புதன், ஜூன் 21, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜுலை மாதத் திருவிழா 1.7.2017

                                                              கம்பன் கழகம்
                                                               காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜுலை மாதத் திருவிழா 1.7.2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப்பக்கம் ஆர்எம்ஆர் ஜவுளிக்கடை அருகில் சு. ராம. (எஸ்.ஆர். எம் ) தெருவில் அமைந்துள்ள மெ. செ. இல்ல அரங்கத்தில் நடைபெறும். 
இறைவணக்கம்
வரவேற்புரை திரு கம்பன் அடிசூடி
பாங்கறி மன்றம்
நடுவர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்
நடைமுறை
கம்பனில் கிளைக்கதைகள் காப்பியக் கதைப்போக்கிற்குத் துறை செய்கின்றனவா என்ற ஐய வினாத் தொடுத்து விவாதத்தினை அறந்தாங்கி செல்வி சு. சுந்தரவள்ளி தொடங்கி வைக்க கீழ்க்கண்ட இளையோர் கேள்விக் கணைகள் தொடுத்து ஐய வினாக்கள் எழுப்ப நடுவர் கலந்துரையாடித் தெளிவு காட்டுவார்.
பங்கேற்போர்
பொள்ளாச்சி திரு, சு. சதீசு குமார்.
திருவாரூர் திரு. த.க. தமிழ் பரதன்
தேவகோட்டை திரு.வி. யோகேஷ் குமார்
நன்றியுரை மு.பழனியப்பன்
சிற்றுண்டி
கம்பன் புகழ் பருக்க கன்னித்தமிழ் வளர்கக் அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அறமனச் செம்மல் அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை, அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
தில்லைஸ்தா்னம் மர பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இராம. கௌசல்யா
கருத்துரையிடுக