வியாழன், ஜனவரி 19, 2017

மின்னூல் ஆக்கம் பற்றிய புதுகைக் கணித்தமிழ்ச்சங்கத்தின் சந்தி்ப்பு



புதுக் கோட்டை கணித்தமிழ்ச் சங்கத்தின் தொடர்நிகழ்வாக மின்னூல் வர்த்தகம், மின்னூல் ஆக்கப் பணிகள் பற்றிய சந்திப்பரங்கம் நேற்று நடைபெற்றது. மிக்க கவனத்துடன் வரவேற்புடன் செய்யப்பட்ட நல்ல நிகழ்வு.
மீளவும் நன்றிகள் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு

தயானந்த சந்திசேரன், பேர. செல்வராஜ், மீரா சுந்தர், முருகபாரதி, பேரா .நெடுஞ்செழியன், கரந்தை ஜெயக்குமார், திருமதி கீதா, கஸ்தூரிநாதன், தங்கம்மூர்த்தி, சம்பத்குமார், பாரதி  இன்னும் பலர் அரங்கில் இருந்தார்கள்.

பெங்களுர் நிறுவனமான புஸ்தக் நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் இயைந்து பல தமிழ்ப்புத்தகங்களை மின்னூலாக்கி வருகிறது. மின்னூல் காகித நூல்களை விட விலை குறைவானது. படிக்க எளிதானது. வாடகையாகவும் நூல் வாசிக்கலாம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி, உடனடியாக மதிப்பூதியம் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது என்பதெல்லாம் நன்மைகள்
ஏழு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இணையலாம் என்ற அடிப்படையில் புதிய முயற்சி தொடங்கப்பெற்றது.

அரங்கக் குளிர்தான் சற்றுஅதிகம், கோடைப் பிரதேச வாதி நான் என்பதால் அப்படியோ, குலோப்ஜாமுன், உருளைக்கிழங்கு போண்டா இவையே என் இரவு உணவை நிவர்த்தி செய்துவிட்டன.

வாழ்க தன்னலமற்ற உயர்த்தும் பணி

மீளவும் தணியாத்தாகம் கொண்ட அன்பர் முத்துநிலவனுக்குப் பாரட்டுகள்.
புஸ்தகா நிறுவனம் பற்றிய அறிய பின்வரும் இணைப்பினைச் சுட்டுக.

http://www.pustaka.co.in/

கருத்துகள் இல்லை: