சோகம், சுகம், தத்துவம் = கண்ணதாசன்
முனைவர் மு.பழனிப்பன்
முதல்வர்
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
திருமயம்
கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில்)
- Introduction to the Poet: Written by Dr. M. Palaniappan, the essay introduces Kaviriasu Kannadasan (born in Sirukudalpatti) as an unparalleled ocean of literature, whose contributions to prose and poetry remain unmatched in size, emotion, and philosophical depth. [1]
- Devotion to Bharatiyar: Kannadasan looked up to Mahakavi Bharathiyar as a divine teacher and a once-in-a-millennium phenomenon. However, he humbly rejected comparisons to Bharatiyar, stating that while he wrote poems amidst personal crises, Bharatiyar wrote poems to solve the nation's crises. [1]
- Spiritual Turn: Originally a rationalist, a near-death accident and his subsequent interaction with the Kanchi Periyavar drastically transformed his perspective, channeling him into the world of spirituality. [1]
- The Philosophy of Change: In his famous poem "Kavignan Yaan Orr Kaala Kanitham", he defines himself as a time-calculator of fate. He declares that "Change is my human philosophy," embracing life's dualities of praise and criticism, wealth and poverty.
- The Triad of Cinema Songs (Sogham, Sugam, Thathuvam): When composing for a film, Kannadasan beautifully blended three distinct elements to capture the complete human experience:
- Sugam (Joy/Romance): Celebrated through iconic melodic hits like "Kaalangalil Aval Vasantham", where he paints vivid romantic listicles using milk, dew, and eyes as metaphors.
- Sogham (Melancholy/Tragedy): Evoked profound sorrow through heartbreaking numbers like "Malarndhum Malaraadha" and "Idaya Veenai", using symbols like melting wax and broken sculptures to mirror emotional ruin.
- Thathuvam (Philosophy): Simplified complex existential truths for ordinary people. Through songs like "Panathottam" and "Nallavarkellam Satchigal Rendu", he reflected on human evolution, the importance of conscience, and the continuous search of the human mind.
சிறுகூடல்
பட்டியில் பிறந்த பெருங்கடல் கவியரசு கண்ணதாசன். உரைநடை இலக்கியத்திலும், கவிதைப் புனைவிலும் தனக்கென தனித்த இடத்தையும், அளவால் பேரளவினையும், தரத்தால் மேன்மையையும் தொட்ட
சிறந்த படைப்பாளர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அவர் தன் வாழ்வில் கண்டடைந்த அனுபவங்களின் வழியாக
எளிமையான தத்துவங்களைத் தனது படைப்புகளில் தந்த பெருமையர். குறிப்பாக திரையிசைப் பாடல்களில் அவர் தந்த அனுபவ
முத்துகள் அவருக்கு முன்னாலும் அவருக்குப் பின்னாலும் யாராலும் தரமுடியாதன. அவர் அடைந்த
உயரத்தை யாரும் எட்டிப் பிடிக்க முடியாதவை
பாரதியாரைத்
தன் முன்னவராகக் கொண்டு, படைப்புத் துறையில் கால் பதித்தவர் கண்ணதாசன். அவர் பாரதியாரை
‘‘ ஞானப் புலவன், நல்லாசிரியன், சாதிகள் இடுப்பை ஒடித்தவன், ஆயிரம் ஆண்டில் அதிசயமாக
ஒரு முறை பிறக்கும் உயர்ந்த பிறப்பு’’ என்று
பாரட்டுகிறார். மற்றவர்கள் அவரை பாரதியாரோடு
ஒப்பிடுவதைக் கூட அவர் விரும்பவில்லை. ‘‘தான்
நெருக்கடியில் கவிதைகளை எழுதுகிறேன். ஆனால்
பாரதியார் நெருக்கடிகளைத் தீர்க்கக் கவிதைகளை எழுதியவர்’’ என்று அவர் குறிப்பிட்டு
பாரதியுடன் தன்னை ஒப்பிடுவதை அவர் விரும்பவில்லை.
அவர் பகுத்தறிவுவாதியாக இருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட
விபத்து, அக்காலத்தில் காஞ்சிப் பெரியவருடன்
ஏற்பட்ட தொடர்பு அவரை ஆன்மீக உலகத்திற்கு மடைமாற்றியது.
கவிஞன் யான்
ஓர் காலக்கணிதம்
தன்னைப் பற்றிக் கண்ணதாசன் ”கவிஞன் யான்
ஓர் காலக்கணிதம்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வரைந்துள்ளார்.
‘‘கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
… பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லாயின் எமர் இல்லந் தட்டுவேன்
… புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுங்கள் தீர்ப்பு
.. மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்’’
என்று
தன்விமர்சனம் செய்து கொள்கிறார். இக்கவிதையில்
இடம்பெறும் ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன் என்பதே கண்ணதாசன் வாழ்க்கை ஆகும். பொருள் இருந்தால் மற்றவர்க்கு அளிக்கும் அவர் இல்லாத நேரம் தன் சொந்தக்காரர்களின் இல்லக்கதவுகளைத்
தட்டும் பண்பினர். மாற்றம் என்ற மானிடத் தத்துவத்தின்
மகிமை உணர்ந்தவர் கண்ணதாசன். எல்லாக் கவிதைக்குள்ளும்
அவரின் அனுபவத் தத்துவம் வெளிப்பட்டு நிற்கும்.
சோகம்- சுகம் – அனுபவம்
கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் தனக்கென்
தனித்த முத்திரை பதி்த்தவர். அவரின் பாடல்களை
அவரின் பெயர் அடையாளம் சொல்லப்படாவிட்டாலும் கண்டறிந்துவிடலாம். அந்த அளவிற்குக் கண்ணதாசன் தனித்தன்மை
வாய்ந்த கவிதைகளை எழுதியவர். அவரின் கவிதைகளை வாசகரும் தனிப்பட அறியும் வாய்ப்பு பெற்றவர்களாக
இருப்பார்கள்.
அவர் ஒரு திரைப்படத்திற்கு முழுவதும் பாடல்கள்
எழுத அமர்ந்தால் ஒரு சோகப்பாடல் ஒரு சுகப்பாடல் ஒரு தத்துவப் பாடல் என்ற கூட்டிணைவில்
எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். இந்த வகைமைக்குள் திரைப்படத்தின் கதையும் வந்துவிடும். திரைப்பட பாத்திரங்களின்
தன்மையும் வந்துவிடும். இத்தகைய வளமான எழுத்து
கண்ணதாசனின் எழுத்து ஆகும்.
சுகராகம்
‘‘காலங்களில் அவள் வசந்தம்” என்ற தொடக்கமுடைய
பாடல் எல்லாராலும் விரும்பப்படும் சுகராகம்
ஆகும். அதில் உயர்ந்த அத்தனையும் பட்டியல் இடப்பெற்றிருக்கும். ‘‘பால் போல் சிரிப்பதில் பிள்ளை, அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி, கண்போல் வளர்ப்பதில் அன்னை, அவள்
கவிஞனாக்கினாள் என்னை ” என்ற பாடலடிகளில் கண்ணதசானின்
சுகராகத்தை உணர முடிகின்றது.
பேசுவது கிளியா ( பணத் தோட்டம்), பறவைகள்
பலவிதம் ( இருவர் உள்ளம்), பறக்கும் பந்து பறக்கும் ( பணக்காரக் குடும்பம் ) போன்ற
பாடல்கள் சுகராத்தின் வெளிப்பாடுகள்
சோக கீதம்
சோகத்தில் நம்மை அழவைக்கும் பல பாடல்கள்
கண்ணதாசனால் இயற்றப்பெற்றுள்ளன. மலர்ந்தும்
மலராத, மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் போன்றன
சோக கீதங்கள். பல்லாக்க வாங்கப் போனேன் நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக என்ற பாடலும்,
இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண்முடியுமா …உருகி
விட்ட மெழுகினிலே ஒளி ஏது, உடைந்து விட்ட சிலையினிலே அழகேது, பழுது பட்ட கோயிலிலே தெய்வம்
ஏது, பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது என்ற கேள்விகளில் சோகம் உறைந்து கிடக்கிறது. மலர்
கொடுத்தேன் என்ற தொடக்கமுடைய பாடல் சோகத்திற்கும்
சுகத்திற்கும் ஒரே வரிகளை உடையதாக இயற்றப்பெற்றுள்ளது.
தத்துவ கானம்
எளிய தத்துவங்களின் இனிய பதிவேடு கண்ணதாசனின்
பாடல்கள் ஆகும். பணத்தோட்டம் பற்றிய கண்ணதாசனின்
தத்துவக் கண்ணோட்டம் சிறப்பாகும். குரங்கு
வரும் தோட்டமடி பழத் தோட்டம், வண்டு வரும்
தோட்டமடி மலர்த்தோட்டம், மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் மனிதன் விளையாடும் இடம் பணத் தோட்டம் மனத்தோட்டம் போடுமேன்று மாயவனார் கொடுத்த உடல் பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி என்பதில் மனிதன் மனத் தோட்டத்தின் இயல்பு தெரியவருகிறது.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா”
என்பதும் நல்ல தத்துவம்.
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே,
என்பது எத்தனை பெரிய தத்துவம்.
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத்
தேடினான்
நே்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
என்று மனித வாழ்க்கையின்
பரிணாம வளர்ச்சியைக் கணக்கிடுகிறார் கண்ணதாசன்.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
என்று நினைவிற்கும்
உறவிற்குமான தொடர்பினை அறிவிக்கிறார் கண்ணதாசன்.
இவ்வாறு சோகம், சுகம், தத்துவம் கலந்து தன் கவி முத்திரையைப்
பதிக்கிறார் கண்ணதாசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக