புதன், செப்டம்பர் 20, 2006

விடுதலை

யாருக்காகவும்
பணிந்து போகத் தேவையில்லை

பதவிப்பிரியர்கள்
பதவியைப்
பெரிதாக மதிக்கிறார்கள்
பதவி முடிந்த அடுத்தநாளில்
யாரும் என்னைக் கவனிக்கவில்லை
என்று தேம்பி அழுகிறார்கள்

பணப்பிரியர்கள்
பணத்தைப் பெரிதாக
மதிக்கிறார்கள்
நாளைக்கே பணம்
வற்றிப்போனால்
கையேந்தக் கூட ஆளில்லாமல் போகலாம்

சுயப்பிரியர்கள்
தன்னைப் பெரிதாக
மதிக்கிறார்கள்
தன் காற்று
மாற்றி வீசினால்
சுயம் காணாமல் போகலாம்

எது எப்படியானாலும்
பதவிக்காகவோ
பணத்திற்காகவோ
சுயத்திற்காகவோ
மற்றவர்கள்
பணிந்து போகவேண்டும்
என்று எண்ணுவதில்தான்
சிக்கல் இருக்கிறது.

யாருக்காகவும்
எதற்காகவும்
பணிந்து போகாதவர்கள்
யாரையும் பணிந்துபோகக்
கட்டாயப் படுத்த மாட்டார்கள்

கருத்துகள் இல்லை: