ஞாயிறு, நவம்பர் 13, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ;நவம்பர் மாதக் கூட்டம் 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ;நவம்பர் மாதக் கூட்டம் வெகு சிறப்புடன் இன்று நடைபெற்றது. கோட்டையூர் கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள் எழுதிய எம்.எஸ். பிள்ளைத்தமிழ் நூலை இசைவாணர் நித்யஸ்ரீ மகாதேவன் வெளியிட புதுக்கோட்டை பாரதி பாபு அவர்கள் பெற்றுக்கொண்டு பிள்ளைத்தமிழ் நூலை அறிமுகம் செய்தார்கள். வெளியிட்டு நித்ய ஸ்ரீ அவர்கள் சிறப்பானதொரு இசையுரையை வழங்கினார். வள்ளி முத்தையா அவர்கள் எழுதிய காப்புப் பாடலில் n;தாடங்கி எம்எஸ் அவர்களின் கிருஷ்கானத்துடன் நிறைவுசெய்தார்கள். எப்படிப் பாடினரோ என்ற த

























லைப்பில் திருச்சி விஜயசுந்தரி அவர்கள் எம்.எஸ் பற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக செல்வி கவிதா அவர்கள் எம்.எஸ். நினைவாக அவர்தம் பாடல்களைப் பாடினார். சிகப்பி இல்லத்தின் மூத்த வளங்களுள் ஒருவரான சிறுகூடல் பட்டி முத்தாத்தாள் ஆச்சி அவர்கள் கந்தனைப் பாராட்டிப் பாடல்கள் பாடினார்கள். மிகஅதிகமான அளவில் இன்றைக்கு காரைக்குடி பெருமக்கள் வருகைதந்திருந்தனர். கார்கள் நிற்க இடமில்லாமல் வெளிpயிடங்களில் நிறுத்தப்பெற்றன. எம்எஸ் பிள்ளைத்தமிழ் இருபது ரூபாய் விலையில் கிடைக்கிறது. இப்புகைப்படங்களில் சில முக்கியமான நிகழ்வுகளைப் படம்பிடித்துள்ளேன் காரைக்குடி அழகப்பா பல்கலைகயின் முன்னைப் பதிவாளர் மாணிக்கவாசகம் அவர்களை பதிவரங்க முகப்பில் கம்பன் கழகப் பதிவேட்டில் பதிவு செய்ய வைத்துள்ளோம். பதிவாளரையே பதிய வைக்கச் செய்த பெருமை எங்களைச்சாரும்.
காசிஸ்ரீ அருசோ அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்தார். அன்னாரின் நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு வருகைதந்ததுமிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இராம இராமநாதன் அவர்களும் வருகைதந்திருந்தார். ஊட்டி கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் மாணிக்கவாசகம், அழகப்பா கல்லூரி மு;ன்னைப் பேராசிரியர் கதி கணேசன் , அழகப்பா பல்ககைலயின் பாலசுப்பிரமணியம், செந்தமிழ்ப்பாவை ஆகியோரின் வருகையும் குறிக்கத்தக்கது,

கருத்துகள் இல்லை: