திங்கள், மே 15, 2006

வேதவதி என்பவள்

என் வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள கம்பனில் சாபங்கள் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு என்ஆர் என்ற வலைப்பூ நண்பர் வேதவதி என்பவள் யார் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கான பதில் இதோ
வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம். இவள் தவம் செய்து கொண்டிருந்தபோது திக்குவிஜயம் செய்த இராவணன் இவளின் அழகில் மயங்கி இவளின் கூந்தலைப் பிடித்து இழுத்தான். இராவணன் தொட்டான் என்பதால் அவள் தீ புகுந்தாள். புகும் போது அடுத்த பிறவியில் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று சாபம் தந்தாள்.

பின் குறிப்பு
மாணவர்களிடம் பாடம் நடத்தும் போது இக்கதையை விளையாட்டாகச் சொல்வது உண்டு. விருப்பம் இல்லாத பெண்ணை ஒரு ஆடவன் தொட்டால் அவன் தலை வெடித்துச் சிதறும் என்ற சாபத்தை இன்றைக்குக் கொண்டு வந்தால் நகரப் பேருந்தில் பல ஆண்களின் தலை வெடித்துக் கொண்டே இருக்கும் என்ன சற்றேனும் நகைப்பு வருகிறதா
கருத்துரையிடுக