திங்கள், மே 15, 2006

வலி


முதுகில் இருந்து
வலியின் பயணம்
உச்சந்தலை வரை பாய்கிறது

வெந்நீர் ஒத்தடம்
தேங்காய் எண்ணெய் பூச்சு
எதற்கும் அடங்காமல் வலி பெருகும்

எதிரில் பட்டவரெல்லாம்
எதிரியாக எண்ணுகிறது மனது

வலியின் உக்கரம்
கூடுகிறதே அன்றி குறையவே இல்லை

வலியோடு
எத்தனை நாள்தான்
பொழுதுகளை நகர்த்துவது

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு எவ்வளவு கனம் என்று

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு
எவ்வளவு வலிமையற்றது என்று

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு இனி வேண்டாம் என்று

வலி உடம்புக்கு
மட்டுமல்ல உள்ளத்திற்கும்
கருத்துரையிடுக