
காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் செட்டியார் சன் நகைக்கடை, காரைக்குடி அனைவரும் வருக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக