பெண்கள்தினம் குறித்து விழிப்புணர்ச்சி வலைப்பூக்களிலும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.
என் நேற்றைய பதிவிற்கு சில பதில்கள் வந்துள்ளன.
பெண்கள் தினத்திற்கான வாழ்த்தாக இட்லி வடை வலைப்பூக்காரர் ஒரு கவிதை தந்துள்ளார்.
ஐயா,
பெண்கள் தினத்தில் வாழ்த்துச் சொல்ல ஒரு நல்ல கவிதை கிடைக்கவில்லையா? பெண் இரண்டு எழுத்து மூன்றெழுத்து நான்கெழுத்து எழுத்தெண்ணிப்பாடும் ஆண்கவிதைதான் கிடைத்ததா? எதை ஏத்துவது எதை ஏத்தி அபபுறம் எதை ஏத்துவது? வாலியின் கவிதை அவ்வளவு நன்றாக இல்லையே
நல்ல பெண்கவிதை ஒன்றைத் தாருங்கள்
2 கருத்துகள்:
பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்
சந்திரவதனா - 8.3.02
நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி
உனது என்ற சொல்லாடலில் ஓரளவிற்கு மறைந்து கிடக்கிறது பெண் எழுத்து
இருந்தாலும் எழுதிய பெண் கவிஞர் உனது எனக் குறிப்பிடும்போது விலக்கப்படுகிறது நமது
பெண்மையின் பொதுமை விலக்கப்படும் உனதை நீக்கி நமதாய் கவிதை வாசித்தால்
நமது இருப்பு
நமது விருப்போது நமதாய் இருக்கட்டும்
என்று இருப்பின் இன்னம் பெருமையாய் இருககுமோ
கருத்துரையிடுக