வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006

கலவரப்படும் மனது

மரணம்
சம்பவிக்கும் நேரத்தைத்
தவிர வேறு ஒன்றும்
முன்னேற்பாடு இல்லாதது

கடிதங்கள்
இதனைத் தெரிவிக்கின்றன
தாமதமாக

அழுகைகள்
விளம்பரப் படுத்துகின்றன இதனை

சுமக்கின்ற வண்டிகள்
அடையாளங்களாகின்றன வருபவர்களுக்கு

இழப்பின் வலி மரணத்தின்
அடுத்த நிமிடத்தில் மறந்து போகிறது

ஏற்பாடுகளுக்கு பணத்தை
எண்ணிப் பார்க்கிறது சுற்றம்

நாள் போனால் நாற்றம் வீசும்
பக்கத்து வீட்டுக்காரர்களின் மனிதாபிமானம்

அமெரிக்க பாசம் வரும் வரை
காத்திருக்கிறது கூட்டம்
எதுவும் இல்லாமல் போகப் போகிறது வாழ்க்கை

கழுவி விட்டார்கள்
வீட்டையும் மரணத்தையும் சேர்த்து

அடுத்த மரணத்தின்போது கலவரப்படும் மனது

2 கருத்துகள்:

மஞ்சூர் ராசா சொன்னது…

அடுத்த மரணத்தின் போது கலவரப்படும் மனது -

இதில் கலவரப்படும் மனது என்பது ஏன்?


கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

// இது வெளி இடுவதற்கு அல்ல //

அருமையான கவிதை.

பழனியப்பன் ஐயா,

உங்கள் ஆக்கங்கள் வெகு சிறப்பாக இருக்கிறது.

ஆனால் பலரை சென்று அடைகிறதா தெரியவில்லை.

பந்தியில் பலவகை உணவிருந்து சொந்தமும் சுற்றமும் வரவில்லைஇஎன்றால் வீணாக போய்விடுமே.

நீங்கள் கட்டுரைகளை இடுவது போல பல பதிவர்களின் கட்டுரைகளை படித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் எழுதுவது பலரையும் சென்று அடையும்.

அது அறிவுரை அல்ல ... நல்ல சிந்தனைகள் பலரையும் அடைய வேண்டுமே என்ற அக்கரை