ஞாயிறு, செப்டம்பர் 17, 2006

விடியும் பொழுது

ஒருநாள் போல்
ஒருநாள் இருப்பதில்லை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி

இருட்டின் முகட்டில்
வெள்ளிக் கம்பி வானம்
இருள்பாதி ஒளிபாதி

மெல்லப்பரவும் ஒளிக் கீற்று
உடன் மேலெழும் வெளிச்சப் பந்து
இப்படி
நாளுக்குநாள்மாறும் நேர விளையாட்டு

கண்களின் பதிவில்
நிற்கமறுக்கும்
பகல், காலை, இரவு
ஒவ்வொரு பொழுதுக்கும்
ஒவ்வொரு முகம்

ஒவ்வொரு நாளுக்கும்
ஒரு நொடிக்கு ஒருநொடிவித்தியாசம்

மரணம் பிறப்பு
எல்லாம் ஒரு கண நேர நிகழ்ச்சிதான்

அடுத்த பொழுது உறக்கமாக இருக்கலாம்
என்வசதி அப்படிஅடுத்தவர் வசதி
எனக்கு மாறாய் இருக்கலாம்

அடுத்தது என்ன என்பதின்
கேள்வியிலேயே உலகம் சுழலும்
கருத்துரையிடுக