குன்றக்குடி முருகன் வருகைப் பாமாலை
(9-6-2025)
நல்ல தமிழுக்கும்
நாளும்
தமிழ் வளர்க்கும் புலவர்க்கும்
வெல்லும்
கடவுள் குன்றக்குடி வேலருக்கும்,
செல்லும்
இடமெல்லாம்
தமிழ்ச்சேகரம்
செய்யும் அடிகளார் திருவடிக்கும்
மெல்ல
வந்து கந்தனடி பற்றும் தொண்டர்க்கும்
என் இனிய
வணக்கம்.
வைகாசி
விசாக நன்னாள்
முருகன் உதித்த பொன்னாள்
ஆறு தாமரை
மலர்களில்
அமர்ந்த
ஆண் குழந்தை
ஓர் உருவாய்,
ஒளிமயமாய்
உலகு காக்க
எழுந்த பொன்னாள்
வைகாசி
விசாக நன்னாள்
மலையேறி
மன்னவனைத் தரிசிக்கின்ற
வழக்கம்
மாறி
மன்னவனே
மலையிறங்கி வரும் நன்னாள் வைகாசி விசாக நன்னாள்
குன்றக்குடித்
திருமடத்தில்
வசந்த
மண்டபத்தில்
குளிர்
நீர்ச் சூழலில்
வந்தமரும்
நன்னாள்
வைகாசி
விசாக நன்னாள்
மடமெல்லாம்
நிறைந்திருக்க
மனதெல்லாம் முழுதாக
மங்கலம்
பொலிந்திருக்க
தமிழ்க்
கடவுளைத்
தமிழால்
வரவேற்கும் பெருநாள் திருநாள்
வைகாசி
விசாக நன்னாள்
ஞான வழி
காட்டும்
நம் அடிகளாரின்
இருப்பிடம் தேடி வந்து
அப்பன்
முருகன் ஆதரவாய் நிற்கும் நன்னாள்
வைகாசி
விசாகப் பெருநாள்
அறமனச்
செம்மல்
பட்டம்
பெற்றுச் சிறந்தோர்
அரசியல்
செம்மைச் சான்றோர்
அழகு முருகன்
அடியார்கள்
எல்லோரும்
அருள் பெற்றுய்யும் அருமைத் திருநாள் வைகாசி விசாகத் திருநாள்
எழுநூறு
ஆண்டுகள்
காளத்திநாதர்,
தெய்வசிகாமணி குருமுதல்வர்
ஏற்றி
வைத்த மடவிளக்கு,
அருள்விளக்கு
ஆதீனத் திருவிளக்கு
அனுதினமும்
அவரைத் தொழுகின்றோம்
குருவடிவ
குமரகுருபரா வருக முருகா வருக
ஒரு நூறாண்டு
இலக்கியமாய்
ஆன்மீக
இலக்கணமாய்
அருள்
ஊற்றாய் சமுதாய மாமுனியாய்த்
தமிழ்
மாமுனிவர் தவம் செய்த புண்ணிய பூமி
குன்றக்குடி
குன்றா
அழகுடைய குமரா தமிழாய் தயை கூர வருக!! வருக!!
எழுநூறு
ஆண்டு மடத்தின் வரலாறு
நூறாண்டு
சமுதாய மாமுனிவரின் சாதனைப் பொன் ஆண்டு
இவ்வாண்டு
அடிகளாரின்
நூறாண்டைக் கொண்டாட வந்த மாமுருகா
உமக்குப்
பல்லாண்டு கூறுதும் வருக!! வருக!!
எழுநூறாண்டு
நூறாண்டு
தொடரும் வரிசையில்
அறுபத்து
ஆண்டு
அருள்
சுரக்கும் பொன்னம்பல ஆண்டு
பல்லாண்டு
பல்லாண்டு பாடுகிறோம்
பரமனின்
பாலனே! வருக!! வருக!
அருணகிரியார்
பாடிய அற்புதம் நீ
குலகிரி,
துங்ககிரி, உயர் குன்றக்குடி வளர் கந்தப் பெருமானாய்
அருணகிரியார்
துதித்த அற்புதம் நீ
அருணகிரி
அழைத்த முருகா அருகே நீ வருக!!
மழலைச்
செல்வம்
வேண்டினால்
கிடைக்கும் குன்றக்குடிப் பதிகம்
உந்தன்
பெருமைக்குச் சான்றாகும்.
குமரா!குறவஞ்சிக்கும்
இறைவனே! குமரனே! மணவாளனே!
கொன்றை
சூடிய கோல மன்றுள் ஆடுவர் பால குன்றை மாநகர்வேளே!
என்று
முத்திரைப் பதிகம் கொண்ட ஆறுமுகநாதனே வருக!! வருக!
சற்று
பொறு
உன் பெயரால் மாநாடுகள் தயாராகின்றன.
முருக
மாநாடுகள் நடப்பது தற்போது நாகரீகமாகிவிட்டது
மதுரை
மாநாட்டுக்கு உனக்கும் அழைப்பு வந்திருக்கலாம்
பழநி மாநாடு
முடிந்த அயர்வு இன்னும் தீரவில்லை.
அடுத்த
மாநாட்டிற்கு உடன் தயாராகுக முருகா!
பார்த்துப்
பார்த்து மாநாட்டிற்குப் போ!
பக்கத்தில்
திருப்பரங்குன்றம் இருக்கிறது.
குன்றத்தில்
அரசியல் இருக்கிறது
எதில்தான்
அரசியல் இல்லை?
எந்த அரசியலும்
உன்முன் நில்லாது!
அரசியலின்
அதிகாரமே! ஆனைமுகன் தம்பியே வருக ! வருக!
வேல் தூக்குவார்
அரசியல்
ஆக்குவார்
கவசம்
படிப்பார்
கரகரப்பாய்
அதிலும் அரசியல் நொடி வீசும்
முருகனே
மூத்த தமிழ்க்குடி என்று
ஒரு கோஷம்
எழும்
எல்லாவற்றையும்
பார்த்திருப்பாய்!!
எல்லாவற்றையும்
பொறுத்திருப்பாய்!!
உன்பேர்
சொல்லி
உயரம்
அடைய நினைப்பவர் மனதிலும்
நன்மை
புரிய நலமாய் வருக முருகா!
எத்திக்கும்
உனது அருள் பெருகட்டும்
தித்திக்கும்
தேன்பாலாய் உனதருள் எமக்கு வந்து சேரட்டும்
பக்திக்கும்
முக்திக்கும் நீயே துணை
வருக முருகா!
நல்ல வரம் தருக முருகா!
உயரத்திற்கு
எங்களை உயர்த்து முருகா!
குன்றத்து
விளக்கே!
குன்றக்குடி
அழகே!
அடியார்
தொழும் அருளே!
அடிகளார்
வணங்கும் அன்பே! தவமே ! அன்புத் தவமே!
வருக!
வருக!! வருக!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக