உலகம்
அமைதி பெற பாவேந்தரின் ஐந்தொழுக்க நெறிகள்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்
தலைவர்
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
திருவாடானைஷ
கட்டுரையின் கருத்துச் சுருக்கம்
- A Global Army & Parliament: Instead of individual nations raising aggressive armies, Bharathidasan advocated for a unified "Global Common Army" (உலகப் பொது சேனை) to safeguard the planet. He believed that a true "World Parliament" (வையப் பாராளுமன்றம்) is necessary to uproot the core causes of global warfare driven by superpowers. [1]
- The Five Virtues for the World (ஐந்தொழுக்க நெறிகள்): To ensure permanent global harmony, the poet proposed five core values:
- No race or community should destroy another.
- No language should suppress or destroy another language.
- No nation should invade, dominate, or exploit another country's resources.
- No country should manufacture or stockpile deadly weapons of mass destruction; military strength should only suffice for internal security.
- A global supreme council consisting of world sages and scholars must strictly monitor and supervise the above four principles.
- Anti-Imperialism Stance: The poet strongly criticized the catastrophic atomic bombings of Hiroshima and Nagasaki by America. Furthermore, he raised a fierce voice through his poetry against American intervention in the Vietnam War, fiercely defending the sovereignty and mental resilience of the Vietnamese people.
பாவே்ந்தர் பாரதிதாசனின் உலகு தழுவிய அமைதிக்கான தொடர்
‘‘புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’’ என்பதாகும்.
இத்தொடர் மெய்ப்பட பாரதிதாசன் உலக நன்மை கருதி
உலகில் நடக்கும் போர்களை ஒழிக்கத் தன் கவிதைகளைப் படைத்துள்ளார். மேற்கண்ட அடிகள் வெறும்
கொள்கை அடிகளாக மட்டும் இல்லாமல் பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளில் உள்ளீடாக அமைந்த
அமைதிச் சிந்தனை அடிகள் ஆகும்.
உலகப் பொது சேனை
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு போர்ப்படை
இருப்பதால் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும்
போர் வருகிறது. உலகிற்கே பொதுவான ஒரு போர்ப்படை அமைந்துவிட்டால் அப்படை உலகினைக் காக்கும்
என்ற உலகப் பொது நோக்கினைப் பாரதிதாசன் முன்வைக்கிறார்.
‘‘நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை
கூட்டினோம்! -- பொதுச்
சேனை
கூட்டினோம் -- வெறி
நாய்கள்
ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம்
ஓட்டினோம்! -- கெட்ட
ஈனம்
ஓட்டினோம்’’
என்ற நிலையில்
உலகில் போர் குறைய போரின் ஈனம் குறைய உலகப்
பொது சேனை கூட்டச் சொல்லி பாவேந்தர் அமைதிக் கருத்தினை எடுத்துரைக்கிறார். இக்கருத்து அவர் ஐக்கிய நாடுகள் சபையை வரவேற்பதாக
அமைகின்றது.
‘‘ஒருசிலர் அதிகாரத்தின்
வல்லர சுரிமை காக்க உலகமே தீக்கா டாக்கி
உயிர்க்குலம் அழிக்கும் ஈனர்
பலத்தினை ஒடுக்க வேண்டும்;
வையப் பாராளு மன்றம்
புலம்பலில் பயனே இல்லை
பொசுக்குக போர் மூலத்தை!’’
என்று வையப்
பாராளுமன்றம் அமைந்தால் மட்டுமே போர்ச் செயல்களை, வல்லரசு நாடுகளின் போர் மூலத்தை ஒழிக்க
இயலும் என்று பாரதிதாசன் கவிதை செய்கிறார்.
உலகுக்கோர் ஐந்தொழுக்கம்
உலகம் அமைதியுடன் வாழ ஐந்தொழுக்க நெறிமுறையைப்
பாரதிதாசன் காட்டுகின்றார். அவரது கட்டுரைத் தொகுப்புகளுக்குப் பெயர் உலகுக்கோர் ஐந்தொழுக்கம்
என்று தனித்த தலைப்பில் அமைக்கப்பெற்றுள்ளது. இதில்
1. ஓர்
இனம் மற்றோர் இனத்தை மாய்க்கலாகாது.
2. ஒருமொழி
மற்றொரு மொழியை மாய்க்கலாகாது
3. ஒரு
நாடு மற்றொரு நாட்டை ப் பற்றிச் சுரண்டும் பான்மை கட்டோடு ஒழிதல் வேண்டும்.
4. உள்நாட்டின்
அமைதியைக் காக்கும் அளவிற்கு மெல் பெரும்படை, விலையேற்ப் பெற்ற அழிப்புக் கருவிகளை
எந்தநாடும் வைத்திருக்கக் கூடாது. உண்டாக்கக் கூடாது.
5. அங்கங்குள்ள
சான்றோரைக் கொண்ட ஓரு் உலகப் பெருமன்றம் மேற்சொன்ன
நான்கு திட்டங்களைச் சிதறாமல் மேற்பார்வை பார்த்து வரவேண்டும்[1]
என்ற ஐந்து கொள்கைகளைப்
பாரதிதாசன் முன்வைக்கிறார். அவர் காட்டிய மேற்சொன் ஐந்து வழிகளைப் பின்பற்றினால் உலகம் அமைதி பெறும். போர் அற்ற உலகம்
நிரந்தரமாகும். போரிடும் உலகை வேருடன் சாய்க்க முடியும்.
அணுகுண்டு வீச்சு
இரண்டாம் உலகப் போரின் நிறைநிலையில் ஐப்பான்
மீது அமெரிக்க வல்லரசு அணுகுண்டுகளை வீசியது.
இதனை எதிர்த்து பாரதிதாசன் மிக நீண்ட கவிதையை
வடிக்கிறார்.
‘‘ இரோஷிமா
நாகசாகி எனும்
இரு ஊரில் வைய
விரோதிகள் வீசினாராம் வெடி
குண்டை; எரிமலைத் தீ
சரேலெனக் கவிழ்ந்ததைப்போல் சாவில்பல்
லாயிரம் பேர்
ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலாது
அழிந்தாராமே.
நானிலம்
அனைத்தும் உள்ள நச்சும்பாம்
பனைத்தும் கூட்டி
வானில்ஒர் அணுக்குண்டாக வன்பகை
நெருப் பழுத்தித்
தான்பொழிந் தானோ பாவி? அமெரிக்கக் கொலைப் படைக்குத்
தான்தோன்றி தனத்துக்கொல்லாம் ஜப்பானில்
தானா ஆட்டம்?
இன்னும் ஒர் நூறாண்டுக்கும்
இரண்டூரின் சுற்றுப் பக்கம்
ஒன்றுமே முளையா தாமே வாழ்தலும்
ஒண்ணா தாமே.
ஒன்றுகேள், முதாலளித்துவம் உலகினை
அழிக்கும் முன்னம்
நன்றுநாம் செய்தல் எல்லாம் நாமதை
ஒழித்தல் வேண்டும்.’’[2]
என்று அமெரிக்காவின்
அழி செயலை வன்மையாகக் கண்டிக்கிறார் பாவேந்தர்.
வியட்நாம் போர்
வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே எழுந்த போர் பெருத்த
மக்கள் இழப்பை ஏற்படுத்தியது. வடக்கு வியட்நாம் ரஷ்யாவால் ஆதரிக்கப்பட்டது. தெற்கு வியட்நாம் அமெரிக்காவால் ஆதரிக்கபட்டது.
இந்நிலையில் இரு பகுதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த போர் 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பின்னடைவு காரணமாக
ஒருங்கிணைந்த வியட்நாமாக உருவாகியது. இப்போர்
குறித்த செய்திகளைப் பாரதிதாசன் தன் கவிதையில் பகிர்ந்துள்ளார்.
வையப்போர் முடிந்ததென நினைக்கும் நாளில்
வல்லரசின் திமிரொடுங்க வில்லை! கீழே
கைவைத்த பிரான்சுநாட் டடியிருந்து
கடுமைமிகு விடுதலைப்போர் வியத்நாம் கண்டு
மெய்யுயர்த்தி மேம்பாட்டிற் குழைக்கும் வேளை
வீடிழந்தார் விளைவிழந்தார் உறவிழந்தார்
கையுழைப்பால் தலைதூக்க நினைக்கும் காலை
கயமைமிகும் அமெரிக்கா கால்நீட்டிற்றே.
மனவலிமை குன்றாத வியத்நாம் மக்கள்
மறுவாழ்வில் ஊடுருவும் முதலாளித்துவ
மனப்போக்கை முறியடித்தல் உலக நாட்டு
மன்றத்தின் முதற்கடமை ஆகும், ஒவ்வோர்
இனமக்கள் வாழ்நாடும் அவ்வவர்க்கே
எனும்உணர்வு விழிப்புணர்ச்சி இயற்க்கை; எந்த
இனமற்ற அமெரிக்க வெறிநாய்கட்கே
இனமேது? ஏதுமொழி எச்சிற் சோறே.
அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள்
ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை;
திமிருற்ற ஏகாதி பத்தியத்தைத்
திசைதோறும் எதிர்க்கின்றார்; அவர் நாட்டாரே
குமுறுகிறார் கோணல்மன அமெரிக்காவே
குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்
இமயத்தின் எல்லையிலே காலைநீட்டும்
சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு!
சான்றோர்கள் உன்முகத்தில் காரி துப்பும்
சாய்க்கடையாய் அமெரிக்க அரசியல்சீர்
தான்றோன்றித் தனமாக நடப்பதெல்லாம்
தரங்கெட்டுப் போவதையே காட்டும்; நாட்டில்
ஊன்றிஎழும் நிறவெறிப்போர் களையவில்லை;
உலகமக்கள் உறவென்னும் அன்பும் இல்லை;
ஈன்றவரும் வெறுக்கும்வண்ணம், வியத்நாம் வீரம்
இடுப்பொடித்துப்
போடும்உனை எச்சரிக்கை!’’[3]
என்று
அமெரிக்கா வியட்நாமில் கால் நீட்டியதை எதிர்த்துக் கவிதை படைக்கிறார் பாரதிதாசன். குறிப்பாக
அமெரிக்காவின் தன்னிச்கையான கடுமைப் போக்கைச் சாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
இவ்வாறு பாரதிதாசன் தன் காலத்து உலகப்
போர்கள் பற்றிய செய்திகளைப் பதிவு செய்து அவற்றின் நன்மை தீமைகளை ஆராய்ந்து கவிதைகளைத்
தந்துள்ளார். அவரது எழுத்தில் உலகம் போர் அற்று
விளங்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது.
தொகுப்புரை
பாரதிதாசன் உலகம் அமைதி பெறவேண்டும் என்று
விரும்புகிறார். அவரின் கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம் என்ற அமைதி அடி ஒற்றை
அடி மட்டும் அல்ல. அவ்வடியின் ஆழம் வெற்றி என்பது பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளிலும்
அமைந்துள்ளது. உலகம் நன்னிலை பெற ஐந்தொழுக்க நெறிகளை அவர் முன்வைக்கிறார். இவ்வைந்தொழுக்க
நெறிகளை உலகம் பின்பற்றினால் இனப் படுகொலை, மொழிப் படுகொலை, பொருளாதாரப் படுகொலை போன்ற நிகழாமல் காக்க இயலும்.
மேலும் பாரதிதாசன் அமெரிக்காவின் முதலாளித்துவப் போக்கை ஐப்பான் வெடிகுண்டு வீச்சு, வியட்நாமில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றை முன்வைத்து
எடுத்துரைத்துள்ளார். முதலாளித்துவ எதிர்ப்பு நிலைப்பாடு மிகத்தௌவாகப் பாவேந்தர் கவிதைகளில்
இடம் பெற்றுள்ளது.
சான்றாதாரங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக