மகாகவியும் மகாபாரதமும்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
- The Visionary Source (மகாபாரதச் சிந்தனை மூலம்): While Bharathiyar highly praised classical Tamil works like Thirukkural, Silappathikaram, and Kamba Ramayanam, his poetry is fundamentally anchored in the core philosophies of the Mahabharata. In his 1908 work Swadesha Geethangal, he dedicated the book to his spiritual guru, comparing his own realization of patriotism to Lord Krishna revealing his Viswaroopam (cosmic form) to Arjuna.
- Panchali Sabatham & Gita Translation: Bharathiyar explicitly stated in the preface of his masterpiece Panchali Sabatham that his narrative strictly follows Vyasa's Mahabharata rather than the regional Tamil adaptation, Villi Bharatham. His profound understanding of Sanskrit enabled him to translate the Bhagavad Gita into Tamil, viewing Krishna as the Paramatma (Universal Soul), Arjuna as the Jivatma (Individual Soul), and the Kauravas as the personification of base desires like lust and anger.
- The Philosophy of Karma Yoga: The essence of the Gita's teachings—focusing on performing one's righteous duty without worrying about the fruits or outcomes (Karma Yoga)—forms the inner fabric of Bharathiyar's philosophical and nationalistic songs, such as Kannan Paattu, Arya Dharisanam, and his autobiographical poems.
- Influence of his Living Environments: The author points out that Bharathiyar's life was continuously intertwined with places bearing Mahabharata connections. Born near a Krishna shrine in Ettayapuram, he later lived on Dharmaraja Koil Street in Puducherry (where Panchali Sabatham was born), and spent his final days in Triplicane, Chennai, close to the historic Parthasarathy Temple (dedicated to Krishna as Arjuna's charioteer).
பாரதியார் பாடல்கள் அனைத்திலும் பாரதத்தின் சாயல், கீதையின் சாயல் அமைந்திருக்கின்றது.
திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய மூன்றையும் பாரதியார் சிறப்பித்துப் பாடினாலும் அவரின் கவிதைகளில் ஆழத்தில்
மகாபாரத அடிக்கருத்தே நிலவி நிற்கின்றது.
1908 ஆம் ஆண்டு பாரதியாரின் சுதேச கீதங்கள்
என்ற நூல் வெளியிடப்பெறுகிறது. இதன் முன்பகுதியில் ‘‘ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கிய தொப்ப எனக்குப
பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை
சமர்ப்பிக்கிறேன்’’ என்று குறிப்பிடுகிறார்.
இதன்வழி அவரின் மகாபாரத சிந்தனை மூலத்தை
உணர இயலும்.
பாஞ்சாலி சபத முன்னுரையில் ‘‘எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத்
தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்பென்றே கருதி விடலாம்.
அதாவது கற்பனை திருஷ்டாந்தங்களில் எனது சொந்த சரக்கு அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே
நான் பொறுப்பாளி’’ என்று குறிப்பிடுவதையும் உற்று நோக்கினால் பாரதியார் வியாச பாரதத்தினைக் கற்றுத் தேர்ந்து
அதனைத் தமிழ் மொழிக்குத் தரும் அளவிற்கு வடமொழி அறிவு பெற்றிருந்ததை உணர இயலும். மேலும்
அவரின் மகாபாரத அறிவினையும் அறிந்து கொள்ள இயலும். மகாபாரத தமிழ் ஆக்கமான வில்லி பாரதம்
அவரால் அணுகப் படவில்லை என்பதையும் இங்கு உணர்ந்தாக வேண்டும்.
பாரதியார்
மொழிபெயர்ப்பாகவே அமைந்த பகவத் கீதையில்
‘‘கீதையில்
கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர்
காமக் குரோதிகளென்பதும் சாஸ்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில்
ஊகித்துக் கொள்ளத்தக்கனவாம்’’ என்ற தொடர் அவரின் ஆழ்ந்த மகாபாரதப் பற்றுதலைத் தெரிவிப்பதாகும்.
பகவத் கீதையைக் கவிதையாக்கமாகவும் தரும்
எண்ணம் பாரதிக்கு இருந்துள்ளது. அவர் பகவத்
கீதையின் கவி வடிவத்திற்கு ஒரு காப்புச் செய்யுள் இயற்றியுள்ளார்.
‘‘வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில் பார்த்தனே நீயினிக்கவ லாகரப் போர் செய்தல் நேர்மை என்றதோர் செய்தியைக்
கூறுமென் வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத் தாய் இனிக்கருணை
செயல் வேண்டும் நின் சரண மன்றியிங்கோர் சரணில்லையே’’
என்ற
அக்காப்புப் பாடலில் போர் செய்தல் நேர்மை என்று பாரதியார் கீதையை கவிவடிவாக்க முனைந்துள்ளார்.
‘‘தன்னை நெடு நாட்களாக மறந்திருந்த
பாரத நாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதா சாஸ்திரத்தைக்
கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது
நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.’’ என்று
கண்ணன் பாட்டுக்கான முன்னுரையில் வ.வே. சு ஐயர் காட்டுவது பாரதிக்கு இருந்த மகாபாரத பற்றினைக் காட்டுவதாக
உள்ளது.
‘‘பாரதி கண்ணனை நினைக்கும் போதெல்லாம்
கீதை உபதேசங்களையும் சேர்த்தே காண்கிறார். பாரதக் கதையும் அதில் கண்ணனின் அருஞ்செயல்களும்
கீதை உபதேசமும் பாரதியின் உள்ளத்தில் மிகுந்த தாக்கங்களை உண்டாக்கியிருப்பதைக் காண்கிறோம்’’
என்கிறார் அ.சீனிவாசன் (ஆழ்வார்களும் பாரதியும் ப. 210)
பாரதியாரின் சுயசரிதையில் அவரின் மகாபாரத
ஈரப்பிற்கான அடையாளம் காணப்பெறுகிறது.
"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின்
மீது தனியரசாணை,
பொழுதெல்லாம்
நினது பேரருளின்
நெறியிலே
நாட்டம் கர்ம யோகத்தில்
நிலைத்திடல்
என்றிவையருள்வாய்
குறி குணம்
ஏதுமில்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம்
பொருளே’
என்ற பாடலில் கர்மயோகம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
இவை மட்டும்
இல்லாது ஆரிய தரிசனத்தில் இடம்பெறும் கிருஷ்ணா அர்ச்சுண தரிசனம் என்ற பகுதியில் கீதையின் பிழிவுக் கருத்துகள் தரப்பெற்றுள்ளன.
செய்தலுன் கடனே -- அறஞ்
செய்தலுன் கடனே -- அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே.
என்ற பாடல் பகுதி கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதன் கவிதை
வடிவமாகும்.
கண்ணன்
பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணன் துதி, கண்ணம்மாவின் அங்க வருணனை, கண்ணம்மா குறித்த மூன்று
பாடல்கள், கோவிந்தன் பாட்டு, பாரதமாதா, சத்ரபதி சிவாஜி தன் சைதனய்த்திற்கு கூறியது, லஜபதிராய்
பிரலாபம், கிருஷ்ணன் மீது துதி, சுயசரிதை, நந்தலாலா, கண்ணன் பாட்டு, வேய்ங்குழல், ராதைப்
பாட்டு போன்ற ஆக்கங்களில் பாரதியாரின் மகாபாரதப் பற்று தெரியவருகிறது. பாரதியாரின்
அனைத்துப் பாடல்களிலும் மகாபாரதம் சார்ந்த, வேதாந்தக் கருத்துகள் அமைந்துள்ளன என்பதற்கு
மேற்காட்டியன சிறந்து சான்றுகளாகும்.
கண்ணன் திருப்புகழ் என்ற கண்ணன் மீதான திருப்புகழ் சாயலான பாடலிலும் மகாபாரதக்
கருத்துகளை இனம் காணமுடிகின்றது.
‘‘அயிர்த்த வஞ்சக அரவுயர் கொடியவன்
அமர்க்க ளந்தனில் இனமுடன் மடிதர
அமர்த்த வெம்பரி யணிரத மதைவிடும் -- மறைநாதா
அளப்ப ருங்குண நலமிக நினைபவர்
அகத்தெ ழும்படர் அலரிமுன் பனியென
அகற்று செந்திரு மடமயில் தழுவிய -- பெருமாளே! ’’
என்ற பாடலடிகள் கண்ணன் திருப்புகழுக்குச் சான்று.
பாரதியாரின் சிறுகதைகளிலும் மகாபாரத மீள்
உருவாக்கக் கதைகள் காணப்பெறுகின்றன. அர்ஜுன
சந்தேகம் என்ற கதை சிறந்த கதையாகும்.
‘‘பல வருஷங்களுக்கப்பால் காட்டில் இருந்து கொண்டு துரியோதனாதிகளுக்குத்
தூது விடுக்கு முன்பு, அர்ஜுனன் கிருஷ்ணனை அழைத்து "கிருஷ்ணா சண்டை நல்லதா, சமாதானம்
நல்லதா?" என்று கேட்டான்.
அதற்குக் கிருஷ்ணன்: "இப்போதைக்கு
சமாதானம் நல்லது. அதனாலே தான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்"
என்றாராம்’’
என்ற பகுதி கண்ணனும் பார்த்தனுக்குமான
உரையாடலாக அமைந்து சிறக்கின்றது. இக்கதையில் மகாபாரத பாத்திரங்கள் பலவும் உலா வருகின்றன.
கர்ணன், துரோணர், பீஷ்மர், வியாசர் போன்றோர் இடம்பெறுகின்றனர். அவரவர்கள் சண்டை குறித்தும்
சமாதானம் குறித்தும் பல வகைகளில் உரைக்கின்றனர்.
இவ்வாறு தன் படைப்புகளில் ஊடிழையாகப் பாரதத்தை பெரிதும் பயன்படுத்தியுள்ளார்
மகாகவி பாரதியார்.
பாரதியார் மகாபாரதத்தின்மீது பற்று
ஏற்பட அவரின் வாழ்வுச் சூழலும் ஒரு காரணம்.எட்டய புரத்தில் பெருமாள் கோவில் தெருவில் அவரின் இல்லம் அமைந்திருந்தது. அங்குக் கண்ணனுக்குத்
தனிச்சன்னதி உண்டு. எனவே பாரதியார் பிறந்த
காலம் முதல் கண்ணன் திருப்புகழை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்கு இயற்கையாக அமைந்திருந்துது.
மேலும் அவர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் புகழ் பெற்ற இலக்கியப் படைப்புகளான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்றனவும்
பகவத் கீதை மொழிபெயர்ப்பும் எழுந்துள்ளன. தர்மராசா
கோயில் தெருவில் அவர் நடந்தபோது விளைந்த காவியம்
பாஞ்சாலி சபதம். விளைந்த மொழிபெயர்ப்பு பகவத் கீதை
அவரின் நிறைவுக்காலமும் பார்த்தசாரதிப் பெருமாள், துளசிங்கப் பெருமாள் அணுக்கமுடைய
திருவல்லிக்கேணியில் நிகழ்ந்தது. பார்த்தசாரதிப்
பெருமாள் அர்ச்சுணனுக்குச் சாரதியாக விளங்கியவர்.
இவ்வாறு பாரதியார் வாழ்ந்த இடங்களெல்லாம் மகாபாரதத் தொடர்புடைய இடங்கள் என்பதால்
இயல்பாகவே பாரதச் சிந்தனை பாரதியாரிடமும் மிகுந்துள்ளது. மேலும் தன் பகவத் கீதை மொழிபெயர்ப்பின்
முன்னுரையில் ஆழ்வார்கள் குறித்தும் இராமானுசர் குறித்தும் பாரதியார் எழுதுகிறார்.
பாரதியார் பாடல்களில் பாரதம் அடிப்படையாக
அமைய அவர் நேசித்த தாய்நாடும் பாரதம் என்பதையும் ஒருங்கிணைத்துக்
கொண்டால் மகாபாரதம், பாரதம், பாரதி என்ற சரியான
பொருத்தப்பாடு கிடைக்கும். பாரதம் வாழ மகாபாரதத்தைத்
துணையாக்கிப் பாக்கள் புனைந்தார் பாரதி என்பதே சிறப்பாகும்.
முடிவுகள்
மகாபாரதக் கதை, கீதை போன்றவற்றை வடமொழியில்
கற்ற பாரதியார் அவற்றைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளார். அவரின் விடுதலை எண்ணத்திற்கு
மகாபாரதம் பெரிதும் துணை புரிந்துள்ளது. அவரின் தத்துவச் செழுமைக்கும் மகாபாரதக் கருத்துகள்
உதவியுள்ளன. பாரதியார் படைத்த பெருமளவுப் பாடல்களில் ,உரைநடை ஆக்கங்களில் மகாபாரதத்தின்
தாக்கம் பெரிதும் காணப்படுகிறது. இதற்குக் காணரம் அவர் வாழ்ந்த இடங்கள் மகாபாரத நினைவுகளை
எழுப்பும் இடங்களாக இருந்தது ஒரு காரணம் ஆகும். மேலும் நவீன பாரதத்தைக் கட்டமைக்க,
மகாபாரதம் பாரதியாருக்குத் துணை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக