணி செய்கின்றன. நகரத்தார் பராமரிப்பில் இருப்பதால் இதனைக் கட்டியவரின் திருவுருவம் அருகில் கம்பரை வணங்கிய வண்ணம் காணப்படுகிறது. பக்கத்தில் முருகப் பெருமான் உருவம்.

நெடிய சோலையாகக் காட்சிதரும் இவ்விடத்தில் கருவறையும் ஒரு வணங்கு மண்டபமும் ஆக இருபகுதிகளாக இந்நினைவாலயம் எழுப்பப் பெற்றுள்ளது,கம்பரைத் தரிசித்து அவரின் கவியாழத்தில் ஓர் கவிதை அங்குரசித்து வந்தேன். என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட கம்பருக்கும் நூற்றாண்டு கள் கடந்தும் அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வந்து தான் போகிறார்கள்.

ஆண்டுதோறும் கம்பன் விழா இங்கு நடைபெற்று வருகிறது.
அன்றைக்கு விழாக்கோலம் பூணும் இந்த ஆலயம் என்றைக்கும் அந்த நாள் போல இருக்க கம்பன் கவி பரவ தமிழே நீயே துணை.  


செவ்வாய், ஜூலை 07, 2009

பாராட்டும் பரிசும்


2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவில் கம்பன் அடிப்பொடி குறித்து ஒரு வலைப்பூவை உருவாக்கியமைக்காகப் பாராட்டினைப் பெற்றேன் (http://kambanadippodi.blogspot.com/) திருமிகு சக்தி திருநாவுக்கரசு அவர்களும் கம்பன் அடிசூடி திருமிகு பழ. பழநியப்பன் அவர்களும் இணைந்து இருக்கிறார்கள்