திங்கள், ஜூலை 01, 2019

ஜெயகாந்தன் கருத்தரங்கு, அறிவிப்பும் அழைப்பும்

(ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை)
பன்னாட்டுக் கருத்தரங்கம்
அறிமுகமாக...
 ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை -பன்னாட்டுக் கருத்தரங்கம்
 இரு நாள்களாக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், முதல்வாரத்தில், சென்னையில் நிகழ உள்ளது. முதல் நாள் தொடக்கவிழா பாராட்டுவிழா வாகவும், ஆய்வுக்கோவை, விழா மலர் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழாகவும், மறுநாள் கருத்தரங்க அமர்வுகள், ஜெயகாந்தன் ‘சபை’, மற்றும் நிறைவுவிழா என்பதாகவும் நடத்தப் பெறும். 

‘ஜெயகாந்தம்’-(மலர் )
            ஜெயகாந்தனுடன் பழகிய, பங்கேற்ற அனுபவங்களை, புகைப்பட, கையெழுத்து, கடிதம் சான்று நகல்களுடன், A4 அளவில் நான்கு பக்கங்களுக்குள் எழுதி அனுப்பலாம். சுருக்கவோ, நீக்கவோ பதிப்பாசிரியர்களுக்கு உரிமை உண்டு. மலர்ப்பங்களிப்பிற்குக் கட்டணமில்லை.  

‘ஜெயகாந்தம்’(ஆய்வுக்கோவை )
 கருத்தரங்கின்  மையப்பொருள் ஜெயகாந்தம்- ‘ஜெயகாந்தனின் ‘இலக்கிய ஆளுமை’ என்பதாகும். இதில் பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் வழங்கலாம். கருத்தரங்கிற்கான கட்டணம் ரூ. 1000/- (ஓராயிரம்) மட்டும். 
 தேவகோட்டையில் மாற்றத்தக்க  (Crossed  Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கி வரைவோலையாகவோ, அல்லது பிற வங்கிச் செலுத்துச் சீட்டு வழியாகவோ (அதன் ரசீதை கட்செவியில் அனுப்பிட வேண்டும்.) G.VIJAYALAKSHMI (KARUR VAIYSYA BANK, DEVAKOTTAI (1802155000019514) என்ற பெயருக்கு அனுப்பிட வேண்டுகிறோம். 
 பதிவுப் படிவமும்,  ஆய்வுக்கட்டுரையும்  கட்டணமும்  30-08-2019 ஆம் நாளுக்குள்  வந்தடைய வேண்டும். காலதாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டா.


ஜெயகாந்தம் -
கருத்தரங்கப் பொருண்மைகள்
  தொடரும் வெள்ளிவிழா நிறைவை ஒட்டி, ஜெயகாந்தனின் ஆளுமை குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பொருண்மைகள் பின்வருமாறு அமைகின்றன. இவற்றை ஒட்டியும் இவ்வகைமையில் இன்னபிற தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். இடம், நாள் ஆகியன பின்னர் அறிவிக்கப்பெறும். 

ஜெயகாந்தனின் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனின் இந்தியச் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனின் தமிழியச் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனின் அரசியல் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனின் இலக்கியச் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனின் கலையியற் சிந்தனைகள்
·         ஜெயகாந்தனில் வெளிப்படும் பாரதி மரபு
·         ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புக் கலை
·         ஜெயகாந்தனின் நாவல் கலை
·         ஜெயகாந்தனின் சிறுகதைக் கலை
·         ஜெயகாந்தனின் நடைச்சிறப்பு
·         ஜெயகாந்தனின் திரையுலகம்
·         ஜெயகாந்தனில் பழமையும் புதுமையும்
·         தொன்மவியல்நோக்கில் ஜெயகாந்தனின் படைப்புகள்
·         உளவியல் நோக்கில் ஜெயகாந்தன் படைப்புகள்
·         சமூகவியல் நோக்கில் ஜெயகாந்தன் படைப்புகள்
·         பெண்ணிய நோக்கில் ஜெயகாந்தன் படைப்புகள்
·         மானுடவியல்நோக்கில் ஜெயகாந்தன் படைப்புகள்
·         ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பு
·         ஜெயகாந்தனில் விளிம்புநிலைமாந்தர்
·         ஜெயகாந்தனில் பெண்பாற்பாத்திரங்கள்
·         ஜெயகாந்தனில் ஆண்பாற்பாத்திரங்கள்
·         ஜெயகாந்தன் படைப்புகளில் மாற்றுத் திறனாளிகள்
·         ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்புகள்
·         ஜெயகாந்தனின் படைப்புகளில் அஃறிணைப் பாத்திரங்கள்.

மதிப்பீடு

·         ஜெயகாந்தன் முன்னுரைகள் - மதிப்பீடு
·         ஜெயகாந்த ஆய்வுகள்
·         ஜெயகாந்தனின் இதழியல் பணிகள்
·         ஜெயகாந்தனின் ஆளுமைத்திறன்
·         ஜெயகாந்தன் தொகுப்புகள் - ஒரு மதிப்பீடு

ஒப்பாய்வு
·         ஜெயகாந்தனும் டால்ஸ்டாயும்
·         ஜெயகாந்தனும் தஸ்த்தயோவ்ஸ்கியும்
·         ஜெயகாந்தனும் புதுமைப்பித்தனும்
·         ஜெயகாந்தனும் தகழியும்
·         ஜெயகாந்தனும் குவெம்புவும்
·         ஜெயகாந்தனும் மாஸ்தி வேங்கடேச ஐயரும்
·         ஜெயகாந்தனும் பஷீர் அகமதுவும்
·         ஜெயகாந்தனின் முன்னோடிகள்
·         ஜெயகாந்தனின் பாத்திரங்களிடையே ஒப்பாய்வு

இன்னபிற...
·         ஜெயகாந்த மரபு
·         ஜெயகாந்தனின் வருணனைத்திறன் 
·         ஜெயகாந்தனின் தனித்துவம்
·         ஜெயகாந்தனின் மார்க்சியப் பார்வை
·         ஜெயகாந்தன் பார்வையில் காந்தியம்
·         ஜெயகாந்தன் பார்வையில் பாரதியார்
·         ஜெயகாந்தன் கவிதைகள்
·         ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பாக்கங்கள்
·         ஜெயகாந்தனின் நேர்காணல்கள்

நெறிமுறைகள்

1.    கட்டுரைகளைத் தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம். 
2.    பல்கலைக்கழகம், கல்லூரி, நிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள் | ஆய்வுமாணாக்கர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையுடன், கல்லூரி | நிறுவன முழுமுகவரி,தொலைபேசிஎண்| அஞ்சல் குறியீட்டுஎண் ஆகிய விவரங்களை இணைத்தே அனுப்பி உதவிடுக. தமிழ் ஆர்வலர்கள் |  இலக்கியச் சுவைஞர்கள் கட்டுரைகளை அனுப்பலாம். 
3.    ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளர்களின் சொந்த ஆய்வுக்கட்டுரைகளாகவே இருத்தல் வேண்டும்.  பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ,  கையாடியதாகவோ, மின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவை பிரசுரிக்கப்படமாட்டாது என்பதுடன் பதிவுக்கட்டணமும் திருப்பியளிக்கப்பட மாட்டாது.  கட்டுரைகளில் இடம்பெறும் ஆய்வுக் கருத்துக்கள் / முடிவுகளுக்குக் கட்டுரையாளரே பொறுப்பாவார். துணைநின்ற நூல்களின் விவர,  பக்க அடிக்குறிப்புகளையும் கட்டுரை அமைப்பிலேயே அடைப்புக்குறிக்குள் தருதல் வேண்டும்.  முடிந்த  அளவு  பிறமொழிக்  கலப்பற்றதாய்  இருத்தல் நல்லது. சுருக்கவோ, நீக்கவோ பதிப்பாசிரியர்களுக்கு உரிமை உண்டு.
4.    ஆய்வுக்கட்டுரைகள் A4 தாளில் இருவரி இடைவெளியுடன் ஒருங்குறி  UNICODE  எழுத்துருவில்  ஐந்து பக்கங்களுக்கு மிகாமல்  மின்னஞ்சல் வழி MICROSOFT WORD FILE வடிவில் அனுப்பவேண்டும்.  PDF வடிவிலோ கையெழுத்துப் படிகளோ ஏற்கப்பெறா. 
5.    ஆய்வுக்கட்டுரைகள் அறிஞர் குழுவின்  ஏற்பினைப் பெற்று,  ஆய்வுக்கோவையாக நூல் வடிவில் ISBN எண்ணுடன் வெளியிடப் பெறும்.
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய நிறைவு நாள் 31.08.2019
·         மற்றும் ஜெயகாந்தனின் அரசியல், ஆன்மிக, கலை, பத்திரிகை அனுபவங்கள் பற்றியும் ஆய்வாளர்கள் விரும்பிய தலைப்புகளில் கட்டுரை வழங்கலாம்!


பதிவுப் படிவம் தரவிறக்க இங்குச் சொடுக்குக
https://arunankapilan.wixsite.com/thodarum25jk/blank-2?fbclid=IwAR1RRJVWj3K8MiSazoVA_c80w3iMBJCHvho9nuhgKmmx4c2tOIekbDTpXr4

கருத்துகள் இல்லை: