75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன்
கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு
மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள்,
அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு
நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்-
மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம்
தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என
சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் ( அஞ்சல்
குறியீட்டு எண், தொலைபேசி எண், உள்ளடக்கிய தங்கள் முழு முகவரியுடன்)
20.07.2013 ஆம் தேதிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தந்துதவ மிகப் பணிவுடன்
வேண்டுகின்றோம். கூட்டத்திற்கு வர இயலாதவர்களும் வெளியூர் அன்பர்களும்
அஞ்சலில் அனுப்பிஉதவிடுக. இவை தொகுக்கப் பெற்று 3.8.2013 அன்று 7-9-2013
அன்று நடைபெறும் மாதக்கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகக் கூட்டப்
பெறும். அஞ்ஞான்று விரும்பும்தமிழ் ஆர்வலர்கள் எவரும் பங்கேற்று உரையாடி
பைந்தமிழ்ப் பணியில்பங்கேற்க அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக