





புதுக்கோட்டை லட்சுமி நகரில் அமைந்திருக்கும் ராஜாத்தி அம்மன் கோவிலில் மிகச் சிறப்பாக திருவிளக்கு பூசை சென்ற வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.அன்பர்களும், நண்பர்களும் தந்த நிதி உதவியைக் கொண்டு ஏறக்குறைய எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்
அக்கம்மா கோயில் என்றும் ராஜாத்தி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படு்ம் இக்கோயில் உருவானது ஒரு குறிக்கத்தக்க நிகழ்வாகும். புதுக்கோட்டை மகராசாவிடம் படைப்பயிற்சி கருதி ராஜீக்கள் வம்சத்தினர் வந்துள்ளனர். இவர்களில் ஒரு குறிக்கத்தக்கவர் இறந்து போகின்றார். இதன் காரணமாக அவருக்கான ஈமக்கிரியைகள் நடைபெற்று வந்தன. அந்த நேரத்தில் அக்கம்மா என்ற அவரின் மனைவியாரும் தானும் இறந்த கணவருடன் ஒருங்கே சென்றுவிடுவதாக கூறினார்
இதையறிந்த ராஜா அக்கம்மாவிடம் பல முறை முறையிட்டு உயிர் வாழ வேண்டினார். இருப்பினும் தன் முடிவில் விட்டுக் கொடுக்காத அக்கம்மா உடன் கட்டை ஏறிட முன்வந்தார். ஊரின் ஒதுக்கமான இடத்தில் சிதை மூட்டப்பட்டது. அக்கம்மாவும் உடன் கட்டை ஏறினார். அவரின் நினைவாகத் தற்போது சிறு ஆலயம் எழுப்பப்பட்டடுள்ளது அங்கு அனுமார், பிள்ளையார் முருகன், துர்க்கை போன்ற தெய்வங்களும் கோயில் கொண்டுள்ளன. இதனுடன் அக்கம்மாவும், அவரின் கணவரும் தெய்வங்களாக வணங்கப் பெற்று வருகின்றனர்.
தற்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடம் பிளாட்டுகளாகி வீடுகளாகி காவல்தெய்வமாக அக்கம்மாவும் அவர் கணவரு்ம் வணங்கப் பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக