சனி, ஜனவரி 13, 2007

முரண் + பாடுகள்

முரண்பாடுகள்
தோன்றிவிடுகின்றன

எவ்வளவோ தடுத்துப் பார்த்தும்
அவை ஏற்பட்டுவிடுகின்றன

சிந்தனைகளின் மாறுபாடு
செயல்களின் மாறுபாடு
அறிவின் மாறுபாடு
உணர்வின் மாறுபாடு
அதிகாரத்தின் மாறுபாடு

இவை முரண்பாடுகளின்
மூலக் கண்கள்

இவை அன்றி
வளர்ச்சி இல்லை
தாழ்ச்சி இல்லை

முரண்பாடுகள்
சண்டைகளில் முடிவதுண்டு
எதிர்பாராத இன்னல்களில் முடிவதும் உண்டு

முரண்பாடுகளின் முளைகள்
நாளுக்கு நாள் மனிதனைத் தின்று வருகின்றன

இவற்றில்
வெற்றியே கிடையாது
முரண்பாடுகளின்போது
மனிதச் செயல்பாட்டிற்கு
வெற்றி ஏது தோல்வி ஏது

பாதிப்பு
பாதிப்பு இன்மை
இவை மட்டுமே

கருத்துகள் இல்லை: