புதன், மே 24, 2006

blog history

வலைப்பதிவர் பெயர்: மு, பழனியப்பன்வலைப்பூ பெயர் : மானிடள், புதுவயல் பழனியப்பன்சுட்டி:http://manidal.blogspot.com/http://puduvayalpalaniappan.blogspot.com/(எத்தனை வலைப்பூக்கள் இருஊர்:நாடு:வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தினமலர் நாளிதழில் வெளியான தமிழில் படிக்கக் கிடைக்கும் தளங்கள் வழியாகமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :Friday, January 20, 2006இது எத்தனையாவது பதிவு: குறைந்தது 50க்கு மேல் இருக்கலாம்இப்பதிவின் சுட்டிவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழாசிரியன் என்பதாலும் தமிழ்க் கணினி குறித்து ஆர்வம் உடையவன் என்பதாலும் என் தமிழ் அனுபவங்களை உலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதள்காக ஆரம்பித்தேன்சந்தித்த அனுபவங்கள்: பதிவைப் பார்த்த சிலர் நேரில் என்னைப் பார்த்து என் பதிவைச் சுட்டியமை பல நண்பர்கள் கிடைத்தமை பல செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டமைபெற்ற நண்பர்கள்: என்ஆர் (திருச்சி), இராம கி (சென்னை) முத்தமிழ் மன்றம், கற்றவை: நிறைய கணினித்துறையில் தமிழ்த்துறையை வெகு எளிதாக இணைக்க இயலும் என்பதுஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்தில் சுதந்திரம் என்பதைவிட எழுத்தை வெளியிட எவர் அனுமதியும் தேவையில்லை என்பது முக்கியமானது, ஏனென்றால் இதழ் ஆசிரியர்களை ஜஸ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவாஇனி செய்ய நினைப்பவை: புதிய ஆராய்ச்சிக் களங்களைத் தேர்ந்து எடுத்து அவற்றில் தனிக்கவனம் செலுத்தி எழுதுதல்உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:படித்தது தமிழ் இலக்கியம். அதன் கரைகளைச் சற்று உரசிப் பார்த்து அதன் வழியாக இலக்கியவாதியாக என்னை வளர்த்துக் கொண்டேன். தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டம் மயிலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பின் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பு. பின் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் தமிழ் இளங்கலை இலக்கியமும் முதுகலை இலக்கியமும் கற்றேன். அதன்பின் ஓசூருக்குப் பணிபுரியச் சென்றேன். டிவிஎஸ் அகாடமியில் சிறுகுழந்தைகளுக்குக் கல்விப் பணி ஆற்றினேன். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். சிறுகுழந்தைகளுக்கு சொல்லித் தரும் அற்புத அனுபவம். சொல்லித் தந்த அளவிற்கு நூற்றுக்கு நூறு அளவில் சிறு குழந்தைகள் கற்றுக் கொள்ளும். அதுபோதே கல்வியியல் இளங்கலையை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வியிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்திலும் கற்றேன். அடுத்து பாண்டிச்சேரி பல்கலையில் ஆய்வுத்திட்டம்ஒன்றில் பணியாற்றிக் கொண்டே முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தேன். 1998 வாக்கில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியில் இணைந்தேன். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன், இடையில் முனைவர் பட்டத்தை முடித்தேன். 2004 வாக்கில் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் உதவி இயக்குநராகப் பணியில் இணைந்தேன். இது நேற்றைய கதை. நாளைய கதை நடக்கும்
கருத்துரையிடுக