நண்பர்களே
என் கவிதை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகி உள்ளது. சிறு குழந்தையின் உலகம் பற்றிய கவிதை அது, வாசித்துப் பார்ப்பதற்காக உங்களுக்கு இங்கே தருகிறேன். தமிழோவியம் நண்பர்களுக்கு நன்றி
கவிதை : தனியுலகு - மு. பழனியப்பன் [muppalam2003@yahoo.co.in]
குழந்தையின் உலகம்
வேறுவிதமாய் இருக்கிறது
வீட்டு வாசல்
சாலையின் ஒரு பகுதி
வாசல் விட்டுசாலையில்
இறங்கித்
திடு திடுவென ஓடிவரும்
அம்மனக் குழந்தை
கால்கள் தரையில்
பாவாமல்தாண்டிக்
குதித்தோடும் நடையழகு
வாசல் வந்து
சாலை இயக்கத்தைக்கண்டு கொள்ளாமல்
தன் பாட்டுக்குப் போகும்
நிறுத்த முடியாமல்
இரு சக்கர வாகனத்தை
தடால் என நிறுத்தி
கால் ஊன்றி
வாகனத்தை நிறுத்த முற்பட
வழுக்கி விழும்
பின் இருக்கை மனைவி
கீழ்விழுந்துஎழ முயல
குழந்தைநிற்காமல் ஓடுகிறது
திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறது
எங்களின் வீழ்ச்சியைப் பார்க்காமல்
செல்லுகிறதே என்ற எமது எதிர்பார்ப்பு
குழந்தையின் உலகம் வேறுவிதமாய் இருக்கிறது
சரிந்த மனைவி
தன் பிள்ளையை நினைக்கிறாள்
நான் ஊரார் பிள்ளை
நடையழகைஅதன் உலகை எண்ணி வியக்கிறேன்.
http://www.tamiloviam.com/unicode/02160609.asp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக