(வலியறிதல் – அதிகாரம் – புதுக்கவிதையில்)
- வள்ளுவர் நடத்தும் அரசியல் பாடம் வலியறிதல்.
- உலகில் ஒவ்வொரு மனிதருக்கும்
ஒரு கடமை இருக்கிறது.
அக்கடைமையை ஏற்று நடத்தவே அவன் பிறக்கிறான்.
அவனுக்கான காரியம் அவனாலேயே முடிய வேண்டும்.
அவ்வாறு கடமை முடிய என்ன செய்யவேண்டும்.
- தன்னை உணர்தலும்
தனக்கான கடமையை அறிதலுமே முதற்படி
- தன்னால் இது செய்ய இயலுமா என்று
தெளிந்தபின் செயலில் இறங்குவதே சிறப்பு
இத்தெளிவின்றிப் பாதியில் வீணாய்ப் போவதும் போனதும் அதிகம்.
- தன்னை உணர்ந்தபின் தன் துணையின் வலிமையும் உணர்க
காரியங்கள் கைகூட துணைவரோடு ஒத்து செல்க
எதிராக நிற்பவற்றின் வலிமைகளையும் அளந்தறிக
எடுத்த காரியத்தை முடிக்க தொடர்ந்து தொய்வின்றி செல்க…வெற்றி நமதே
- ஊதினால் பறக்கும் மயில் தோகை என்றாலும்
அளவுக்கு அதிகம் சுமையானால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
- மரமே நமதென்றாலும்
அதன் நுனிக் கொம்பு ஏறினால் அழிவுதான்.
- கொடுப்பதானாலும், கொள்வதானாலும்
அளவறிந்து எதையும் செய்க! அதுவே வாழ்க்கை முறைமை
- செலவைக் குறைக்க வரவு பெருகும்
வரம்பு மீறி வாரிக்கொடுக்க இருப்பே இல்லாமல் ஆகிவிடும்
வலியறிந்தால் வலியின்றி வெற்றி பெறலாம்…….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக