பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் உணர்வாளர். தமிழ்க் கவிதையாளர். தமிழை
உயிரெனப் போற்றிய உயர்வாளர். தமிழுக்கும் அமுதென்று பெயர், அந்தத்தமிழ் எங்கள் உயிருக்கு
நேர் என்று கொள்கை முழக்கம் செய்தவர். அவரின் படைப்பு ஒவ்வொன்றிலும் எழுத்து ஒவ்வொன்றிலும் தமிழின் உயர்வும், தமிழரின்
மாண்பும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
தம் கவிதைகளில் தமிழ் முழக்கம் செய்த பாவேந்தர் தனது கட்டுரைகள் இதழ்
தலையங்கம் போன்றவற்றிலும் தமிழ் வளர வழிவகை செய்தவர். தமிழைப் புறக்கணிக்கும் நிறுவனங்கள், தலைவர்கள்
அனைவரையும் நேருக்கு நேராக எதிர்க்கும் குணம் பாரதிதாசனிடம் இருந்தது. அவர் கொண்டிருந்த
தமிழ் உணர்வுக்கு ஈடு இணை இல்லை. இக்காலத்தும் அவரின் எழுத்துகளே தமிழ் வளர, தமிழ்
பெருக வழி வகை செய்து வருகிறது.
தமிழன் யார்?
தமிழன்
யார் ? என்ற அடிப்படை கேள்விக்குப் பாவேந்தர்
பின்வருமாறு பதில் தருகிறார்.
‘‘தமிழ்நாடு,
தாய்நாடு,
தமிழே தாய்மொழி,
தமிழர் ஒழுக்கம்
தனதொழுக்கம்’’
என்னும் இம் மூவகைப்
பேறும் பெற்றவன் தமிழன். மற்றவன் பிறனே1
தமிழ்
வளர பாவேந்தர் தரும் வழிகள்
பாவேந்தர் நாளும் தமிழ் வளரப் பாடுபட்டவர்.
அவரின் இதழ்களில் கட்டுரைகளாக, தலையங்கங்களாக தமிழ் உணர்ச்சி மையமிடப்பெற்றது.
அவற்றில் குறிக்கத்தக்க செய்திகள் பின்வருமாறு
1.
நம்
தாய் மொழியையும் அதன் தொடர்புடைய கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் ஆகிய மொழிகளையும்
எல்லோரும் படிக்கும்படி செய்யவும், ஆராய்ச்சி செய்து உலகின்முன் வைக்கவும் முன்னுக்குக்
கொண்டு வரவும் தமிழர்கள் ஆவன செய்ய முற்பட்டதுண்டா?
2.
உலகுக்கு முதற்கண் தமிழர் அருளிய அறம், பொருள், இன்பம்,
வீடு பற்றிய தமிழ் நான்மறை பற்றியும் அதனோடு தொடர்புடைய தமிழ்த் தத்துவநூல், இலக்கியங்கள்
பற்றியும் ஆராய்வதும், ஆராய்வதற்கு ஊக்கம் ஊட்டுவதும் தமிழரின் முதல் வேலையன்றோ!
3.
உலகிலுள்ள பன்னாட்டுத் தத்துவங்கள், கலைகள், இலக்கியங்கள்,
மொழிகள் இவற்றைத் தேடி ஆராய்ச்சி செய்கின்ற நிறுவனங்களில், நம் தமிழ்மொழி இலக்கியங்கள்,
கலைகள், தத்துவங்கள் சேர்க்கப்பட வேண்டுமே என்று எந்தத் தமிழன் கவலை கொண்டான்?
4.
இவைகளைச் செயற்படுத்த எவ்வகை முயற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையன்றோ?
5.
சமஸ்கிருதம் என ஒரு மொழி இருந்தது என்று காட்ட வேண்டி,
மிகக் கவலையோடு அந்த மொழியைப் பேசப் பழகிக் கொண்டவர்கள் இன்று எத்தனை பேர்கள் என்று
கணக்கெடுத்ததில் இத்தனை பெரிய துணைக் கண்டத்தில் ஆயிரம் பேர்கள்கூட அகப்படவில்லை. இருந்தால்தானே!
தமிழ் அப்படியா? நான்கு கோடி தமிழர்களின் மூச்சும் பேச்சும் தமிழைவிட்டு இம்மியும்
அசைந்ததில்லை. சாகாத் தமிழுக்கு தமிழகத்தில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன?
உலகிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றிலேனும் உலக முதன் மொழியாகிய நம் தமிழ்மொழி பற்றிய
பேச்சு உண்டா?
தமிழக மக்கள்
பேரால் உலகப் புகழ் பெற்றுள்ளவர்களில் ஒருவர்க்காவது இதில் எள்ளத்தனைக் கவலை இருந்ததா?
6.
உலகு தொடங்கியது முதல் இன்றுவரை பல படையெடுப்புகளுக்கும்
சாகாது உயிரை வைத்திருக்கும் தமிழர் தலைமுறையைக் காப்பாற்றத் தமிழ்க் கல்விக் கழகங்களைத்
தமிழகத்தில் அடிக்கொன்றாக விரிவுபடுத்துவதும் அக்கழகங்களில் இந்தி முதலிய கொடிய விலங்குகள்
புகாது பார்த்துக் கொள்வதும் தமிழர்களின் இன்றியமையாத கடமையன்றோ? இவ்வகை மொழிப் போர்
நீடிக்க - வெற்றிபெற என்ன செய்தார்கள், தமிழ்ப் பெருஞ் செல்வர்களும், தமிழ்ப் பெரும்
கல்வி வல்லாரும்?
7.
தமிழாராய்ச்சி வல்லார் தமிழகத்தில் இல்லாமல் இல்லை.
தமிழைப் பரப்பும் நோக்கமுடைய ஆற்றலினர் இல்லாமலில்லை. அவர்களைத் தமிழ்ப் பற்றிய இவ்வகைப்
பெருநோக்கத்தில் ஒன்றுபடும்படி செய்வதன்றோ செய்யத்தக்கது. புறஞ்சொல்லிப் பகை விளைத்தலா
செய்யத் தக்கது?
8.
பழந்தமிழ் நூல்களை உரைத் தூய்மை செய்தும் தமிழின்
தொன்மை மேன்மைகளை விளக்கும் புதுத் தமிழ் நூற்களையும், அவை பற்றிய ஏடுகளையும், இதழ்களையும்
பிறர் கட்டுப்பாட்டுக்குட்படாதபடி - வெளியிட முன் வர வேண்டாமா?
9.
தமிழகத்தில்
தமிழர்களால் ஏற்படுத்தப்படும் கண்காட்சிகள் ஆண்டுதோறும் அளவற்றவை திறக்கப்படுகின்றன.
தமிழன்னை, தமிழ் நாகரிகம், பண்பாடுகளின் மேம்பாடுகள் காட்சியளிக்கின்றனவா அவற்றில்?
இந்த நினைவேனும் இருந்ததாகத் தெரிகின்றதா, தமிழ்த் தலைவர் உள்ளத்தில்? தமிழனின் தச்சுத்திறனும்,
இசைக்கலைத் திறனும், ஓவியத் திறனும் வரிசைப்படுத்தப்படுகின்றனவா எங்கேனும்?
10. பெரிய தமிழ்நூல் நிலையங்கள் தமிழகந்தோறும் உண்டாக
வேண்டும் என்றும், தமிழ் நூற்கள், அயல்நாட்டு நூற்களிலும் இடம்பெற வேண்டுவது இன்றியமையாதது
என்றும் தமிழ்ப் பெரியோர் எண்ணி ஆவன செய்ய வேண்டும். இருக்கும் நூல் நிலையங்களில்
தமிழரின் மேற்பார்வையே நிலைக்கச் செய்ய வேண்டும்.
11. தமிழர் தத்துவங்களையும் தமிழின் தொன்மை மேன்மைகளையும்
உலகமெல்லாம் சென்று பரப்பத் தமிழ்ப் பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் ஏற்படுத்தி
தமிழ் படிப்பாரை உலக முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.
12. உலகெங்கணும் பரவலாக உண்டாக்கப்படும் தமிழ் விரும்பினரைக்
கொண்டு பெரிய பெரிய தேர்வுகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றோர்க்கு உலகப் புகழ் பரிசுகள்
வழங்க வேண்டும். தமிழ் என ஒன்று இருப்பதாகவே இன்று அயல் நாட்டினர் எண்ணவில்லையே. அவ்வாறு
எண்ணாதபடி தமிழரின் பகைவர்கள் செய்கின்றார்களே! செத்த மொழி இருப்பதாக அவர்கள் காண்பிப்பதில்
நமக்கு வருத்தமில்லை. இருந்தும் மொழி செத்ததாகச் செய்யப்படும் முயற்சியை விட்டுவைக்கலாமா?
13. தமிழுக்கென ஓர் பெரு நிறுவனத்தை நிறுவ நினைத்தால்
இன்று நம்மிடமிருக்கும் தமிழ்ச் செல்வர்களால் தமிழ் வல்லுநர்களால் முடியாது போய்விடுமா?
அவ்வாறு ஒரு நிறுவனத்தை நம் தமிழ்த் தாய்க்கு ஆக்குவதும் அதன் கிளை நிறுவனங்களை உலகெங்கும்
நிறுவுவதும் இன்று தமிழர்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எண்ணிய மறுகணத்திலேயே வெற்றியடையக்
கூடியதல்லவா?
14. தமிழர் நாகரிகம், தமிழின் தொன்மை மேன்மை மாய்ந்து
மண்ணாக வேண்டும் என்று பகைவர் எண்ணி வரும் இந்நாளில் மேற்சொன்னவரெல்லாம் தொண்டாற்றுவதில்
பெருமுயற்சி செய்து கொள்ள வேண்டுமன்றோ? தூங்குகின்றார்கள்.2
என்று
தமிழ் வளர வழிகள் காட்டுகிறார் பாவேந்தர்.
தமிழில் கலைச்சொற்கள்
தமிழ் வளர முக்கியமான தேவை கலைச்சொற்கள்
ஆகும். இக்கலைச்சொற்களை ஆக்கிக் கொள்ள தமிழர்கள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
‘‘தமிழில்
கலைச்சொற்கள் இல்லை; விஞ்ஞானச் சொற்கள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள், அவைகளைத் தேடியடையலாம்
என்ற நல்லெண்ணத்தால் சொல்வதில்லை; தேடவும் முடியாமல் போகட்டும் என்ற கெட்ட எண்ணத்தால்
சொல்லுகின்றவர்கள். “நாம் அவர்களை நோக்கி இதோ வேண்டிய அளவு கலைச்சொற்கள்; இதோ வேண்டிய
அளவு விஞ்ஞானச் சொற்கள்” என்று நீட்டினால் அவர்களது அழகு முகத்தில் மகிழ்ச்சி தோன்றாது;
அசடுதான் வழியும். ஏன்? - அவர்கட்குத் தமிழர்கள் உருப்பட வேண்டும் என்ற எண்ணமே இல்லை.’’3
என்று கலைச் சொற்கள் தமிழில் வளர வேண்டிய
நிலையைப் பாவேந்தர் எடுத்துரைக்கிறார்.
தொகுப்புரை
பாவேந்தர் தமிழ் உணர்வு பெற்றவர்.அதுமட்டும்
இல்லாமல் தமிழ் வளர பல கருத்துக்களைக் கட்டுரைகள் வழியாகவும் கவிதைகள் வழியாகவும் எடுத்துரைத்தார்.
அவரின் வழியில் தமிழர்கள் தமிழ் வளர பாடு பட வேண்டும்.
சான்றாதரங்கள்
1. பாரதிதாசன், குயில்
1958 இதழ்
2. பாரதிதாசன்
மானுடம் போற்று பக் 57-60
3. பாரதிதசான்,
மானுடம் போற்று ப.291

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக