கோடீஸ்வரன் (நாடகம்
)
காட்சி 1
செல்போன் வாங்கலையோ செல்போன்
பாட்டு கேக்கலாம் . படம் புடிக்கலாம்
காசு போடலாம் , காசு
எடுக்கலாம்
நாள் கணக்கா பேசலாம்
செல்போன் வாங்கலையோ செல்போன் ……
காட்சி 2
செல்போன் எங்கும் வந்தாச்சி
மனிதன் ஒருவனோடு
ஒருவன்
பேசமாட்டேன் என்கிறான் சிரிக்க மாட்டேன் என்கிறான்
அழுக மாட்டேன் என்கிறான் சாப்பிட மாட்டேன் என்கிறான்
செல்போன் வந்தாலும் வந்திச்சி உலகம் மாறிப் போயாச்சி
--------------------------------------
காட்சி 3
ஆள் 1 : நாங்க பாங்குல இருந்து பேசறோம்
நல்ல தம்பி : அப்படியா
நல்லா பேசுங்க
ஆள் 1: உங்க அக்கவுண்டு பாங்க் அக்கவுண்டு ஸ்டாப் ஆயிடுச்சி
நல்ல தம்பி : அப்படியா
நல்லா ஆகட்டும்
ஆள் 1: இல்ல சார் ! உங்க அக்கவுண்ட் close ஆகப்போகுது
நல்ல தம்பி : நல்லா close ஆகட்டும்
ஆள் 1:என்னா சார் நீ எல்லாத்துக்கும் நல்லா நல்லா சொல்லுற
நல்ல தம்பி : நல்லா நல்லாதான்னு சொல்லுவேன் என் பேரு நல்ல தம்பி
அதனால எல்லாத்துக்கும் நல்லா நல்லாதான் சொல்லுவேன்.
அப்புறம் நாசாமா போன்னு சொல்லவா
ஆள் 1: உங்க ஏ.டி.எம் கார்டு இருக்கா சார் ? அத எடு சார்1
நல்ல தம்பி : நல்லா எடுக்கிறேன்.
ஆள் 1: அதுல இருக்குதா
சார் நம்பர் ! பன்னெண்டு நம்பர் !
நல்லதம்பி : நல்லா இருக்குது நம்பர்
ஆள் 1: நம்பர் சொல்லு சார்
நல்லதம்பி: நம்பரா ! ஐயோ ! ஐயையோ ! எனக்குப் படிக்கத் தெரியாது
நம்பர்
சொல்லத் தெரியாது
ஆள் 1: என்னா சார் சொல்ற! அக்கவுண்ட் வச்சிருக்க! படிக்க தெரியாது
சொல்ற
நல்ல தம்பி: படிக்க
தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் நான் நம்பர் சொல்ல
மாட்டேன்
நல்ல தம்பி நான் நல்ல தம்பி நான் !
ஆள் 1: ஹலோ ஹலோ கோடீஸ்வரனா!
கோடீஸ்வரன்: ஹலோ ஆமா கோடீஸ்வரனே தான்!
ஆள் 1: உங்களுக்கு பணம் வேணுமா
கோடீஸ்வரன்: எங்க அப்பா எனக்கு நல்லா பேரு வச்சாரு
கோடீஸ்வரன்னு
! ஒரு பைசா கூட இல்ல
நல்ல
பேரு கோடீஸ்வரன்
ஆள் 1: உங்களுக்கு
பணம் வேணுமா பணம் கோடி பணம்
கோடீஸ்வரன் : ஆமா வேணும்
ஆள் 1: கோடீஸ்வரன்
100 போட்டா 200 200 போட்டா நானூறு
கோடீஸ்வரன் : அப்ப 1000 போட்டா 2000
ஆள் 1: ஆமா சார்
1000 போடு உடனே 2000 வரும்
கோடீஸ்வரன் எப்படி
போடணும்
ஆள் 1: சார் உங்க போனுக்கு ஒரு லிங்க் வரும் அதில பணம் போடு சார்
கோடீஸ்வரன் போடறேன் போடறேன்
10 ரூபா போடுவோம்
போட்டாச்சு
ஐ 20 ரூபா வந்திடுச்சி
அடுத்த நாள் காலை
கோடீஸ்வரன்: ஐயோ போச்சே போச் சே
என் போன்ல் இருந்த பணம்
எல்லாம்
போச்சு பத்து ரூபாக்கு ஆசைபட்டு
இருந்த
பணம் எல்லாத்தையும் எடுத்துட்டானே பாவி
என்ன
பண்ண
குரல் கோடீஸ்வரா கவலைப் படாதே 1930 நம்பருக்கு
போன்
பண்ணு
இல்ல காவல் நிலையம் போய் புகார் பண்ணு
24
மணி நேரத்துக்குள்ள புகார் பண்ணா காசு கிடைக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக