வியாழன், ஜனவரி 19, 2017

புதுக்கோட்டை கணித்தமிழ்ச்சங்கத்தின் இணையப் பயிலரங்கம்


நல்லோரின் நட்பு கல்லில் எழுத்து என்ற பழைய பாடலில் படித்த நினைவு. ஆனால் நல்லோரின் நட்பு இணையத்தில் எழுத்து என்பது போல் என்றும் அழியாமல், என்றும் மாறாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.  
புதுக்கோட்டையில் ஒரு காலத்தில் தங்கிய போது தமிழ் ஆர்வலர் திருமிகு முத்துநிலவன் அவர்களின் நட்பு பெருகியது. அவர் இல்லத்திற்குச் சென்று ஓரிரு முறை அவருக்கு இணையப் பயிற்சியைச் சத்தம் போடாமல் செய்து வந்தேன். இந்த முயற்சிக்கு என்றும் கைமாறு கருதி வருகிறார் திருமிகு முத்துநிலவன் அவர்கள்.

எப்போது இணையப் பயிலரங்கம் நடத்தினாலும் புதியவர்களை என் பக்கம் திருப்புவது அவரின் வழக்கம். திண்டுக்கல் தனபாலன் போன்ற இணைய வல்லுநர்கள் இருக்கின்றபோதும் அவர் என் பக்கம் ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற வாசகம் இணையம் அறிவித்தவன் இறைவனாகிறான் என்று மாற்றிக்கொள்ளப்படலாம். 
அப்படித்தான் இந்த முறை புதுக்கோட்டை மௌண்ட் சியான் கல்லூரியில் நடைபெற்றது இணையப் பயிலரங்கம்,  பெருத்த வரவேற்புடன் நண்பர் பன்னீர் செல்வம் ( ஊக்கம் மிக்க செயலாக்கம் மிக்க தமிழ் ஆர்வலர், கணிதத்துறை ஆசிரியர்) அவர்களின் ஒத்துழைப்புடன் கனத்த மதிய உணவுடன் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை கணித்தமிழ்ச்சங்கம் மிக்க சிறப்புடன் இதனை வடிவமைத்திருந்தது.

எப்போதும் போல் எனக்குப் பல வேலைகளுக்கு இடையில் சில மணிநேரங்கள் அறிமுகம் செய்து வைத்தேன். என் பொறுப்பில் இருந்த அனைவரும் அன்றே வலைப்பூவைத் தொடங்கி என் மனதிற்குப் பால் வார்த்தார்கள்.  உண்மைதானே.

இதன்பின் திண்டுக்கல் தனபாலன் இந்தக் குழுவை வடிவழகுக்குழுவாக மாற்றியிருப்பார். 

இம்முறை அறிமுகக்குழுவினர், மேம்பட்ட குழுவினர் என இருவகையாகப் பிரித்து கணித்தமிழ்ச்சங்கம் தன் வளர்ச்சியை வலுவூட்டியது. நான் அறிமுகத்திலேயே நின்றுவிட்டேன். 

இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது என் செயல்வேகம் எனக்குத் தெரிகிறது. புகைப்படம் எடுத்த கலைஞருக்கு என் நன்றிகள் அனைவரும் என்னை என் செயல்பாட்டைக் கவனிக்கிறார்கள் இதைவிட வேறு என்ன வேண்டும். 
இப்பொழுதில் நண்பர் கில்லர்ஜி அவர்களையும் தஞ்சை ஐம்புலிங்கம் அவர்களையும் சந்தித்தேன். 

தொடர்வோம். 
கருத்துரையிடுக