செவ்வாய், நவம்பர் 10, 2026

வள்ளலார் காட்டும் உணர்வுநலன்

 


வள்ளலார் காட்டும் உணர்வு நலம்

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,

 அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி , திருவாடானை

கட்டுரையின் சுருக்கம் 

Emotional and Spiritual Well-being Formulated by Vallalar
This research paper by Dr. M. Palaniappan evaluates the spiritual realism and emotional parameters of the iconic Tamil saint Ramalinga Swamigal, widely known as Vallalar. Drawing context from his monumental work, Thiruvarutpa, the paper presents a structural framework for converting human ignorance into pure divine realization.
  • The Core Intent of Birth (நான் ஏன் பிறந்தேன்): Vallalar asserts that most humans spend their life cycles in a mundane state without questioning the purpose of their birth. He emphasizes that the Divine creates every soul with a hidden ultimate purpose (Meikkharuthu). This core intent can only be decoded when an individual surrenders their ego entirely to divine grace.
  • The Catalogue of Ignorance (அறியாமை பலப்பல): The paper details Vallalar's extensive classification of human ignorance. Despite displaying superficial intellect, humanity remains ignorant of shedding ego (Agangaram), mastering pure focus, overcoming sensual traps, dissolving barriers like caste, religion, or creed, and neutralizing the fundamental fear of death.
  • Realization and Spiritual Wealth (சிவஞானப் பெருஞ்செல்வம்): Vallalar stands as a living testament to an individual who actively uprooted negative impulses, purified his cognitive thoughts, and integrated with the Divine Light (Arutperunjothi). The author highlights that Vallalar's ultimate spiritual mission was not to accumulate personal enlightenment, but to unconditionally distribute this supreme wealth of divine wisdom (Sivagnana Perunchelvam) to all human souls, helping them break free from earthly bondages.

 

உணர்வுகள்  என்பன அகநிலை அனுபவங்களுக்கு ஏற்ப  உடல் செயலாற்றும் வினைகளும், எதிர்வினைகளும் ஆகும். வெளிப்புறத் தூண்டல்களால்  ஒரு மனிதருக்குள் ஏற்படும் மனநிலை உடல் நிலை மாற்றங்கள்  உணர்வுகள் ஆகின்றன. அன்பு, அச்சம், கோபம், மகிழ்ச்சி, துன்பம் போன்றன  உணர்வுக்களங்கள் ஆகும். இவை மனிதனை ஆட்டுவிக்கின்றன. இயங்கச் செய்கின்றன.  வள்ளலார் தனிமனித அனுபவம் பெற்றவர். தன் அனுபவத்தில் முயன்று வென்று தன்  அனுபவ உணர்வுகளை அருட்பாக்களாக உலகிற்கு அளித்தவர். அவரின்  உணர்வு நலத்தை  அறிவதன் வாயிலாக நாம் நம்மை நல்லுணர்வு உடையவர்களாக உயர்த்திக் கொள்ள இயலும்.

நான் ஏன் பிறந்தேன்

            நான் ஏன் பிறந்தேன்? என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எழ வேண்டிய கேள்வி. இக்கேள்வியையும் அறியாமல், இதற்கான சரியான பதிலையும் உணராமல் மனிதர்கள் பதடிகளாக வாழ்வினைக் கழித்து வருகிறார்கள். வள்ளலார் தான் ஏன் பிறந்தேன் என்று எண்ணி  தன் சிந்தனைகளை வழங்குகிறார். இச்சிந்தைனைகள் ஒவ்வொரு மனிதருக்கும் உரியது.

‘‘வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.’’ (நான் ஏன் பிறந்தேன் பாடல் 5)

என்று மகத்தான மனிதப் பிறவியில் பிறந்தும்  பிறந்ததற்கான காரணத்தை அறியாமல்  தெரியாமல் வாழ்ந்து வரும் நிலையை வள்ளலார் காட்டுகின்றார். இறைவன் ஒரு மெய்க் கருத்தை உணர்ந்தே ஒவ்வொரு உயிரையும் படைப்பிக்கிறான்.  இறைவன் படைத்த அந்தக் காரணத்தை எளிதில் அறிய இயலாது.  இறைவனை நம்பி அவனிடத்தில் நம்மை முழுவதும் ஒப்படைக்கும் நிலையில் நாம் பிறந்ததற்கான மெய்க்கருத்து அறிய வரும்.

             மனித உயிர்கள் பிறந்ததற்கு  ஒரு மெய்க்காரணம் இருக்கிறது அதனை அறிந்து அந்த மெய்க்காரணத்தின் நிறைவை எட்டிப் பிடிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது.

அறியாமை பலப்பல

            மனித குலம் எல்லாம் அறிந்தது போல் திரிகிறது. ஒன்றும் அறியாத நிலை மனித குலத்தின் நிலையாகும்.மேலும்  அவரின் பட்டியல் விரிகிறது.  அகங்காரத்தை நீக்குதல் அறியவில்லை. கற்கும் முறை கற்றறியேன். காமக் பெருங்கடலை நீந்தும் வகை அறியேன். சித்த நிலை அறியேன். சித்தாந்த நிலை அறியேன். யோகம் அறியேன். கலை முடிவு அறியேன். கதி அறியேன். சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டறியேன். சாகாத தலை அறியேன். வேகாத காலின் தரம் அறியேன்.  மெய்நெறி அறியேன். ஆகாய நிலை அறியேன். மாகாய நிலை அறியேன். மரண பயம் தவிர்க்க அறியேன். சன்மார்க்கமதை அறியேன். சினமடக்க அறியேன். இவ்வாறு அறியமை பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது.     அறியாமையை நீக்கி  இறையருள் பெற மனித குலத்திற்கு வழிகாட்டுகிறார் வள்ளலார்.

மெய்க்கருத்து உணர்தலும், உணர்த்தலும்

            வள்ளலார்   மனித குலத்தின்  தீய நினைவுகளை அகற்றி தூய நினைவுகளுக்குள் புகுத்தி, மெய் கருத்தினை அடைய வழி சொல்பவராகவும்  அடைந்தவராகவும் விளங்குகிறார். அவரே  தீய நினைவுகள் அகற்றி தூய வாழ்வில் நிலைத்து மெய்க்கருத்தினை அடைந்த அனுபவத்தினராக விளங்குவதால் திருவருட்பா முழுவதும் மனித குல விடுதலைக்கான  நூலாக விளங்குகின்றது. அவர்  பெற்ற இறை அனுபவம் புதிது. அதனை மனித குலமும் அடைய அவர் வழி  உரைக்கிறார்.

            ‘‘எல்லாமுஞ் செய வல்ல தனித்தலைவர் பொதுவில்

இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோதியினார்

நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்

இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா

செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.

                                                (அனுபவ மாலை பாடல் 27)

என்று தான் பெற்றதை எல்லார்க்கும் தருகின்றார் வள்ளலார். சிவஞானப் பெருஞ்செல்வம் அடைய ஆசை நீக்கி, அறியாமை நீக்கி அருள் அனுபவம் பெற வேண்டியது மனித குலத்திற்கான கடமையாகும். அதுவே மனிதன் மண்ணில் பிறந்ததற்கான உண்மைக் காரணம் ஆகும்.

கருத்துகள் இல்லை: