செவ்வாய், பிப்ரவரி 06, 2007

திருக்குறள் விழா

புதுக்கோட்டை மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும், மா. மன்னர் கல்லூரியும் இணைந்து நிகழ்த்தும் திருக்குறள் விழா வரும் பிப்ரவரி ஏழாம் தேதி நிகழ உள்ளது. இதன் தொடர்வாய் புதுக்கோட்டையில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் திருக்குறள் விழா நடை பெற உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு

7, 02, 2007 புதன்கிழமை காலை 10 மணி மா, மன்னர்கல்லூரி கலையரங்கம்
தொடக்கவிழா
திருவாளர்கள் சண்முக. பழனியப்பன், முதல்வர் லெ. குப்புசாமி, தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம், புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் ரெ. நெடுஞ்செழியன் , அ. நடேசன், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் புலவர் நா, இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதன்பின் முனைவர் ச.வே சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில்1, வள்ளுவரும் சாத்தனாரும் - முனைவர் கா. பகவதி2, மருந்தில்லா மருத்துவம் - முனைவர் அ, நடேசன்3. வைப்புமுறை மாற்றத்தக்கதா - முனைவர் மு. பழனியப்பன்4. வள்ளுவரும் அரிஸ்டாட்டிலும் - திரு சி, சேதுராமன்5. வள்ளுவரும் சாக்ரடீசும் - பேரா வீ. பாலமுருகன்ஆகியோர் முதல் அமர்வில் கட்டுரை வாசிக்கின்றனர்.இதன்பின் தெ, முருகசாமி, முனைவர் பா. சுந்தர் ஆகியோர் தலைமையில் அடுத்த அடுத்தஅரங்குகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருக

இதனைத் தொடர்ந்து ஜெ ஜெ கலைக் கல்லூரியில் 8.2.2007 அன்று கருத்தரங்கமும்9,02,2007 அன்று காலை பொன்மாரி ஆசிரியர் பய்¤ற்சி நிறுவனத்தில் கருத்தரங்கமும், 09,02.07 அன்று மாலை கைக்குறிச்சி சுபபாரதி கல்லூரியில் பட்டி மண்டபமும் , 10,02.2007 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நிறைவு விழாவும் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் திருவாளர்கள் இராம. வீரப்பன், இரா, பாலா, சொ,சேதுபதி வளிகவரித்துறை அமைச்சர் மீ.உபயதுல்லா அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்துரையிடுக