



நகரத்தார்கள் காசியில் மடம் வைத்து ஆன்மீகத் தொண்டினை ஆற்றி வருபவர்கள். அப்பணியில் ஒரு மணி மகுடமாகத் தற்பொழுது தங்க விசுவநாதர் உருவம் ஒன்றை உருவாக்கி அதனைக் காசிக்கு அனுப்ப உள்ளனர். தங்க அன்னப் பூரணி போல இனி தங்க விசுவநாதரையும் தீபாவளியின்பொழுது தரிசிக்க முடியும். இவ்விசுவநாதரை நகரத்தார் ஊர்களுக்கு எடுத்துச் சென்று அந்த ஊரில் உள்ள நகரச் சிவ ஆலயத்தில் பார்வைக்கு வைத்துத் தொட்டு தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 22 திங்களன்று அரிமளத்திற்கு இந்த ஊர்வலம் வந்தது. வண்ணக் குடை பிடிக்க ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட விசுவநாதருக்கும், அரிமளம் சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கு ஒரே நேரத்தில் தீப ஆராதனை காட்டப் பெற்று ஒன்றரை மணிநேரத்திற்கு அரிமளத்தில் பார்வைக்கு வைக்கப் பெற்றிருந்தது. மக்கள் தொட்டும் தொடர்ந்தும் காசி நாதரை வழிபட்டனர். நகரச் சிவன்கோயில்களின் மதிப்பு இதன் வழி கூடியுள்ளது. அனைத்து நகரத்தார்களும் வந்து ஒரு திருவிழாவாக இதனை நடத்தி வருகின்றனர். நாளை புதுவயலில் இந்த வேள்வி முடிகிறது. வண்ணப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக