திங்கள், மே 15, 2006

வலி


முதுகில் இருந்து
வலியின் பயணம்
உச்சந்தலை வரை பாய்கிறது

வெந்நீர் ஒத்தடம்
தேங்காய் எண்ணெய் பூச்சு
எதற்கும் அடங்காமல் வலி பெருகும்

எதிரில் பட்டவரெல்லாம்
எதிரியாக எண்ணுகிறது மனது

வலியின் உக்கரம்
கூடுகிறதே அன்றி குறையவே இல்லை

வலியோடு
எத்தனை நாள்தான்
பொழுதுகளை நகர்த்துவது

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு எவ்வளவு கனம் என்று

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு
எவ்வளவு வலிமையற்றது என்று

வலிக்கும்போதுதான்
தெரிகிறது இந்த உடம்பு இனி வேண்டாம் என்று

வலி உடம்புக்கு
மட்டுமல்ல உள்ளத்திற்கும்

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

அனாசின் விளம்பரமெல்லாம் பார்தது இல்லையா ? அனாசின் மூன்று வழிகளில் குணம் அளிக்கிறது, தலைவலி, மூச்சடைப்பு மற்றும் சுரம்.

சரி ஒரு கிச்சு கிச்சுக்காக சொன்னேன். நல்ல கவிதை. உடல் சரியென்றால் உள்ளம் உடைந்து போகும் என்ற பொருளில் இருக்கிறது. தொடருங்கள் நண்பரே

palaniappan சொன்னது…

கவிதையைக் கண்டமைக்கு நன்றி
பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி
வலித்ததால் வந்த கவிதை இது
அநாசின் தர ஆளில்லை
இருந்தால் கவிதை வந்திருக்காது
சும்மாவாச்சும் இந்த நக்கல்
நன்றி