புதன், ஜனவரி 15, 2014

முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் சிவஞானபோதம் விளக்கவுரை குறுந்தகடு வெளியீடு

முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் சிவஞானபோதம் குறித்தான விளக்கவுரை அடங்கிய 3 குறுந்தகடுகள் வரும் ஜனவரி 26 ஆம் நாள் சேலம் அம்மாபேட்டையிலுள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் வெளியிடப் பெற உள்ளது. காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் சிவஞானபாலய சுவாமிகள் (இருபதாம் பட்டம்) அவர்கள் வெளியிடுகிறார்கள்

சிவஞான போதம் என்பது சைவ சமய சாத்திரங்களில் தலையாயது. இதனை எளிய முறையில் விளக்குவதாக இக்குறுந்தகடுகள் அமைந்துள்ளன. தொடர்ந்து சித்தாந்த பொழிவுகளை நிகழ்த்தி வரும் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் விளக்கவுரை சிவஞானம் பெருக்குவதாக உள்ளது.
அனைவரும் பயன்பெற 9443765027 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குறுந்தகடுகளைப் பெறலாம்.

என் தொலைபேசி 9442913985

அனைவரும் விழாவிற்கு வருக. விழாவில் சலுகைவிலையில் கிடைக்கும். 

    குறுந்தகட்டில் இடம்பெற்றுள்ள சிறு காணொளிப் பகுதியைப் பின்வரும் இணைப்பில் காணலாம். http://youtu.be/d6U8AuuOmUkகருத்துரையிடுக