நேரத்திற்கு ஏற்றார்போல்
நிறம் மாறும் பச்சை மனிதர்கள்
தன்னையே மாற்றிக்
கொள்ளத் தயங்காத
இவர்களின் குறி சுயநலம் மட்டுமே
இவர்கள்
நாக்கின் சுழற்சியில்
பொய் பல நாள்
வெளியாகும்
மெய்
ஒரு நாள் கூட வெளிவராது
நடிப்பதில்
நாகரீகக் காரர்கள் இவர்கள்
ஏதோ
உலகின் நன்மைக்காகத்
தன்னை பிறப்பித்ததாகக்
கௌரவம் பேசுவார்கள்
இறுதிவரையிலும்
இவர்கள் தோற்பது கிடையாது
எவர்க்கு எந்நிறம்
தேவையோ அந்நிறம்
இவர்களின் நிறம்
எறும்பு கூட
இவர்களின் சொல்படி
நடப்பதாக நம்பிக்கை கொள்கிறார்கள்
உலகில்
எத்தனை எறும்புகள் உள்ளன
என்ற கணக்கெடுப்பில்
உள்ள நியாயம் இவர்களுக்குத் தெரியாது
தன்னைத் தானே
பார்த்துப் பாராட்டிக் கொள்ளும்
விநோத வழக்கம் இவர்களுக்குள் இருக்கும்
எச்சரிக்கையா இருங்கள்
உங்கள் நிறத்தை
இவர்கள் அழித்துவிடக் கூடும்
1 கருத்து:
பழனி அப்பன் சார்,
//உலகில்
எத்தனை எறும்புகள் உள்ளன
என்ற கணக்கெடுப்பில்
உள்ள நியாயம் இவர்களுக்குத் தெரியாது//
அருமையான கவிதை, உங்கள் மற்ற எழுத்துக்களையும் தொடர்ந்து படித்துவருகிறேன். அருமை.
கருத்துரையிடுக