புதன், பிப்ரவரி 19, 2020

தமிழ் மாணவன் தந்த தமிழ்க்கவிதை பரிசில்

அன்பு மாணவர் ஒருவரின் என்னைப் பற்றிய மதிப்பீட்டுக் கவிதை அன்றொரு நாள் தமிழ்ச் செம்மல் விருதுடன் கல்லூரி நுழைகிறேன் நுழைந்த என்னைப் பாராட்டி நிற்கிறார்கள் தமிழ்த்துறையினர். அவர்களின் விளைவால் அன்பு மாணவன் செல்வன் நித்திஷ் மூன்றாம் ஆண்டு தமிழ் மாணவன் தந்த தமிழ்க்கவிதை பரிசில் எங்கள் இதயத்தில் வாழுகின்ற இமயமலைச் சிகரமே சங்கத் தமிழின் உயரமே நல்வழி நடக்கும் தொல்காப்பியமே எங்களை நல்வழிப்படுத்தும் நல் வாக்கியமே கல்லூரியின் தமிழ்த்துறையே முத்தமிழின் வளர்பிறையே தமிழ்ச்சுடர் விருது பெற்ற இந்தத் தனிச்சுடரை வாழ்த்திப் பாட வந்திருக்கிறேன். கழுத்து மாலை சூட்ட காசில்லாததால் –நான் எழுத்துமாலை சூட்ட வந்திருக்கிறேன் உங்களை வாழ்த்தியே ஆகவேண்டும். காரணம் நீங்கள் தமிழானவன் நான் உங்கள் தமிழ் மாணவன் இங்குத் தமிழ்ப் படித்தவர்கள் பல்லாயிரம் – ஆனால் நீங்கள் மட்டும்தான் முத்தொள்ளாயிரம் நீங்கள் புகழ் நானூறு கொண்ட புறநானூறு இவர் தம் வாழ்வில் சம்பாதிப்பது எண்ணும் தொகையை எல்ல எட்டுத் தொகையை ஐயா நீங்கள் நடந்தால் நேர்திசை நீங்கள் தமிழின் நேரசை தமிழால் தன்னை நிறைத்த நிரையசை ஐயா எங்களை அடித்திருக்கிறார் அவர் அடித்த அடி எங்களுக்குள் பதிந்தே இருக்கிறது குறளடியாக, சிந்தடியாக, அளவடியாக, நெடிலடியாக மற்றவர்கள் பாடம் எடுத்தால் வகுப்பு சத்தம் போடும் ஐயா நீங்கள் பாடம் எடுத்தால் சிரிப்பு சத்தம் போடும் ஐயா நீங்கள் தமிழ் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் கண்ணாடி வருவோம் எல்லோரும் உங்கள் பின்னாடி ஐயா நாங்கள் குத்துப்பாட்டு நீங்கள் பத்துப்பாட்டு இவர் தமிழை கரைத்துக் குடித்த காரைக்குடி எங்களையும் ஏற்றிவிடுகிற ஏணிப்படி அதனால் தான் நாங்கள் கால்களால் நிற்கிறோம் நீங்கள் தமிழால் நிற்கிறீர்கள் இவர் யாரொடும் அதிகம் பேசாத தமிழ்ப் பேச்சாளர் யாரையும் பற்றி நடக்காத தமிழ்ப் பற்றாளர்

கருத்துகள் இல்லை: