திங்கள், மே 15, 2006

இரா,கி அவர்களுக்கு


என் பெற்றோரின் மணிவிழாவில் எனக்கு மற்றுமொரு புதிய அனுபவம் கிடைத்தது.இரா, கி அவர்களை நேரில் சந்தித்த வாய்ப்பு அது. நல்ல வாய்ப்பு.

அவர்கள் என்னைச் சந்தித்ததும் சொன்ன முதல் தொடரே உன் மானிடள் வலைப் பூவை நான் பார்த்தேன், படித்தேன்.என்பது தான். எனக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது. ஆச்சர்யம் மனதுள் குடி கொண்டது. மகிழ்ச்சி தொடர்ந்தது. வலைப்பூவை ஆரம்பித்த பொழுதினும் பெரிது உவந்தேன். நேருக்கு நேராக என்னை அடையாளம் கண்டு கொண்டு என் பதிவையும் அடையாளப் படுத்திய அவர்களின் மேன்மைக்கு உயரிய வணக்கம்.

அவர்களின் வளவு http://valavu.blogspot.com/2004/06/blog-post_07.html அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்கள். மறக்க முடியாத அனுபவம் அது.

மேலும் அவர்கள் மானிடள் என்ற தமிழ்ச் சொல்லுக்கு சரியான ஒலிபெயர்ப்பு MAANIDAL என்பதாக இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்கள். அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப என் தலைப்பை மாற்றம் செய்துள்ளேன். நன்றி. மாற்றம் சொன்னவருக்கு நன்றி
கருத்துரையிடுக