செவ்வாய், நவம்பர் 10, 2026

எல்லோரும் வாங்க (நாடகம் )



காட்சி 1

இடி இடிக்கிறது

மழை பொழிகிறது

காற்று அடிக்கிறது

மின்னல் வெட்டுகிறது

 

வெள்ளம் வருகிறது

வெள்ளம் வருகிறது

ஓடுங்கள், ஓடுங்கள்

ஊரை விட்டு ஓடுங்கள்

-----------------------

காட்சி  2

முருகா! கடவுளே காப்பாத்து!

 எங்கள் பிதாவே காப்பாத்து!

எல்லாம் புகழும் இறைவனுக்கே

எல்லாம் வல்ல இறைவா

எங்களைக் காப்பாத்து !!

 ----------------------------

காட்சி 3

வெள்ளம் வருகிறது

வெள்ளம் வருகிறது

ஓடுங்கள், ஓடுங்கள்  ஊரை விட்டே  ஓடுங்கள்

காட்சி 4

மேடான ஊர் வந்தோம்

எல்லோரும் தப்பித்தோம்  

கடவுள் காப்பாத்தினார்

ஜீசஸ் காப்பாத்தினார்

கருணைமிகு அல்லா காப்பாத்தினார்

-------------------------------

காட்சி 5

எங்க ஊரு சந்தனக் கூடு

எல்லாரும் வாங்க

எங்க ஊரு கிறிஸ்துமஸ்

எல்லாரும் வாங்க

எங்க ஊரு கோயில் திருவிழா

எல்லாரும் வாங்க

-------------------------

 காட்சி  6

இடி இடிக்கிறது

மழை பொழிகிறது

காற்று அடிக்கிறது

மின்னல் வெட்டுகிறது

 

வெள்ளம் வருகிறது

வெள்ளம் வருகிறது

ஓடுங்கள், ஓடுங்கள் ஊரை விட்டு ஓடுங்கள்

 காட்சி 7

ஏழை விவாசாயி நான்

என்ன செய்வேன் நான்

மழையும் குறையல

வெள்ளமும் வடியல

வயிறு பசிக்குது

என்ன செய்வேன் நான்

-------------------------

காட்சி 8

ஏழை ஆசாரி நான்

என்ன செய்வேன் நான்

மழையும் குறையல

வெள்ளமும் வடியல

வயிறு பசிக்குது

என்ன செய்வேன் நான்

காட்சி 9

ஏழை பூசாரி நான்

என்ன செய்வேன் நான்

மழையும் குறையல

வெள்ளமும் வடியல

வயிறு பசிக்குது

என்ன செய்வேன் நான்

 

 

காட்சி 10

பூசாரி, ஆசாரி , விவசாயி

எல்லாரும் வாங்க

எங்க வீட்டுக்கு

உங்கள் பசிக்கு நான் கூழ் ஊற்றுவேன்

சாதியில்ல மதமுமில்ல

பேதமில்லை 

நாம் அனைவரும் இந்திய மக்கள்

நாம் அனைவரும் ஒரு தாய்  பிள்ளைகள்

எல்லாரும் ஒன்னா உட்காருங்க சாப்பிடுங்க

---------------------------------------------

எல்லாருக்கும் பசி ஒண்ணுதான்

எல்லாருக்கும் தூக்கம் ஒண்ணுதான்

எல்லாருக்கும் மகிழ்ச்சி  ஒண்ணுதான்

நல்லா தூங்குங்க நல்லா தூங்குங்க

சாதியில்ல , மதமுமில்ல நம்ம நாட்டுல

பேதமில்லே வேறுபாடு இல்லே நம்ம நாட்டுலே

---------------------------

காட்சி 11

வெள்ளம் வடிஞ்சு போச்சு உள்ளம் ஒண்ணு ஆச்சு

ஊருக்குப் போவோம் எல்லோரும்

நமக்கு இனி வேற்றுமை இல்லை

ஒற்றுமைதான்.

கருத்துகள் இல்லை: