காவிரிக் கடலில் கலக்கும் புகாரில்
தொடங்கிய காப்பியம் சிலப்பதி காரம்
கலைஞர் மனதில் எழுத்தில் திரையில்
விளைந்த காப்பியம் சிலப்பதி காரம்
கடலில் தொலைந்து போன நகரை
மீண்டும் கொண்டு வந்த அறிஞர்
எழுநிலை மாடம் எழுந்து நின்றது
எழுதிய காப்பியம் கல்லில் சமைந்தது
சிலம்பே தமிழன் தனித்த சொத்து
இளங்கோ கைவிட்ட இடங்கள் கலைஞர்
கைபட்டு பண்பாடு வளர்த்தது உண்மை
கிரேக்க கிழவன் ஆயிரத் தெட்டு
பொற்காசு தந்திட தயாராக இருக்க
தமிழன் கோவலன் தமிழ் மானம்
காக்க மாதவி மாலை பெற்றான்
கண்ணகி அவளும் நாடகம் பார்த்தாள்
கணவன் செயலைச் சரியே என்றாள்
மாதவி வீட்டில் கோவலன் செல்வம்
அவளே அறியாமல் வீட்டார் பெற்றார்
திருப்பித் தந்தாள் அவளே தமிழச்சி
ஒற்றைச் சிலம்பு போதும் என்றான்
மற்றது என்தவறு சுட்டி ஒலிக்கும்
இதுவே கோவலன் தூய நெஞ்சம்
ஒற்றைச் சிலம்பும் ஒலித்தது
திராவிடச் செல்வம் பிரதி பலித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக