புதன், டிசம்பர் 25, 2013

காரைக்குடி நகரச் சிவன் கோயிலின் ஐம்பெருந்தெய்வங்கள் வீதியுலா

காரைக்குடி சிவன் கோயிலின் உற்சவ மூர்த்திகள் இன்று ஊர்வலமாக வந்த காட்சி கண்ணுக்கு இனிமையாக இருந்தது. திருக்கோயில்களில் தேய்பிறை அட்டமி நாளில் வயிரவர் ஓமம் செய்வது இப்போது திருவிழாவாக நடந்து வருகிறது. இந்நாளைக் கருதி காரைக்குடி சிவன் கோயிலின் ஐந்து உற்சவ மூர்த்திகளும் இன்று வீதியுலா வந்தனர். எதேச்சையாக அவ்வழி சென்றபோது அவ்வைந்து திருவுருவங்களையும் கண்டேன் . கும்பிட்டேன் உங்களுக்கும் காணத் தந்தேன். திருவுருவங்களுக்குப் பின்னணியில் திருவாசகம் பாடிக்கொண்டு மகளிர் தொண்டர்கள் வந்தமையும் தமிழ் பாயும் தெருவாகக் காட்சி தந்தது.
கருத்துகள் இல்லை: