திங்கள், ஆகஸ்ட் 14, 2006

உறவுச் சங்கிலி

உறவில்லாமல் பிறப்பில்லை, உறவில்லாமல் இறப்பில்லை -இப்படிப் பல தத்துவ முத்துக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உறவுகள் இன்பத்திலும் துன்பத்திலும் அவரவர் அளவில் பங்கு கொள்கின்றன. இதற்கான சாட்சிகள் திருமணத் திருவிழாக்களில் குவிகின்ற கூட்டங்கள் முதலானவை.

தாய், தந்தை, தங்கை, அண்ணன் இந்த நெருங்கிய உறவுகள் நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் தூரத்து உறவுகளாகிவிடும். அவர்கள் வருகைக்காக எவரும் காத்திருக்கப்போவதில்லை.

நமக்கு நெருங்கிய உறவுகள் என்ற அளவில் உள்ள அண்ணன் அண்ணனி¢ன் குடும்பம், தங்கை, தங்கையின் குடும்பம், அப்பா, அம்மா, மாமனார், மாமியார் மச்சான் அவர்களின் குடும்பம் இவர்களை சரிசெய்து இல்லத் திருவிழாக்களை வெற்றிகரமாக நடத்தி விட்டால் அதுவே மிகப் பெரிய சாதனை ஆகி விடுகிறது.

இவர்களிடமான நமது பேச்சு நடவடிக்கை முதலானவை நமக்கான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிம்பத்தின் வீச்சு வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.

இவர்களைத் தவிர நாம் அன்றாடம் இழையும் மனைவி, மக்கள், கணவன் முதலான உறவுகள் நம் பிம்பத்தின் வலிமை, எளிமைகளைத் தெரிந்தவை. அங்கு மிகக் கவனமாக நம்மை நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வளவு தூரம் நம்மைத் தயார் படுத்தி உறவு மேம்படுத்திக் கொண்டு வாழ நாம் முற்படுகிறோம். இந்தத் தாயரிப்பு வாழ்க்கை நமக்கு என்ன பயன்களைத் தருகிறது. நல்ல மனிதர் என்பது போன்ற ஏதாவது ஒரு பிம்பத்தைத் தருகிறது. அதன்மூலம் நமக்கு மேலும் பல உறவுகளை இணைத்து வைக்கிறது. இந்த உறவுச் சங்கிலி ஒரு வகையில் நன்மை என்றாலும்¢ பல வகைகளில் வலை போன்றதுதான். இதனை மீறாமலும் மீறமுடியாமலும் மீறியும் வாழ்வை உறவுகளோடு வெறுப்பும் விருப்புமாக கழித்து உறவற்றுப் போகிறோம்.

இதற்கு நல்ல சான்று இறந்த பின் நல்ல உறவினனை பலரும் ஒன்றாக இருந்து கரையேற்றுவதுதான்.

கல்யாண வீட்டின் கூட்டமும், சாவு வீட்டின் கூட்டமும் உறவின் வலிமையை நிர்ணயிக்கின்றன.

1 கருத்து:

palaniappan சொன்னது…

r u read this article