நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா
கரூர் நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர். சேக்கப்ப செட்டியார் தலைமை விருந்தினராய் கலந்து கொண்டார். காலையில் நடைபெற்ற துவக்க விழாவில் கரூர் நகரத்தார் சங்க தலைவர் பழ. பழனியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வள்ளியப்பன், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். சிறப்பு விருந்தினராக கர்நாடக நகத்தார் சங்க துணைத் தலைவர் ரவி வீரப்பன், திருச்சி நகரத்தார் சங்க திருநாவுக்கரசு செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நகரத்தார் நேற்று – இன்று – நாளை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாட்சிமைமிகு மன்னர் கல்லுாாி தமிழ்ப்பேராசிாியர் முனைவர் மு. பழனியப்பன் பேசினார். நகரத்தார் மலர் இளங்கோவன், ஆச்சி வந்தாச்சு நா. பழனியப்பன், புச்சரம் பழ. மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அகல்யா மெய்யப்பன் நன்றி தொிவித்தார். மாலையில் திரைப்பாடல்கள் சமுதாயத்திற்கு வழி காட்டுகிறதா? வழி மாற்றுகிறதா? என்ற தலைப்பில் திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் பாரதி பாபு நடுவராக பங்கு கொண்ட மகளிர் பாட்டு பட்டி மன்றமும் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக