kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 09, 2011

அறந்தாங்கி நண்பர் கவிஞர் அஜயின் கவிதை பின்வருமாறு


ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது

இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு

எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்

அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல


க, அஜய் குமார்
அறந்தாங்கி

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

சொல்லி மாள்வதில்லை

தாத்தா இறந்து பல நாள்கள்
ஆகின்றன
அவர் இறப்பின் துக்கத்தின்
கடைசி நிமிடங்கள் சந்திக்க
இயலாதாயின
அதனால்
அவர் இன்னும் இருப்பதாக மனம் எண்ணுகிறது
அவர் சொல்லித்தந்தது பல நல்ல விசயங்கள் விருந்துக்கு அழைத்துப்போவார்
வேண்டுவன குறைவன பார்த்து விருந்தை
ருசிக்கக் கற்றுத் தந்தார்
இலையில் மிச்சம் மீதி
குறைவின்றி முழுமையாக்கும்
பழக்கம் அவரிடம் இருந்து பெற்றதே

இன்னும் பல நினைவு கூர்வார்
என் அப்பா அவருக்கு மச்சினன் முறை
அதனால் அவரின் சிறு வயதுக் கன்னங்களைக்
கடித்து மகிழ்ந்தது கூறுவார்।

என் அப்பா அவரின் மருமகன் ஆனது
அடுத்த நிகழ்வு

தபால் நிலையத்தில் சண்டை போட்ட
விசயம் சொல்வார்।
வங்கியில் வேலை பார்த்தவர்
இப்போதைய வங்கிப்
பணியாளர்களின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்
சேர்த்து வைக்கப் பழகியவர்
அது தனக்கல்ல என தன்னைச்
சுருக்கிக் கொண்டவர்
மகன்கள் இப்போது பெருக்கிக் கொண்டிருக்கிறhர்கள்
மகளுக்கு ஒன்றும் சேர்க்கவில்லை
என்ற நினைப்பில் உறுதியாய் நின்றவர்
கடைசி காலணுகளில்
தன் துணை இழந்து
உணவிற்கு பிறர் கரம் நோக்க வேண்டிய துயரம் ஆறாது
மனைவியின்
அருமை அப்போது மட்டுமே
உணர்ந்தவர்
இறப்பின் மிச்சங்கள் அவரின்
கைப்பிடி அறுந்துபோன பெட்டியில்
இருந்ததாய் அம்மா சொன்னாள்
வங்கியின் நிரந்தர வைப்புகள் மகன்கள்
பெயரில் கெட்டியாய் சாகும் வரை
காப்பாற்றியது அதுமட்டுமே
இன்னும் இருக்கிறார்
இருபது வருடங்களுக்கு நிரந்தர
வைப்பின் கால அளவு அது வரை உள்ளதே

செவ்வாய், ஜூன் 05, 2007

குரல்கள் மாறிப் போகின்றன

குரல்கள் மாறிப் போகின்றன
அரசியல்வாதிக்கு ஒருகுரல்
மேடைப்பாடகனுக்கு ஒன்று
இலக்கியவாதிக்கு ஒன்று
பட்டிமன்ற நடுவருக்கு ஒன்று

கணவனுக்கு ஒன்று
மனைவிக்கு ஒன்று
பிள்ளைக்கு ஒனறு
எனக் குரல்களில் பல மாற்றங்கள் உண்டு

குரல்கள் தடிப்பு ஏறிப்போய்
கரகரத்து விலைக்காக வேளைக்கொன்றாகப் பேசும் எதிராளியைச் சொறிந்துவிடும்

ஆணுக்கொரு
குரல்
பெண்ணுக்கு
ஒருகுரல்
குழந்தைக்கு ஒன்று
இளைஞனுக்கு உடைந்த குரல்
ஆண்குரல் பெண்ணுக்கு இருந்தாலும்
பெண்குரல் ஆணுக்கு இருந்தாலும் குரல்பேதம் காட்டிக் கொடுத்துவிடும்

போராட்டக்குரல்
சண்டைக்குரல்
மௌனக்குரல்
கலகக்குரல்
கேலிக்குரல்
அடிமைக்குரல்
அன்புக் குரல்
ஆசைக்குரல்
இன்பக்குரல்
துன்பக்குரல்
கேட்ட குரல்
கேட்காத குரல்
இவை எல்லாவற்றுக்கும் தனித் தனி முத்திரை உண்டு

உண்மைக்குரல்
ஒலிபெருக்கிக்குரல்
வானொலிக்குரல்
தொலைக்காட்சிக்குரல்
திரைப்படக்குரல் இத்தனைக்கும் வேறுபாடுண்டு

நூலிலை குரல் வித்தியாசம் கூட விபரீதத்தை உண்டாக்கிவிடலாம்
கணவனது குரல் என
ஏமாந்து கள்வனின் குரல் அதுவாகலாம்

குழந்தையின் குரல்
இது என வேறுகுரலுக்குப் பால்சுரக்கலாம்

மனைவியின் குரல் இது
என மயக்கம் கொள்ளலாம்

மனைவியின் குரலில்
காதலியைத் தேடலாம்,
காதலன் குரலில் கணவனைக் காணலாம்
குரல் பேதம் குறிப்பிடத் தக்கதே