திங்கள், ஆகஸ்ட் 29, 2011
திருவண்ணாமலையில் மாற்றுத்திரை நிகழ்வு
திருவண்ணாமலையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில நிகழ்வாக மாற்றுத்திரை என்ற ஆவண, குறும்பட விழா நடைபெற்றது. அதில் ஆதி முதல் அந்தம் வரை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இரு நாள்களும் நல்ல ஏற்பாட்டுடன் நேரம் போனதே தெரியாமல் உடனுக்குடன் காட்சிகள் மாறின. அரங்கேறின.வாழ்த்துக்கள் அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு
விழாவில் தோழர் மகேந்திரன் அவர்களின் பேச்சும், தோழர் நல்லக் கண்ணு அவர்களின் பேச்சும் வந்திருந்தோரை இந்நிகழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வைத்தன. மாற்றுத்திரை என்பது மாற்றரசியலின் ஒருகூறு என்ற அவரின் செய்தி குறிக்கத்தக்கது.
மேலும் திரையிடல்கள் மிக்க தெளிவுடன் தேர்வு செய்யப் பெற்றிருந்தன. அன்பு, மற்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி
அதிக கவனத்தை ஈர்த்தபடம் முல்லைத்தீவு சகா. இயக்குநர் சோமீதரன். அவரின் படம் பேசிய பிறகு அவர் பேசினார். அதில் பல தகவல்கள் நெஞ்சை உருக்கின. இந்தப்படத்தைப் பார்த்த இடைவெளியில் ஒரு பெண் அடுத்தநாள் மற்றொருவரிடம் இப்படிச் சொன்னார். அந்தப் படம் என்னை அழவைத்துவிட்டது என்று
மற்றபடி என்பெயர் பாலாறு, பச்சை ரத்தம், தெருவில் இறங்கும் குதிரைகள் போன்ற நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டன என்றாலும் தேவையான தளங்கள்
மக்கப் மங்காத்தா, இரங்கலும் இரங்கல் நிமித்தமும் முதலான எளிமையான படங்களும் மனத்தை ஈர்த்தன.
செங்குருதி என்ற படம் பல விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அந்தப் படம் சரியான அளவில் புரிந்து கொள்ளப்பட வில்லை
நண்பர் முரளி இயக்கிய தேசிய விருது பெற்ற படத்தின் காட்சி யமைப்புகள் தேர்ந்த கலைஞர்களால் அது உருவாக்கப் பெற்றது என்பதை மெய்ப்பித்தது. பரவாயில்லை நல்ல படங்களுக்குத் தான் இந்தியாவில் விருதளிக்கிறார்கள்.
இருளர் பற்றிய குட்டி ரேவதி தயாரித்த படத்தின் இசையும், அதனுடன் கூடிய நடனமும் இன்னமும் ஒலிக்கின்றன.
நல்ல கல்லூரி, நல்ல நிகழ்வு
புதிய பாதைக்குச் செல்கிறது மாற்றுத்திரை
உட்தலைப்புகள்
மாற்றுத்திரை திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக