நெல்லை மாவட்டத்தில் 11.12.1882-ல் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். பதிமூன்று வயதில் பாரதி எனும் பட்டம் பெற்ற இவர்தான் இருபதாம் நூற்றாண்டில் தமிழின் புதிய இலக்கியத்தடத்தை (கவிதை, கட்டுரை) அமைத்துத் தந்தவர். வாழ்க்கை நம்பிக்கைச் சுடரேற்றி வைக்கும் பல கவிதைகளைத் தந்த பாரதி தமது சுயசரிதையை கவிதை வடிவிலேயே தந்துள்ளார்.
வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் முறைபிழை யன்றுகாண் (பாடல்-1)
என நம்பிக்கையின்மையின் வெளிப்பாடகத்தான் தனது சுயசரிதையைத் தொடங்குகிறார் பாரதியார். காரணம், தம் சுயசரிதையைப் பாரதி தமது தந்தை இறந்தபின், மிகவும் வறுமையுற்று தேகம் மெலிந்து, உள்ளம் உறுதியற்று இருந்த நாட்களில்தான் எழுதியிருக்கவேண்டும். அதன் வெளிப்பாடுதான் மேற்கூறிய பாடல் வரிகள்.
மேலும், தொடர்ந்து எழுதி வருபவர்,
ஊழ்கடந்து வருவது மொன்றுண்டோ?
உண்மை தன்னிலோர் பாதி புணர்ந்திட்டேன் (பாடல்-2)
என்று விதிவழி வந்த துன்பம், அதை உணர்ந்து கொண்டேன் என முதற்பாடலை நிறைவு செய்வதும் அவர் எந்த சூழலில் தம் சுயசரிதையை எழுதத் தொடங்கினார் என்பது புலனாகிறது.
காதல் பத்து வயதில்
அவர் அன்பு மட்டுமே புரணம் பெறும் பாலுணர்க்குத் தூண்டாத அந்தப் பத்து வயதில் தனது நெஞ்சுக்குள் எழுந்த காதலையும் பதிவு செய்துள்ளார். காதல் அரும்பிய அந்த நாட்களில் தமது மனம் கொண்ட தவிப்பு, முக்காலமும் அதே நினைப்பு, காதலி வரும் வழிபார்த்து இருக்கும் காத்திருப்பு, தண்ணீர் எடுக்க வரும்வழி நோக்கி இருக்கும் எதிர்பார்ப்பு, வந்தால்பெறும் புத்துயிர்புரிப்பு என அவ்வுணர்வை
"காந்திருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப்புற்றெனக்
கோத்த சிந்தையொ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனென்,
புத்த ஜோதி வதனஞ் திரும்புமேற்
புலன ழிந்தொரு புத்துயிர் ரெய்துவேன். " (பாடல் 10)
எனத் தீட்டியுள்ளார். பின்னை ஒரு நாள் தமது தாயின் தந்தையார் (தாத்தா) சிவன் கோயிலில் பாடிப்பரவி, புசனை செய்து தந்த புவில் ஒன்றை தமது உயிர் நிகர் காதலியிடம் கைநீட்ட அவள் புன்னகைப் புத்தாள் என கவி எழுதுகிறார்.
.
அருச்சணைப் படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
புவை புன்னகை நன்மலர் புப்பள்காண் (பாடல் 20)
இவை அவரின் இளமைக் கால காதல் அனுபவங்களை எடுத்துரைக்கும் பாடலடிகளாகும்.
திருமணம்
தனக்கு பத்துவயது இருந்தபோது தான்நேசித்தப் பெண்ணை திருமணம் செய்யவோ, அதை தன் பெற்றோரிடம் எடுத்துக் கூறவோ மனத்திடம் இன்றி புழுங்கி இருந்ததாகவும், பன்னிரெண்டு வயதில் தன்மனம் நிறைந்த பெண்ணை விடுத்து வேறு பெண்ணுடன் மணம் முடிக்க தன் தந்தை செய்த ஏற்பாடு பாரதியின் மனதை வெகுவாக புண்படுத்தியதென்றும் அவ்வயது பாலுணர்வு மேலிட்டு ஆட்டுவிக்கும் வயதல்ல இருந்தும் அந்த தூய அன்பு நிறைந்த பத்துவயதுக் காதலியே பாரதியின் மனம் நிறைந்திருந்தாள் மணம்மட்டும் வேறுபெண்ணுடன் நிகழ்ந்தது.
ஆங்கோர் கன்னியைப் பத்து பிராயத்தில்
ஆழநெஞ்சிடை புன்றி வணங்கினன்,
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்
தீக்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
செய லெதிர்க்கும் திறனில் னாயினேன். 5 (பாடல் 35)
என்று வருந்தியவர், தன் தந்தையின் அச்செயல் மனப்பொருத்தமறியாது சடங்குகளை நிறைவேற்றி வைத்ததாக வெகுகோபங்கொள்கிறார்,
சாத்தி ரங்கள், கிரியைகள், புசைகள்,
சகுண மந்திரத் தாலி மணியெலாம்
யாத்தெனைக் கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர் (பாடல் 38)
ஆங்கிலக் கல்வி
அல்லல் மிக்கதொர் மண்படு கல்வியை
ஆசிரியர்கிங் கருவருப் பாவதை
- என அடிப்படையிலேயே ஆங்கிலக் கல்வி முரணானது எனும் பாரதிக்கு ஆங்கில மொழியின் மீது கோபமில்லை மாறாக ஆங்கிலக் கல்வியின்மீதுதான் கோபம் இருந்தது என்பது உணரத்தக்கது. ஏனெனில் துரைத்தனம், துரைகள் நிர்வகிக்கும் அரசில் ஊதியம் பெறுவதற்காக ஊழியம் (வேலை) எனும் பெயரில் தாய்நாட்டை விலைபேசும் பேடித்தனம், அதைத் தொடர்ந்து செய்வதற்கு ஆங்கிலக் கல்வி என்று தம் உணர்ச்சிமிக்க தேசப்பற்று அவரை "நரவு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள் நாயெனத்திரி யொற்றர் உணவினைப் பெரிதெனக் கொடுதம்முயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கிச்சகம் பேசுவோர். கருது மிவ்வகை மாக்கள் பயின்றிழுங் கலைபயில்கென வென்னை விடுத்தனன்" (பாடல் 22) எனத் தந்தை தன்னை ஆங்கிலம் பயில அனுப்பியதைக் வெகுண்டு கூறுகின்றவர், தமது நிலையை
அருமைமிக்க மயிலைப் பிரிந்துமிவ்
வற்பர் கல்வியி னெஞ்சு பொருந்துமோ (பாடல் 22)
என ஆங்கிலக் கல்வியில் தமதுள்ளம் ஒட்டவில்லை என்றும்
அணி செய் காவிய மாயிரங் கற்பினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுள்ளம் காண்கிலர்9 (பாடல் 23)
என்று தமது நெஞ்சம் தமிழின் பாலும் கவிதையின் பாலும் கட்டுண்டு இருந்ததையும் அதற்கு எதிராக ஆங்கிலக் கல்வி தன்னைக் கொடுமை செய்ததையும் பின்வருமாறுக் கூறுகின்றார்.
அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால் (பாடல் 28)
தந்தையின் வறுமை, மரணம் :
தமது தந்தையார் செல்வச் செழிப்புடன் இருந்த காலங்களில் தம் சுற்றங்கள், உறவுகள், தம்முடன் தமது குடும்பத்தாருடன் கொண்டிருந்த தொடர்பு, இணக்கம், அன்பு, பிணைப்பு இவையாவும் தமது தந்தையார் வறுமையுற்ற காலத்தில் விலகிக்கொண்டதை "பொருளிலார்க்கு கினமில்லை துணையிலை, பொழுதெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால். "(பாடல் 43) எனத் துன்ப வெள்ளம் வாட்டியடித்ததைக் கூறுகிறவர், பின் தந்தை வறுமையில் நலிவுற்று வாடி, மெலிந்து இறந்ததும் தமது நிலையினை,
தந்தை போயினன், பாழ்மிடி சூழந்தது
தரணி மீதினி லஞ்சலென் பாரிலர்
சிந்தையிற் றெளிவில்லை, உடலினில்
திறனுமில்லை, யுரனுளத் தில்லையால்
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதா
மடமைக் கல்வியில் தோற்றில தென்செய்கேன்
ஏன் பிறந்தன னித்துயர் நாட்டிலே? (பாடல் 46)
என நெஞ்சம் விளிம்புநிலையில் தவிக்கும் போதும், தாம் கற்ற கல்வியும் இத்துயர்தீர்க்கும் திறனற்றுப் போனதே என்பதால் உறவுகள், சுற்றங்கள் தனக்கு உதவவில்லை, ஆனால் தான் கற்ற கல்வியும் அப்படித் தானெனில் இன்றையச் சூழலையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறாக தமது "சுயசரிதை"யின் முதற்பகுதியை முடித்தவர் அடுத்த பகுதியாக "பாரதி அறுபத்தாறு" எனும் தலைப்பில் எழுதுகிறார்.
நம்பிக்கைச் சுடர்
இரண்டாம் பகுதியின் தொடக்கத்திலேயே தன் மனமாற்றத்தையும் வாழ்வில் தனக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும் அந்நம்பிக்கையைத் தந்தவள் "மனத்தில் நின்று எழுதுகின்ற மனோன்மணி எனும் மாசக்தி, தினத்தினிலே புதிதாய்ப் புத்துநிற்கும் செய்யமணித் தாமரை போன்ற முகத்தாள்", ஆகிய அன்னை பராசக்தி என்பவர், செய்த மாற்றத்தை,
.. காதல்
வனத்தினிலே தன்னை யொரு மலரைப்போலும்
வண்டினைப் போலென்னையு முருமாற்றிவிட்டாள். (பாடல்-1)
எனக் குறிப்பிடுகின்றார்
தொடர்ந்து பல்வேறுத் துணைத் தலைப்புகளில் தமதுள்ளம் கொண்ட இறையுணர்வையும், தமக்குக் கிடைத்த சில துறவிகளின் தொடர்பையும் எழுதுகிறார். "மரணத்தை வெல்லும் வழி, அஸீரர்களின் பெயர், சினத்தின்கேடு, தேம்பாமை, பொறுமையின் பெருமை, கடவுள் எங்கே இருக்கிறாரா? குருக்கள் ஸ்துதி, குருதர்சனம், உபதேசம், கோவிந்த ஸ்வாமி புகழ், யாழ்பாணத்து ஸ்வாமியின் புகழ், குவளைக் கண்ணன் புகழ், பெண்விடுதலை, ஸர்வமத ஸமரஸம், கோவிந்த ஸ்வாமியுடன் ஸம்பாஷனை" போன்ற தலைப்புகளின் கீழ் பல ஞான உதேசங்களையும், இளைஞர்களுக்கான அறிவுரைகளையும் அங்கங்கே உரைப்பவர், தமது மனம் சுயசரிதை எழுதத் தொடங்கியபோது இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறங்கொண்டு தானே இறை எனும் நிலைக்கு உந்தப்பட்டதாக,
புமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்,
சாமி நீ, தத்வமஸி, கடவுள் நீயே,
தத்வமஸி, தத்வமஸி, நீயே யஸ்தாம்,
புமியிலே நீ கடவுளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் சிவோஹ மென்று ஸாதிப்பாயே. (பாடல் 66)
என்றே எழுதுகிறார்...
பாரதியின் இச்சுருக்க வரலாறு தமது பிள்ளைபிராயத்துக் காதல் தொடங்கி, தந்தையின் மரணம் வரையிலுமான ஒரு சிறுபகுதியையும், அக்காலத்தில் நேர்ந்த நிகழ்வுகளின் நினைவுகளையும் மீட்டுகிறது. சிறிய பகுதியாக இருந்த போதும் வாழ்வின் அச்சாணியாக விளங்கும் மாற்றங்களை எதிர்கொள்ளும் மனத்துணிவை, ஆங்கிலக் கல்வியின் ஆண்மையற்ற (அந்நாளில் பயனற்ற) தனத்தையும், அதன் பொய்த் தன்மையையும், மணவாழ்வில் மனப்பொருத்தம் எத்துணை அவசியமானதென்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது.
வியாழன், ஜூலை 29, 2010
நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்
முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக