புதன், டிசம்பர் 25, 2013

ஒரே நாளில் ஒன்பது நகரக் கோயில்களைக் காண ஒரு எளிய பயணத்திட்டம்.



ஒருநாளில் நகரக் கோயில்கள் ஒன்பதையும் வணங்கிட எண்ணம் கொண்டோம். ஒரு மகிழ்வுந்தில் காலை எட்டுமணிக்குக் கிளம்பிய நாங்கள் மதியம் 2.30 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் கண்டு வணங்கினோம்.
ஒன்பது நகரக் கோயில்களை வணங்குவதில் ஒரு முறை உண்டென்றாலும் பயணவசதிப்படி எப்படி வணங்கலாம் என இணையத்தில் தேடினேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
நாமே பயணத்திட்டம் அமைக்கலாம் எனத் தோன்றியது. அமைத்தேன்.மிகச் சரியாகவே இருந்ததாக எண்ணுகிறேன்.

திருப்பத்தூரில் இருந்துப் பயணத்தைத் தொடங்கிய நாங்கள் முதலில் கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள இரணியூர் அடுத்ததாக இளையாற்றங்குடி தொடர்ந்து திருமயம் வழியாக சூரக்குடி   அதனைத்தொடர்ந்து பள்ளத்தூர் வழியாக வேலங்குடி அடுத்ததாக கண்டனூர் செல்லும் சாலையில் மாற்றூல்  தொடர்ந்து இலுப்பைக்குடி  அடுத்து காரைக்குடி,குன்றக்குடி வழியாக நேமம்,  அடுத்து  பிள்ளையார்பட்டி, நிறைவில் வயிரவன் கோயில் மீளவும் திருப்பத்தூர் என்று வழியமைத்துக்கொண்டோம்.
பிள்ளையார் பட்டியைக் கடைசியில் வைத்துக் கொள்வது இரு நன்மைக்காக. ஒன்று மதிய உணவு அங்கு நகரத்தார்களால் வழங்கப்படுவதால் –அடுத்து பிள்ளையார்பட்டி கோயில் நடை சாத்தப்படுவதில்லை   இப்படி எல்லா நகரக்கோயில்களும் இருந்துவிட்டால் ஒரே நாளில் ஒன்பது கோயில் பயணம் சிறக்கம்.
முதலாவதாக நாங்கள் கண்டது இரணியூர். இது நகரத்தார் கோயில்களின் கலைக்கூடமாகும். இக்கோயிலின்அருகில் இருந்த நகரவிடுதி பத்துநாளைக்குத் தங்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அடுத்து நகரக் கோயில்களில் இரண்டாவது நாங்கள் கண்டது இளையாற்றங்குடி. இரணியூரிலிருந்து சிலமைல் தொலைவில் இக்கோயில் உள்ளது. தற்போது இக்கோயிலில் நந்தவனத்தில்ஒரு நாகர் வைக்கப்பெற்றுள்ளது நாக தோசம் உள்ளவர்கள்வழிபட்டால் விலகும். இங்கு வழிபட்டு விட்டு மலையாளக் கருப்பரையும் வணங்கினோம்.

மூன்றாவதாக நாங்கள் வணங்கியது சூரக்குடி கோயிலை. தேய்பிறை அட்டமிதினம்மிகச்சிறப்பாக இங்குக் கொண்டாடப் படுகிறது. உற்வசரும், மூலவரும் எங்களுக்கு அருளினார்கள். மேலும் இக்கோயிலில் உள்ள சரசுவதியை வழிபட்டால் உங்கள்பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் இதன்பிறகு பள்ளத்தூர் வழியாக எங்கள் பயணம் தொடர்ந்தது. கொத்தரியில் உள்ள சோலையாண்டவரையும் தரிசிக்க வாய்ப்புண்டு. பெண்கள் சிலஇடங்களுக்கு மட்டும் இக்கோயிலில் செல்லலாம். குறிப்பாக கருவறைக்கு எதிரில் பெண்கள் செல்லக்கூடாது. பிரகாரம் வரக் கூடாது. இதனை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான்காவதாக நாங்கள் வணங்கியது வேலங்குடிக் கோயில்,இங்குச்  சென்றால் பெருமாள் கோயிலுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். அருகருகே இரு கோயில்களும்உள்ளன. இதுபோன்றே இளையாற்றங்குடியில் பெருமாள் கோயில் உண்டு இளையாற்றங்குடியில்  ஒருநாள் முழுவதும் தங்கிக் கோயில்களைத்தரிசிக்கும் அளவிற்கு - அளவிற்கு அதிகமான கோயில்கள் அங்கு உண்டு. இருக்கநமக்குத்தான் மனமில்லை.

ஐந்தாவதாக நாங்கள் பணிந்தது கண்டனூர் செல்லும் சாலையில் சென்றுஅங்கிருந்து விலகி மாற்றூர். இங்குள்ள நகர விடுதி மிகவும் பெரியது அழகியது. மேலும் இக்கோயிலில் நட்சத்திர மரங்கள் நடப்பெற்று வளர்ந்துள்ளன. இங்கும் ஓமம் நடைபெற்றது.
ஆறாவதாக வணங்கியது இலுப்பைக்குடிக் கோயில். மாற்றூரை ஒட்டியே இக்கோயில் உள்ளது. .இங்குள்ள வயிரவர் பண வயிரவர் எனப்படுகின்றார். நிறைய கூட்டம் நாங்கள் சென்றபோது. நிறையபேருக்குப் பணத்தேவைஉள்ளது.  இதன்பிறகு நேரமிருந்தால் அரியக்குடி சென்றுப் பெருமாளைசேவிக்கலாம். மூலைகருடனுக்குக் கட்டாயம் தேங்காய் உடையுங்கள். இது தமிழகஅரசு கோயில். சரியாக 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. எனவே கவனமுடன் நேரத்தை அளவிட்டுக்கொள்ளவேண்டும்.

ஏழாவதாக காரைக்குடி வழியாக கோவிலூர் ,குன்றக்குடி வழியாக நேமம் அடைந்தோம். நேரமிருந்தால் கோவிலூர் கோயில், நகரத்தார் கலைக்கூடம் ஆகியவற்றை மறவாமல் பார்க்க. குன்றக்குடிக் கோயிலில் ஆறுமுகனை வணங்கலாம். இதன்பிறகு நேமம் சென்று சேரலாம். இங்குள்ள காளி விசேசமானது. சண்டித்தனம் செய்யும் பிள்ளைகளை இக்காளி அடக்கிநல்வழிப் படுத்துவாளாம். இந்த செயங்கொண்டாரை வணங்கியவர் பாடுவார் முத்தப்பர். இவருக்குக்கோயில் எதிரிலேயே சிலை நிறுவப் பெற்றுள்ளது. இங்கு கண்ட ஒரு அறிவிப்பு விரைவில் நகரத்தார் போஸ்ட் என்ற இதழ் வர உள்ளதாம்.

எட்டாவதாக பிள்ளையார்பட்டி இதன்பெருமை உலகமறியும்.
ஒன்பதாவதாக வயிரவன் பட்டி
நேரமிருந்தால் திருப்பத்தூரில் யோகபைரவர் தரிசம்

நாள் முழுவதும் வைரவ தரிசனம்- பாவ விமோசனம். அனைவரும்செல்வோம் ஒன்பது நகரத்தார்கோயில்களுக்கு 

இரணியூர் கோயில் 















இளையாற்றங்குடி கைலாச நாதர் கோயில்.














 இளையாற்றங்குடிமலையாளக் கருப்பர், அங்காள பரமேஸ்வரி ஆலயம்




 சூரக்குடி கோயில்







 கொத்தரி சோலையாண்டவர்கோயில் வளாகம்
 வேலங்குடி கோயில்




மாற்றூர் கோயில்













இலுப்பைக் குடிக் கோயில்









நேமம் கோயில்
 

பிள்ளையார் பட்டிகோயில் 








வைரவன் பட்டி கோயில் 









 

கருத்துகள் இல்லை: