சனி, ஆகஸ்ட் 05, 2006

மாயக்கண்ணாடி அல்லது இணையம்


அது ஒரு மந்திரவாதியின் மாளிகை... நுழைந்தால் கல்லால் செய்யப்பட்ட கிளி பேசுகிறது; ‘’ நீங்கள் சரியான இடத்திற்கு வரவில்லை’’ என்று... கிளி¢யின் இந்தக் கீச்சுக்குரல் பயமூட்டுகிறது. அப்படியும் உள்ளே நுழைகிறோம்.
பாம்புத் தோரணங்கள், நெருப்பை வெளியிடும் கண்போன பொம்மை முகங்கள், நிறம் மாறும் வெந்நீர்¢ ஓடைகள் அப்பப்பா சொல்லமுடியவில்லை அவ்வளவு விநோதமான சூழல்.... இருந்தாலும் மாளிகையின் ஒருபுறத்தில் உள்ள அந்த மாயக்கண்ணாடி ‘’வா’’ ,‘’வா’’ என்று கை நீட்டி அழைக்கிறது. அந்த அழைப்பை பயத்தோடு ஏற்றுக் கொண்டு உள்ளே செல்ல மனம் வருகிறது. அந்த மாயக் கண்ணாடி பேசுகிறது.
‘’ நீங்கள் யார்? இங்கு ஏன் வந்தீர்கள்’’‘’ மாயக் கண்ணாடியான உன் சிறப்பை அறிந்து கொள்ள வந்தோம்’’‘’சரி’’... ‘’ என் சிறப்பை அறிந்து கொள்ள என்னை சோதனை செய்து பாருங்கள்’’பயத்தோடு முதல்கேள்வியைக் கேட்கிறோம். ‘’எப்போது வருவார் உங்கள் மந்திரவாதி’’‘’அவர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகலாம்... அவர் காளி கோயிலுக்குப் போய் உள்ளார்... அதுவரை என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’‘’ஒருமணி நேரப் பயன்பாட்டிற்கு எவ்வளவு தரவேண்டும்’‘‘’ஒரே ஒரு தங்கக் காசு’’ வாய் திறக்கிறது மந்திரக்கண்ணாடிதங்கக் காசை இட்டபின் கண்ணாடி வேக வேகமாகச் சுழல்கிறது. நமக்கு தலை சுற்றுகிறது. சுற்றி நின்றபின் அது மீண்டும் கேள்வியைத் தொடர்கிறது. ‘’நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன-’’மிகவும் யோசித்து ‘’ அது வந்து. .... உலகில் எத்தனை... பெருங்கடல்கள் உள்ளன’’ வேறு ஏதாவது கேட்டிருக்கலாமோ?‘’உலகில் ஆர்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய நான்கு பெருங்கடல்கள் உள்ளன’’ ‘’ஆ... எப்படி இவ்வளவு செய்திகளை உடனே உன்னால் சொல்ல முடிகிறது’‘ ‘’இன்னும் நீங்கள் என்ன செய்திகள் கேட்டாலும் என்னால் தர முடியும் ’’ என்றது அந்த மாயக்¢ கண்ணாடி.
இந்தக் கற்பனை இன்று நிறைவேறிவிட்டதா? என்ற கேள்வியோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். அதற்கான பதில் ‘’ ஆம் ... நிறைவேறிவிட்டது. கணினியால் இணையத்தால் இந்தக் கற்பனை உண்மையாகிவிட்டது ’’ என்பதுதான்.
கணினியின் தி¢¢ரையும் மாயக் கண்ணாடி போல ஒரு வகைக் கண்ணாடியால் ஆனதுதான். இந்த கண்ணாடித்திரையில் வேண்டிய தகவல்களை மந்திரவாதியின் மாயக்கண்ணாடியில் பெற்றதைப்போலப் பெறமுடியும்.
கேள்விகளுக்கான பதில்கள், தேவையான படங்கள், தேவையான பாடல்கள், தேவையான மொழிகளைக் கற்றல், தேவையான செய்திகளைப் பெறுதல் என்ற எதனையும் கணினி அதனோடு இணைந்த இணையத் தொடர்பால் நீங்கள் பெறமுடியும். இதற்குத் தங்கக்காசு தேவையில்லை. கொஞ்சம் பணத்தாள்கள் செலவு செய்தால் போதும். ஒரு கணினி அதனோடு ஒரு தொலைபேசி இணைப்பு, இணையஇணைப்பு இவை இருந்தால் அழகான உங்கள் வீட்டிலேயே மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்துவிடலாம். இதுவரையில் உங்களுக்குச் சொன்ன சில செய்திகளை விரித்து இனிக் காண்போம்.
கணினி கணினி என்பது ஒரு இயந்திரம். இது இயங்குவதற்குச் சில கட்டளைகள் தேவை. அந்தக் கட்டளைகளின் அடிப்படையில் இது உள்ளீடு செய்யப்படும் செய்திகளை ஏற்றுத் தேவையான வடிவத்தில்¢ தேவையானவற்றைக் கணினி தரும்.
அதாவது கணக்கீடு செய்யும் பொறியை ( Calculator) நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள எண் பொத்தான்களைச் சுட்டி எண்களை நாம் உள்ளீடு செய்கிறோம். அதன்பின் அந்த எண்களை என்ன செய்யவேண்டும் என்று - அந்த பொறிக்கு கட்டளையைப் பொத்தான் மூலம் தருகிறோம். இதனைப் புரிந்து கொண்ட அந்தப்பொறி அதற்கேற்ற விடையைத் தருகிறது. இதுபோலத்தான் கணினியும் செயல்படுகிறது.
எண் பொத்தான்கள், எழுத்துப்பொத்தான்கள், இன்னும் சில பொத்தான்கள் கணினியில் உண்டு. அந்தப் பொத்தான்கள் அடங்கிய பலகையை விசைப்பலகை எனலாம். அதன் மூலம் செய்திகளைக் கணினியில் உள்ளீடு செய்யவேண்டும். இதுபோல உள்ளீடு செய்ய பல ஏற்பாடுகள் உண்டு. படத்தைப் படி எடுக்கும் கருவி( Scanner), படப்பதிவுக் கருவி ( Vidoe camera) குறு வட்டு ( Compact Disc), குறுந்தகடு ( Floppy) இவை போன்றனவும் இவ்வகையில் அடங்கும்.
இந்தவகையில் உள்ளீடு செய்யப்படும் செய்திகளைக் கணினி தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும். அவ்வாறு சேமித்து வைத்துக்கொள்ள அதற்குள் ஓர் அமைப்பு உண்டு. அந்த அமைப்பிற்குப் பெயர் மையச் செயலகம் ( Central Processing Unit) ( சுருக்கமாக CPU) என்பதாகும். இது பல அமைப்புகள் சேர்ந்த ஒரு பெரிய அமைப்பு ஆகும். இதனுள் மிக நுண்ணிய சிப்ஸ் எனப்படும் தகவவ் சேமிப்பு அமைப்பு, நுண்ணியத் தொடர்¢பு இணைப்புகள், செயல்படு அமைப்பு ( Processor), ராண்டம் அஸஸ் மெமரி என்ற ( RAM ) என்ற தற்காலிக சேமிப்பு அமைப்பு போன்ற பல உள் அமைப்புகளும் ; குறுந்தகடு, குறுவட்டு ஆகியவற்றை இயக்கும் அமைப்புகளும் கொண்ட ஒரு கூட்டு அமைப்பு மையச்செயலகம் ஆகும். இங்குதான் செய்திகள் சேமிக்கப்படுகின்றன. செயல்பாடு நிறைவேற்றப்படுகின்றன.
இதற்கு அடுத்த நிலையில் கணினி வெளியீட்டுக் கருவிகள் செய்திகளை நமக்கு அளிக்கின்றன. அவற்றுள்ள குறிப்பிடத்தக்கவை கணினித்திரை, அச்சு இயந்¢திரங்கள் முதலானவை. கணினித்திரை வழியாகத் தேவையான செய்திகளை நம்மால் பார்¢க்க முடிகிறது. அச்சு இயந்திரங்கள் வழியாக தேவையானவற்றை அச்சாக்கிப் பிறருக்கு அளிக்கமுடிகிறது.
இந்த மூன்று முக்கிய அமைப்புகளைக் கணினி பெற்றிருக்கிறது.
கணினி மொழி கணினியில் செய்திகளைப் பெறுவதற்கும், உள்ளீடுசெய்வதற்கும் சில கட்டளைகள் தேவை என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா... அந்தக் கட்டளைகளைக் கணினிக்குத் தெரிந்த மொழியில் எழுதவேண்டும். அந்த மொழி கணினி மொழி எனப்படுகிறது.
உலகில் பல மொழிகள் பேசப்படுவது போல கணினி மொழியிலும் பல வகைகள் உண்டு. இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உயர் கணினி மொழி. மற்றொன்று தாழ்வு கணினி மொழி. உயர் கணினி மொழி என்பது பயன்படுத்துபவருக்கு எளிதானதாக குறைவான கட்டளைகள் கொண்டதாக இருக்கும். தாழ்வு கணினி மொழி இதற்கு நேர்மாறானது. இந்த மொழிகளைப் பயன்படுத்த தனித்த கல்வி தேவை.
கணினி மொழி என்பது பெரும்பாலும் கட்டளைகளாக இருக்கும். இந்தக் கட்டளைகளை இரண்டு அலகுகளாக ஏற்று கணினி புரிந்து கொள்கிறது. அந்த அடிப்படை இரண்டு அலகுகள் 0,1 என்ற இரண்டு மட்டுமே ஆகும். எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த எண் சார்ந்த ஒருங்கிணைப்புகளே கணினியை இயங்க வைக்கின்றன. 0,1 என்ற எண்கள் நமக்கு எளிமையானவை போலவே கணினிக்கும் இந்த அலகுகள் எளிமையானவை.
கணினி மொழி தெரியாவதவர்கள் என்ன செய்யலாம். . . கணினியை அவர்கள் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி இப்போது நமக்கு எழுகிறது. கணினியை இயக்க கணினி மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இருந்தாலும் அது தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஓர் அமைப்பு உண்டு. அதற்குப் பெயர் மென்பொருள் என்பதாகும். இந்த மென்பொருள் என்பது பயன்படுத்துபவரின் மொழியில் அல்லது குறியீட்டில் அமைந்து இருக்கும். இதனால் பயன்படுத்துபவர் அதனை எளிதாகப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு கணினி என்பதற்கு ஓர் அறிமுகம் தரலாம். இவை அறிமுகச் செய்திகள் மட்டுமே. இன்னும் இவை விரிக்க விரிக்க விரிந்து கொண்டே போகும். . .
இந்த ஒரு கணினியை உலகில் உள்ள எல்லா கணினிகளுடன் இணைத்தால் எப்படி இருக்கும். ஒரு கணினிணில் உள்ள செய்திகளை பிறர் தேவையானவற்றைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு இருந்தால் நேரம், பொருள் ஆகியன சேமிக்கப்படும்¢ அல்லவா.... இந்த அளவில் சிந்தனை வந்தபோது கணினி வலைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கட்டடத்திற்குள் உள்ள கணினிகளை ஒரே இணைப்பாக்குவது, ஒருநாட்டில் உள்ள கணினிகளை ஒரே இணைப்பாக்குவது, உலகில் உள்ள கணினிகளை ஒரே இணைப்பாக்குவது என இந்தச் சிந்தனை வளர்ச்சி பெற்றது. இதுவே இணையம் எனப்படுகிறது. உலகக் கணினிகளை ஒரு இணைப்பால் இணைத்துச் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதால் இதனை இணையம் என்கிறோம்.
இணையம் தற்காலத்தில் தொலைபேசி வழியாக உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதரோடும் தொடர்பு கொள்ள முடியும் அல்லவா... அதுபோல தொலைபேசி இணைப்பின் வழி பெறப்படும் இணையத் தொடர்பால் உலகின் எந்த மூலையில் இருக்கும் கணினியோடும் தொடர்¢பு கொள்ளமுடியும். அப்படித் தொடர்¢பு கொண்டு வேண்டிய செய்திகளைப் பெறுவது, வேண்டிய செய்திகளை அனுப்புவது முதலான பல செயல்களை நாம் நி¬வேற்றிக் கொள்ளமுடியும்.
இந்த இணையத் தொடர்பிற்குக் கணினி பல வசதிகளைக் கொண்டுள்ளது. அதாவது இணையதளம் என்ற அமைப்பின் வழியாக நாம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இந்த இணையதளம் என்பது ஒரு முகவரியை உடையது. எடுத்துக்காட்டிற்கு http://www. yahoo.com என்பது ஒரு முகவரி. இந்த முகவரியை இணைய வழிப்பட்ட கணினியில் இட்டால் உடன் அந்த இணைய தளம் நம் பார்வைக்குக் கணினித் திரையில் தோன்றும்.
இந்த முகவரியைப் பற்றிச் சற்று சிந்திப்போம். நம் ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஒரு முகவரி உண்டு. அதில் நம் பெயர், தெருவின் பெயர், ஊரின் பெயர் , அஞ்சல் குறியீட்டு எண் முதலான செய்திகள் இருக்கும். இந்த முகவரியைக் கொண்டே நம்மிடம் கொண்டு வந்து கடிதங்களை அஞ்சல்காரர் தருகிறார். அந்தக் கடிதத்தைப் பெற்ற நாம் பின்னர் அந்தக் கடிதம் தந்த தகவல்களைப் படித்துக்கொள்கிறோம். அது போலவே கணினியில் வேண்டிய செய்திகளைப் பெற இந்த இணைய தள முகவரி உதவுகின்றது.
http://www. yahoo.com என்ற இந்தக் குறிப்பிட்ட முகவரியில் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன. அவை 1. http 2. www 3. yahoo 4. com என்பன ஆகும். இவை பற்றிய விளக்கம் பின்வருமாறு1. http ; என்பது Hyper Text Transport Protocol என்பதன் சுருக்கமாகும்.2. www; என்பது World Wide Web என்பதன் சுருக்கமாகும்.3. yahoo; என்பது குறிப்பிட்ட ஒரு இணையதளத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெயராகும்.4. com; என்பது இணையதளத்தின் தன்மையைக் குறிப்பதாகும். com என்பது Commerce என்ற அடிப்படையில் வணிகத் தொடர்புடையது என்பதைக் குறிக்கும்.இதுபோல EDU, GOV, NET, MIL, ORG என்ற பல தன்மைகள் உள்ளன. இவை முறையே கல்வி, அரசாங்கம், வலை பராமரிப்பு , இராணுவம், அரசு சாரா நிறுவனம் என்பனவற்றைக் குறிப்பதாகும்.
இவ்வாறு தேவையான முகவரிக்குச் சென்று நம்மால் தேவையான செய்திகளைப் பெறமுடியும்.இந்த இணையதளங்களை உருவாக்கவும், நிர்வகிக்கவும் உலக அளவில் தனியார் நிறுவனங்கள் தற்போது வந்துவிட்டன. அவர்களுக்கு உரிய தொகையைச் செலுத்திவிட்டால் அவர்கள் நமது இணையதளங்களை நமக்கு ஏற்ற அளவில் நிர்வகித்துத் தருவார்கள்.
இணையம் வழியாக அஞ்சல்களைப் பரிமாறிக் கொள்ளமுடியும். நேரடியாக முகம் பார்த்துப் பேசிக் கொள்ள முடியும். இந்த வசதிகளும் இணையத்தில் உண்டு.
மின்னஞ்சல் (E- Mail)மின்னஞ்சல் என்பது நண்பர்களுக்குள், நிறுவனங்களுக்குள் கடிதங்களை அனுப்பிக் கொள்ள உதவி செய்கின்றது. சாதாரண அஞ்சல்களைப் போல இதிலும் அனுப்பவரது முகவரி, பெறுபவரது முகவரி, செய்திப் பகுதி முதலானவை உண்டு என்றாலும் இது மின்னூட்டம் வழியாக நிகழ்வதால் இதனை மின்னஞ்சல்¢ என்று அழைக்கிறோம்.
இந்த அஞ்சலுக்கான முகவரிகள் சென்ற பகுதியில் பார்த்தது போலவே கணினி அறியத்ததக்க வகையில் அமைந்திருக்கும். ********@yahoo.com என்ற அமைப்பை உடையது மின்னஞ்சல்¢ முகவரி. இதில் முதலாவதாக நட்சத்திரக் குறி இட்டபகுதி பயன்படுத்துபவரின் பெயரைக் கொண்டதாக இருக்கும். அடுத்து @ என்பது அனைத்து மி¢ன்னஞ்சல் முகவரிகளிலும்¢ இடம் பெறும் குறியீடு ஆகும். அதன் பின்னுள்ளவை முன்னரே விளக்கம் பெற்றவை.
இவ்வகையில் அமைந்த அனுப்புவர் பெறுவகர் முகவரிகள் மின்னஞ்சலுக்கு ஏற்றவை. மின்னஞ்சல் வழியாகச் செய்திகள் மட்டும் இல்லாது படங்கள், கணினிக் கோப்புகள் முதலானவற்றை அனுப்ப இயலும். அவற்றை அச்சாக்கிக் கொள்ளவும் முடியும். மேலும் அஞ்சல்களுக்குப் பதிலும் எழுத இயலும். இந்தச் சேவையைச் சில நிறுவனங்கள் பணப்பயன் எதுவும் இன்றிச் செய்து வருகின்றன. சில பணப்பயன் கருதி செய்கின்றன.
இந்த மின்னஞ்சல் முகவரியை ஒருவர் பெற்றபின் அவர் மின்னஞ்சல்¢ பயன்பாட்டாளராக ஆகின்றார். இந்த மின்னஞ்சல் முகவரியைப் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றவேண்டும்.

நேரடி அளவளாவுதல் (Chatting) இணைய வழியாக உலகின் ஒரு மூலையில் உள்ள ஒருவர் மற்றொரு மூளையில் உள்ள ஒருவரோடு முகம் பார்த்து அளவளாவ முடியும். அல்லது வரிக்கு வரி தட்டச்சு செய்து அவருடன் வரிக்கு வரி செய்திகளைப் பெறமுடியும். இதற்கும் சில நிறுவனங்கள் பணப்பயனற்ற சேவையை நல்கி வருகின்றன.
இதன்மூலம் தற்போது வெளிநாடுகளில்¢ உள்ள குடும்ப உறுப்பினர்கள் உரையாடமுடிகிறது. அவர்கள் நம் வீட்டிலேயே இருப்பது போன்ற உணர்வைப் பெறமுடிகிறது. பல இணைய நண்பர்களைப் பெறமுடிகிறது. அவர்களுடன் இந்த நிமிட உலக நடப்பை விவாதிக்க முடிகிறது.
இணையமும் தமிழும் இணைய அளவில் தற்போது பல மொழிகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. ஆங்கிலம் என்ற ஒரு மொழி ஆதிக்கம் தற்போது மேம்பட்டு விட்டது. தமிழ் இந்நிலையில் இணையத்தில் இடம் பெற்று விட்டது. தமிழில் மின்னஞ்சல்களை அனுப்ப வசதிகள் வந்துவிட்டன. உலகத் தமிழரகள் ஒரே எழுத்துருவில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வசதி வந்துவிட்டது. தமிழ்ச் செய்திகளைப்பெற, தமிழ்ப்புத்தகங்களைப் பெற வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்புகளில்¢ நாமும் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு இந்தச் சிறுகட்டுரை கணினி குறித்தும் இணையம் குறித்தும் எளிய அறிமுகச் செய்திகளைத் தந்துள்ளது. இவற்றைப் பற்றி மேலும் மேலும் நாளுக்கு நாள் அறிந்து கொள்ள இயலும்.
இதோ மாயக் கண்ணாடி மறுபடியும் பேசத் தொடங்குகிறது. ‘’நண்பரே... உங்கள் நேரம் முடிந்து விட்டது. ஒரே ஒரு தங்கக் காசிற்குத் தாங்கள் ஒரு கேள்விதான் கேட்டுள்ளீர்கள்... அது மிகக் குறைவானதே... இன்னும் பல கேள்விகளைக் கேட்டு நீங்கள் பயன் பெற்றிருக்கலாம். பரவாயில்லை. இதோ என் தலைவர் மந்திரவாதி வரும் நேரம் வந்துவிட்டது. தாங்கள் இப்போது விடை பெற்றாக வேண்டும். இல்லை என்றால் தாங்கள் பல விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’
இந்த எச்சரிக்கையை ஏற்று நாம் வெளியேறுகிறோம். பாம்புத் தோரணங்கள், நெருப்பை வெளியிடும் கண்போன பொம்மை முகங்கள், நிறம் மாறும் வெந்நீர்¢ ஓடைகள் கடந்து வெளியே வருகிறோம். கல்லால் ஆன கிளி ‘’மறுபடி நீங்கள் இந்த இடத்திற்கு வரவேண்டாம் ’’ என்று கீச்சிடுகிறது. மந்திரவாதியின்¢ மாளிகை புகைகக்கி நம்மை வெளியேற்றுகிறது.கருத்துரையிடுக