பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்
சந்திரவதனா - 8.3.02 --
நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி.
உனது என்ற சொல்லாடலில் ஓரளவிற்கு மறைந்து கிடக்கிறது பெண் எழுத்து.
இருந்தாலும் எழுதிய பெண் கவிஞர் உனது எனக் குறிப்பிடும்போது விலக்கப்படுகிறது நமது........................
பெண்மையின் பொதுமை விலக்கப்படும் உனதை நீக்கி நமதாய் கவிதை வாசித்தால்.......................
நமது இருப்பு
நமது விருப்போடு
நமதாய் இருக்கட்டும்
என்று இருப்பின் பெருமையாய் இருககுமோ
3 கருத்துகள்:
நன்றி பழனியப்பன்.
நீங்கள் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது.
நாம் நாமாக வாழாது
நரகத்துழன்று
ஊருக்காய் வாழ்வது
வீணல்லவா
பெண்ணே!
ஊருக்காய் வாழாதே!
உனக்காய் வாழ்.
சந்திரவதனா
யேர்மனி
8.3.1997
தங்களின் பதில்களுக்கு நன்றி
என் கவி மாற்றங்களைக் கண்டுகொண்டமைக்க மிக்க நன்றி
மேலும்
தங்களின் தளங்களை பார்வையிட்டேன்.
பெண் படைப்பாளர்களின் பேட்டிகளைத் தந்திருக்கும் செவ்வி போற்றற் குரியது.
இவற்றைத் தவற விட்ட நாங்கள் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதையே நகைப்பிற்குரியதாக்கிவிட்டது.
சல்மாவின் நேர்காணலை நேற்றுப் படித்தேன். நன்றிகள் பல
தொடர்ந்து பெண் முன்னேற்றக் கருத்துக்களைத் தரும் தங்களின் பணி மேலும் தொடரவேண்டும்
நன்றியோடு
மு. பழனியப்பன்
கருத்துரையிடுக